சென்ற பதிவில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் Prism Project-ஐ பற்றி ஒரு வரியில் பார்த்தோம். ப்ரிசம் எப்படி ஒளியின் மூலத்தை ஏழு பகுதிகளாக பிரித்து காட்டுகிறதோ, அது போல ஒரு தனி மனிதனின் பலதரப்பட்ட தகவல்களை பிரித்துக் காட்டி(கொடுப்பது)யபடி இருப்பதே இதன் நோக்கம்.உங்களின் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கும் இது கிட்டத்தட்ட ஒரு மறைந்திருக்கும் உளவாளி போன்றது.
|
பிரிசம் அலுவலகம் | |
இந்த பிரம்மாண்ட கட்டிடம் தான் ப்ரிசம் அலுவலகம் செயல்படும் இடம். உலகத்தின் மூலை முடுக்கில் இருக்கும் தகவல்கள் இங்கு தான் சேகரிக்கப்படுகின்றன.பல நூறு தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் மாதத்திற்கு சுமார் 25 லட்சம் டாலர் சம்பளம் வாங்கிக்கொண்டு இந்த தகவல்களை தொகுத்துக் கொடுக்கிறார்கள். இதன் தனிச்சிறப்பே தகவல்களை தொகுக்கும் முறை தான். உதாரணமாக, நாட்டில் ABC என்ற ஒரு குறிப்பிட்ட பகுதியில் முதலாலளித்துவத்தை எதிர்த்து ஒரு கிளர்ச்சி நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம், இதன் சிறு தகவல் ப்ரிசம் குழுவிற்கு கிடைத்தாலும் "முதலாலளித்தும் + ABC" என்ற குறிச்சொல்லை கொடுத்து தேடினால் அந்த பகுதியில் முதலாளித்துவத்தை மையமாக வைத்து நடந்த தொலைபேசி உரையாடால்கள், கடிதப்போக்குவரத்துகள், காணொளிகள் என அனைத்தையும் திருடமுடியும். இதுவே ரகசியமான தகவல்களைத் திருட வேறு வழிகளைக் கையாள்கிறார்கள். "BUGS" என்ற மென்பொருளை முதலில் திருடப்பட வேண்டிய கணிணிக்கு அனுப்புகிறார்கள். இது சமர்த்தாக உள்ளே போய் அனைத்தையும் ஒரே கோப்புகளைப்போல்( Identical Files) மாறிக்கொண்டு தன் வேலையைக் காட்டத்தொடங்கிவிடும். உங்களின் தினசரி நடவடிக்கை முதல் மறையீடு(encryption) செய்த கோப்புகள் வரை அனைத்தையும் அப்பட்டமாக படித்து அங்குலம் அங்குலமாக அனுப்ப ஆரம்பித்துவிடும்.
|
தகவல் பரிமற்று முறை |
எட்வார்ட் ஸ்னொடென் இந்த விசயத்தை என்று வெளிக்கொண்டுவந்தாரோ, அன்றில் இருந்து அடுக்கடுக்காக பல தகவல்கள் பிரிசம் தொடர்பாக கசிந்த வண்ணம் உள்ளன. அதில் மிக முக்கியமான ஒன்று Facebook அப்ரூவர் ஆனது. நீங்கள் தகவல்களை விற்கிறீர்களா என்று கேட்டதற்கு "குற்றத்த ஒப்புகிறேன் அய்யா" என தெனாவட்டாக பதில் சொல்லியிருக்கிறது.பேஸ்புக் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி: “அமெரிக்க அரசிடமிருந்து 9,000 முதல் 10,000 வேண்டுகோள்கள் பெறப்பட்டதாகவும். 2012 ஆம் ஆண்டின் பிற்பாதியில் தனது பயன்பாட்டாளர்களில் 18 ஆயிரத்திலிருந்து 19 ஆயிரம் பேர் வரை உளவு வளையத்தில் சேர்த்ததாகவும் சொல்லியிருக்கிறது.
