தலைவர் கவுண்டமணி தனது நகைச்சுவையில் அரசியல்வாதிகளை காய்ச்சி எடுப்பதில் வல்லவர். நம் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்களையும், அவர்கள் நம்மை ஏமாற்ற பயன்படுத்தும் கொள்கைகளும், ஓட்டு பற்றியும் தலைவரின் நக்கல் வசனங்களை தொகுத்துள்ளேன்...
சிரிக்கவும், சிந்திக்கவும்...
சிரிக்கவும், சிந்திக்கவும்...
அரசியவாதி ஆகனுமா?
அய்யோ அந்த கருமத்துக்கு படிப்பே தேவையில்ல..
ஊர்ல நொண்டி நொசக்கன், வெந்தது வேகாதது,பெட்டி கடையில கடன் சொன்னது,பீடிய கிள்ளி குடிச்சது,சந்தை கடைல கருப்பட்டிய திருடீட்டு ஓடுனது, இந்த மொத்த கும்பலும் அங்க தான் கெடக்குது.
என்ன கம்யுனிசமா?
ஆமா, கம்யூனிசம் தான் கம்யூனிசம் தான் டா. இத தான் பல பேர் மேடை ஏறி அடுக்கு மொழியில பேசுராங்க, வெளிநாட்டுக்கு ஏரோப்ளேன்ல போய் ஜனநாயக சோசியலிசம்னு பேசுராங்க, எல்லா சினிமா ஹீரோவும் நெஞ்ச தட்டி கைய தூக்கி பாடுறாங்க, ஆனா இதுல என்ன ஒரு உண்மைனா இவனுங்க யாருமே ஏழைங்க இல்ல.
இப்ப ஓட்டு...
ஓட்ட பத்தி நீ பேசாதய்யா.. ஓட்டு இவனுங்க சும்மாவாயா போட்டானுங்க. மாருவாடிகிட்ட பத்து வட்டிக்கு வாங்கி, தலைக்கு இருவத்தஞ்சு-நு வாங்கிட்டுதான்ய்யா போட்டானுங்க. அதுமட்டுமா ரெண்டு லோடு சாராயம் அனுப்புனமா இல்லயா. டேய் ஓட்ட நீங்க போட்டேன்னு சொல்ரத விட வித்தேன்னு சொல்லுங்கடா. இன்னும் அஞ்சு வருசத்துக்கு ஓட்ட பத்தி பேசுரதுக்கு உங்களுக்கு யோக்கிதயே இல்லடா... வேணுமுன்னா, அடுத்த எலக்சன்ல அய்யா, ஒரு அஞ்சு,பத்து போட்டு குடுங்கனு கேளுங்க செய்யுறோம், அது ஜனநாயகம், மக்களாட்சி...
கவுண்டமணி என்னதான் நக்கலாக சொன்னது போல் பதிவில் இருந்தாலும், (100%) உண்மை தானே எனத் தோன்றுகிறது...
ReplyDeleteசின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)
ReplyDelete(Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')
வாங்க தலைவா..
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Word verification ஐ ஏற்கனவே நீக்கியிருந்தேன், எங்கயே தப்பு நடந்துருச்சு...
இப்பொழுது நீக்கிவிட்டேன்.. நன்றி:)
கம்யூனிசத்ல உண்மைக்குப் புறம்பான இந்த லைன மட்டும் நீக்கிடுங்க.
ReplyDelete//ஆனா இதுல என்ன ஒரு உண்மைனா இவனுங்க யாருமே ஏழைங்க இல்ல//
நன்றி,
கோபாலன்
வாங்க கோபாலன், வருகைக்கு நன்றி...
Deleteஅந்த வரி, போலி கம்யுனிசம் பேசும் அரசியல்வாதிகளையும், மக்களை சுரண்டிப் பிழைக்கும் சினிமா நட்சத்திரங்களையும் பற்றி கூறப்பட்டது...
அவர் மிகத் தெளிவாகத்தானே, இன்று நடப்பதைச் சொல்லியுள்ளார்.
ReplyDeleteஎனக்கு கவுண்டமணியில் இந்த அதிரடி மிகப் பிடிக்கும்.
இத் தொடுப்பில் உள்ள பேச்சையும் கேட்டிருப்பீர்கள்.https://www.youtube.com/watch?v=exzBSwWkRo4, இன்று இப்படி எந்த நடிகரால் தெளிவாகப் பேசமுடிகிறது.
வருகைக்கு நன்றி யோகன் ...
Deleteநீங்கள் குறிப்பிட்ட கானொளியை பலமுறை பார்த்திருக்கிறேன். உண்மையிலேயே அவர் ஒரு ஜீனியஸ்.
இன்று உள்ள நடிகர்கள் பலருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியிருப்பதால் மனதில் தோன்றியதை சொல்ல தயங்குகிறார்கள், ஆனால் கவுண்டர் இதுவரைக்கும் யாருக்கும் கட்டுப்பட்டதில்லை. எனவே மனதில் பட்டதை சொல்ல அவருக்கு எந்த பிரச்சனையும் இருப்பதில்லை.
கவுண்டமணி சொல்வது கற்பனையல்ல நிஜம்! நிதர்சனத்தை சொல்லியிருக்கிறார்! தக்க சமயத்தில் சரியான பகிர்வு! நன்றி!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தளிர்’ சுரேஷ்.
Delete