Friday, 14 February 2014

ராகுல் காந்தியும் கவுண்டமணியும் வாழைப்பழமும்.



Frankly Speaking with Arnab என்ற ஒரு நிகழ்ச்சிக்கு ராகுல் காந்தி வந்திருந்தார். அர்னாப், ராகுலிடம் பல கேள்விகளை முன்வைக்கிறார், ஆனால் ராகுல் காந்தி சொன்ன பதில்கள் மூன்று விடயங்களை மட்டுமே சுற்றி வந்தது.
பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், தகவல் அறியும் உரிமை சட்டம், எல்ல நிலைகளிலும் இருக்கும் தற்போதைய செயல்திட்டங்களையும், வேலை செய்யும் முறையையும் மாற்ற வேண்டும்.(கவனிக்கவும் எல்லா நிலைகளிலும்!!).

அவர் பேசியதை, நம் தலைவர் கவுண்டமணியுடன் இணைத்து ஒரு காணொளி உருவாக்கியுள்ளனர்.ஆங்கிலதில் உள்ள கணொளியை தமிழில் (முடிந்தவரை) மொழிபெயர்கிறேன். காணொளியையும் இணைத்துள்ளேன். பாத்து படிச்சு தெளிவாயுடுங்க.




இங்கே அர்னாப் -கு பதிலாக கவுண்டமணி என்று போட்டுள்ளேன்.

கவுண்டமணி: ராகுல், உங்களை Franly Speaking நிகழ்ச்சிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி!

ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்

கவுண்டமணி: !!!???? , சரி, உங்கள் 10 வருட அரசியல் வாழ்க்கையில் இது தான் முதல் முறையாக நீங்கள் தொலைக்கட்சிக்கு அளிக்கும் பேட்டி...ஏன் இவ்வளவு இடைவெளி ?

ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

கவுண்டமணி: எனக்கு ஒரு வேண்டுகோள்...

ராகுல்: (பேசிக்கொண்டிருக்கும்போதே....) பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

கவுண்டமணி: நான் உங்கிட்ட என்ன கேட்டேன்?

ராகுல் : தகவல் அறியும் உரிமை சட்டம்..

கவுண்டமணி: நிகழ்சிக்கு போவதற்கு முன் சில இதில் நாம் விவாதிக்கப்ப்போகும் அடிப்பையான விடங்களைப் பார்க்கலாம். சரியா?

ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்

கவுண்டமணி: ... உட்கார்... நான் உங்கிட்ட என்ன கேட்டேன்?

ராகுல்: நீங்க என்ன வேணும்னாலும் கேளுங்கள்.

கவுண்டமணி: காங்கிரஸ் கட்சி நீங்கள் வ்ந்ததும் அதன் இப்போதைய தடைகளை தாங்குமா?

ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

கவுண்டமணி: (டென்சனாகிரார்!!).. அடேய்....  நான் உங்கிட்ட என்ன கேட்டேன்.. நீ என்ன பேசிட்டு இருக்க?

பாலையா: ஏன்ணே.. என்னாச்சு? ஏன் அவன போட்டு இப்பிடி படுத்துரீங்க?

கவுண்டமணி: நான் எவ்வளே பேரை பேட்டி எடுத்துருக்கேன். இவன மாதிரி ஒரு கல்லூளிமங்கனை பார்த்ததே இல்ல..

பாலையா: இப்பிடி கேட்டா அவன் எப்பிடி சொல்லுவான்.. இப்ப நான் கேக்குறேன். டேய், அண்ணா, உங்கிட்ட ஒரு கேள்வி கேட்டாரு ,

ராகுல் : தகவல் அறியும் உரிமை சட்டம்..

பாலையா: குஜராத்-ல மோடி க்கு எதிரா என்ன வியூகம் வச்சிருக்க ?

ராகுல் : தகவல் அறியும் உரிமை சட்டம்..  சொல்லுங்க.. நீங்க என்ன வேணும்னாலும் கேளுங்க?