மைக்ரோசாப்ட் தனது வெளிப்படைத் தன்மை அறிக்கையில் - அமெரிக்க அரசுக்கு 31 ஆயிரம் வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்கள் கொடுத்ததாகவும். 24 ஆயிரத்து 565 பேர் பற்றிய தகவல்களை அமெரிக்க அரசு கேட்டதாகவும் சொல்லியிருக்கிறது.கூகிள் மற்றும் ஆப்பிள் , "நாங்கள் அமெரிக்க உச்ச நீதிமன்றம் கேட்டதால் தான் கொடுத்தோம் என நல்ல பிள்ளை வேடம் போடுகின்றன.
|
நிறுவனங்கள் தகவல் தர தொடங்கிய ஆண்டு |
இவ்வளவு செய்துள்ள பிரிசம் பொதுமக்களிடம் , "மக்களே , நாங்கள் உங்கள் தகவல்களைத் திருடவில்லை, உங்களின் மெடா டேட்டவை மட்டுமே சேகரிக்கிறோம்" என நம்மூர் அரசியல்வாதிகளைப்போல் அறிக்கை விடுகிறது. அதாவது, நமது தொலைப்பேசி எண் தான் டேட்டா என்றால் நாம் யாரை எப்போது அழைக்கிறோம், எவ்வளவு நேரம் பேசுகிறோம், நம் குருஞ்செய்திகள்,இணையத்தில் உலாவும் முறை, முகவரி என அனைத்து மெடா டேட்டவை இவர்கள் சேகரிப்பார்கள். (இதுக்கு என் தொலைபேசியை இவர்களே வைத்துக்கொள்ளலாம்).
|
ப்ரிசம் செயல்படும் முறை |
சமூக வளைத்தளங்கள்,தொலைபேசிகளின் ரகசியக் குறியீட்டு எண்கள் கணினி மற்றும், தொலைபேசி உறையாடல்கள் தொகுத்து சேமிக்கப்பட்டுள்ளன.2013 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் அமெரிக்க கணினிகளில் இருந்து சுமார் 3 பில்லியன் தகவல்கள் இப்படி டேட்டாக்களாக எடுக்கப்பட்டுள்ளன.
|
தகவல் வரைபடம் |
வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வண்ணங்கள், எந்தெந்த நாடுகளில், எவ்வளவு தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுவதாகும். உலகம் முழுவதும் சேமிக்கப்பட்டுள்ள தகவல் சுமார் 97 பில்லியனாக இருக்கலாம் என்கின்றன அந்த ஆவணங்கள்.மிக அதிக தகவல்கள் திருடப்பட்டது இரானில் இருந்துதான். சுமார் 14 பில்லியன். பாகிஸ்தானில் 13.5 பில்லியன். ஜோர்டான் மூன்றாவது இடத்திலும். எகிப்து 4 வது இடத்திலும். இந்தியா 5 வது இடத்திலும் இருக்கிறது. கூடிய விரைவில் இந்தியா இன்னும் இரு இடங்கள் முன்னேறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்க தகவல்கள் என்றில்லாமல் தனிமனித தகவல்களும் இங்கு சேகரிக்கப்படுகிறன. உங்களுடைய கற்பனைகள், எண்ணங்கள், நண்பர் வட்டம், ரகசியங்கள்,பிடித்த புத்தகம் ,நிறம், உளவியல் சார்ந்த பிரச்சனைகள் என எல்லாவற்றையும் இவர்களால் சேகரிக்க முடியும். தவறே செய்யாத நிலையிலும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவது இதன் உச்சகட்ட கொடுமைகளில் ஒன்று. உலக போலீசாக தன்னை காட்டிக்கொள்ளும் அமெரிக்க,பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசுகள் ஒவ்வொரு நாட்டின் அரசியல் விவகாரங்களை மட்டுமல்ல, ஒவ்வொரு தனி மனிதனின் செயல்பாடுகளையும் கணித்து - தனக்கு சாதகமான போக்குகளை ஏற்படுத்த இவற்றை பயன்படுத்திக் கொள்ள முனைந்திருக்கின்றன. இதற்கான தீர்வுகள்.. பார்க்கலாம்.....!
எளிமையான விளக்கம். தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteகருப்பு நிறப் பின்புலத்தை மாற்றினால் நலம்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.....
Deleteபின்புலத்தை விரைவில் மாற்றிவிடுகிறேன்..
தெரியாத அறியாத தகவல்கள் நன்றி செகுரிடி சிஸ்டம் மாற்றுதல் நலம்
ReplyDeleteவருகைக் நன்றி நண்பரே...
Deleteசெகுரிடி சிஸ்டம் பற்றி venkrishna2007@gmail.com -க்கு மின்னஞல் செய்யுங்க pls...
வணக்கம்...
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி... உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_11.html) சென்று பார்க்கவும்...
வருகைக்கும் , பின்னூட்டத்திற்கும் நன்றி..
Deleteவலைச்சரத்தில் தளம் அறிமுகப்படுத்தப்பட்டதும், உங்களால் தெரிந்து கொண்டேன் :-).