Sunday, 5 October 2014

நம்பமுடியாத படங்கள்- மோசமாக கட்டமைக்கப்பட்ட நமது சமூகத்தின் முடிவு

வணக்கம்.

யுடோபியா என்றொரு கற்பனை சமூகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சர்.தாமஸ் மோர் என்ற எழுத்தாளர் 15-ம் நூற்றாண்டில் தனது கதையில் இந்த கற்பனை சமூகத்தைக் குறித்து எழுதினார். இந்த சமூகம் மிக உயரிய கொள்கைகளையும் மனித உரிமைகளையும் கொண்டது. "Ideal Soceity" என்று சொல்வார்கள், மிகச் சிறந்த சட்டங்களை கொண்ட இந்த சமூகத்தில் அமைதியும் வளமும் நிறந்து வழிந்தன.

இதன் சுற்றுச்சூழல், மேற்கேத்தைய வாழ்க்கைச் சூழலில் இருந்து பெரிதும் மாறுபட்டது, இயற்கையோடு ஒத்து வாழ்வது. யுடோபியாவின் பொருளாதார மாதிரியை பல கம்யுனிச, பொருளாதார அறிஞர்களும் வரவேற்றுள்ளனர். மிக முக்கியமாக பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்த சமூகம். பலதரப்பட்ட மதங்களைப் பின்பற்றும் மக்கள் ஒற்றுமையுடனும், நமது தற்போதைய அறிவியல் தொழில்நுட்ப கருத்துக்களை ஒத்த வளர்ச்சியையும் கொண்டுள்ளது. போர்களின்றி அமைதியுடன் வாழும் விழுமியங்களை கொண்டிருந்ததாக இச்சமூகம் வடிவமைக்கப்பட்டது. இப்படி பல சிறப்புகளை வாய்ந்தது யுடோபியா சமூகம். இதைப் பற்றி சொல்ல ஒரு தனி பதிவே தேவைப்படும்.

யுடோபியா சமூகம், அப்படியே அதற்கு நேர்மாறான மற்றொரு சமூகத்தையும் தோற்றுவித்தது. டிஸ்டோபியா. எங்கும் பொய், பொறாமை, குழப்பம், சுயநலம் போன்ற குணங்கள் நிறைந்திருந்த இதன் அழிவினை கீழேயுள்ள படங்களில் காணலாம்.





டிஸ்டோபியா சமூகம் என்று ஒன்று இருந்தால் அதன் அழிவு எப்படி இருக்கும் என இந்த படங்கள் காண்பிக்கின்றன. நமது தற்போதைய நிலைக்கும் இதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. கண்டிப்பாக இது ஒரு நாள் நடக்கத்தான் போகிறது நம் சமூகம் அதன் தற்போதைய கோட்பாடுகளை கைவிடாவிட்டால்.

இந்த படங்கள் எல்லாம் மினியேச்சர் என்னும் மாதிரிகள். அழிந்து போன நகரத்தை அப்படியே கொண்டுவந்துள்ளனர். கீழேயுள்ள படங்களைப் பாருங்கள், இவை எவ்வளவு சிறியவை என்று தெரியும்





என்ன நம்ப முடிகிறதா!!!



2 comments :

  1. நமது தற்போதைய நிலை?
    நல்ல பதிவு.

    ReplyDelete
  2. வாங்க வேநரி வருகைக்கு நன்றி

    ஒருவரை ஒருவர் அழித்து வாழ்ந்துகொண்டிருக்கும் நமது தற்போதைய நிலைக்கும் டிஸ்டோபியா சமூகத்திற்கும் பெரிய வேறுபாடு உள்ளது போல் தோன்றவில்லை ...

    ReplyDelete