Saturday, 31 August 2013

பதிவர் சந்திப்பு : பிரபல பதிவர்கள்-- புதிய பதிவர்கள் என்ன நடக்கிறது??

இரண்டாம் ஆண்டு பதிவர் சந்திப்பு நாளை நடைபெற உள்ளது. பிரபல பதிவர்கள் எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு அதற்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் புதிய பதிவர்கள் அதைப்பற்றி எனக்கென்ன கவலை என்பதைப்போல் வெங்காயம்,வெள்ளைப்பூண்டு(இரண்டும் இந்திய பொருளாதாரத்துடன் மிக நெருக்கம்) என்று பதிவுகளை போட்டு வறுத்தெடுத்துக்கொண்டிருக்கிறோம். கொஞ்சம் தமிழ்மணம் பக்கம் சென்று பார்த்தால் காம்ரேட் ஆரூர் மூனா செந்தில் ,கனவுகள் ராஜி, தென்றல்” சசிகலா,தமிழ்வாசி” பிரகாஷ், டிடி,வீடு திரும்பல்” மோகன்குமார்,கவிதை வீதி”சௌந்தர்,மதுமதி,கோவை நேரம்”ஜீவா,சுரேஷ்,சங்கவி,(விட்டுப்போனவர்கள் மன்னிக்கவும்... முடியல!) போன்ற பதிவர்கள் பதிவர்கள் சந்திப்பு பற்றி பல விலாவாரியான பதிவுகளை எழுதி தள்ளிவிட்டனர். ஆனால் புதியவர்களிடம் சொற்பமான பதிவுகளே பதிவர் சந்திப்பு பற்றி வந்திருக்கின்றன. இதற்கு அடிப்படையான காரியம் "நாம் புதியவர்கள்" என்ற எண்ணம் தான் என்று நினைக்கிறேன்.  எனவே அதை தூக்கி குப்பை வண்டியில் எறிந்துவிட்டு நாமும் களத்தில் இறங்குவோம்.எதற்காக சொல்கிறேன் என்றால் , ஒருவேளை பதிவுலக வாசகர்களின் கெட்ட நேரம் நாமும் பிரபல பதிவர் ஆகிவிட்டால், "நீ என்ன பிரபல பதிவர், பதிவர் சந்திப்பு பற்றி ஒரு வரியாவது எழுதுனியா? இல்லை என்னைத்தான் பதிவர் சந்திப்புக்கு வர சொன்னியா என்று யாரவாது கேள்வி கேட்டால் "சரிங்க சித்தப்பு இனிமே உங்கள எங்க கண்டாலும் கூப்புடுரேன் -னு" சமாளிக்க வேண்டியதில்லை.எப்படியும் சில வயித்தெரிச்சல் புடிச்சவங்க இந்த சந்திப்பு முடிஞ்சதும் "பதிவர் சந்திப்பு தேவையா? ... பன்னிகுட்டி தேவையா னு " பதிகளை போடத்தான் போறாங்க. அவங்களுக்கு பின்னூட்ட பதில் எழுதுவதற்கு சில விடயங்கள் தெரிஞ்சு வச்சுக்க வேண்டியது அவசியம்.

 சரி புதியவர்கள் என்ன பண்ணலாம். பதிவுகளை வாசிப்பவர்கள் அனைவரும் தமிழ்மணம் போன்ற திரட்டிகளை அறிந்து வைத்துக்கொள்வது இல்லை. என் நண்பர் வட்டத்தில் பலருக்கு பதிவுலகமே அறிமுகம் ஆகி இருக்கவில்லை என் வலைப்பூ இணப்பை கொடுக்கும் வரை. எனவே பிரபல பதிவர்களின் பதிவர் சந்திப்பு சம்பந்தப்பட்ட பதிவுகளை நம் வலைப்பூவில் இணைத்திடுவோம். இது இன்னும் இப்படி ஒரு எழுத்துலகம் இருக்கிறது, இங்கும் தரமான எழுத்தாளர்கள் உள்ளார்கள் என்பதை பலரும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். இதில் இன்னுமொரு நல்ல விடயம் சந்திப்புல கறிசோறு வேறு. சந்திப்புக்கு போகும் அல்லக்கையிடம் இரண்டு பாதிரம் கொடுத்து "ஒன்னு உனக்கு, ஒன்னு எனக்கு" என்று இந்த ஒரு நாள் நாமெல்லாம் "அன்னவேரி கண்ணையன்" ஆகலாம்...
எனக்கு பிடித்த இன்னொரு விடயம் பதிவர் சந்திப்பில் புத்தகங்கள் வெளியிடுவது. உதாரணத்திற்கு சாரு , ஜெ.மொ.. இவர்கள் எழுத்தாளர்கள் என்பதால் என்ன சொன்னாலும் சாமானியன் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அழிச்சாட்டியம் பண்ணுபவர்களுக்கு மத்தியில், இப்படி புதிய எழுத்துலகம் உருவாவது இந்த் நாசமாபோன கோஷ்டி பூசலை தடுக்க உதவும்.

பதிவர் சந்திப்பு பற்றிய செய்திகள்.
http://www.rahimgazzali.com/2013/08/blogger-meeting-2013.html,

"பதிவர் திருவிழா" திறம்பட ஒருங்கிணைத்து நடத்தும் அனைத்து பதிவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

No comments :

Post a Comment