பாலையா: நீ வந்ததுக்கு அப்புறம் காங்கிரஸ் ல என்ன பன்னனும்-னு இருக்க?

ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

கவுண்டமணி: அடேய்... உன்ன.... யோவ், விடுங்கய்யா.. நானே கேக்குறேன். டேய் நான் உங்கிட்ட என்ன கேட்டேன்.

ராகுல்: கேளுங்கனே..

கவுண்டமணி: நீ உங்க கட்சில என்ன பண்ண போற? தெளிவா ஒரு பதில் சொல்லும்மா ராஜா...

ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

கவுண்டமணி: டேய்.. இன்னிக்கு உன்ன கொல்லாம விட மாட்டேன்.. சார் புடிங்க சார் அவன..

இப்படி ஒரு மாங்கா மடையன் நம்ம நாட்டுக்கு பிரதமரா வந்தா... வெளங்கிரும்....



Thursday, 13 February 2014

யுவன் ஷங்கர் ராஜவின் புதிய பெயர்

அனைவருக்கும் வணக்கம்!.

மீண்டும் இங்கே அனைவரும் அரைத்த மாவையே அரைத்து தோசை சுட போகிறேன்.யுவன் இசுலாமியரக பல மாதங்களாக வாழ்ந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு தான் தனது ட்விட்டர் கணக்கு மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதைப் பற்றி பல தளங்களில் விவாதங்கள் நடைப்பெற்றுவிட்டன. யுவன் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போகிறார் என செய்திகளும் வருகின்றன. அது அவரது தனிப்பட்ட வாழ்க்கை, அவருக்கு பிடித்த மதத்தை பின்பற்றவோ , பிடித்த பெண்ணை மணம் முடிக்கவும் அவர்க்கு எல்லா வித உரிமையும் சுதந்திரமும் உள்ளது. அதில் மற்றவர்கள் மூக்கை நுழப்பது அநாகாரீகம்.


Friday, 7 February 2014

ஆறாம் திணை. நண்டு ஊறுதும் நரி ஊறுதும்....

ஆறாம் திணை. ஆனந்த விகடனில் உருப்படியாய் வரும் ஒரு தொடர் கட்டுரை. இந்த வாரம் இதில் மருத்துவர்.சிவராமன் செயற்கை உணவுகள் மற்றும் குழந்தகளுக்கு உடல் உழைப்பு இல்லாமை பற்றி குறிப்பிட்டிருந்தார்.

கட்டுரையின் கடைசி பத்தியை வாசித்தேன். இந்த முறையில் தழிழ்நாட்டில் சாப்பிட்ட கடைசி தலைமுறையை சார்ந்ததாலோ என்னவோ (கிராமங்களில் கூட இப்பொழுதெல்லம் பார்க்க முடிவதில்லை), இதை பகிர வேண்டும் என்று தோன்றியது..

நீங்களும் வாசிக்கவும்...

குழந்தையின் மென்மையான உள்ளங்கையை சமையல் களமாக்கி 'இது இட்லி,இது சாம்பார் சாதம்,இது கத்தரிக்காய் பொரியல்,இது தயிர்ச் சோறு...' என ஒவ்வொரு விரலாக மடித்து,அம்மாவுக்கு ஒரு வாய்,அப்பவுக்கு ஒரு வாய்,பாட்டிக்கு ஒரு வாய்,தாத்தாவுக்கு ஒரு வாய்,அப்புறம் தொழுவத்துல உள்ள கன்னுகுட்டிக்கு ஒரு வாய், அப்புறமா இந்த செல்லக்குட்டிக்கு' என நண்டு ஊறுது, நரி ஊறுது எனச் சொல்லி மகிழ்வித்து உறவை உயிரைப் போற்றி உணவூட்ட்டிய சமூகம் இது.

இதன் அக்கரை தரும் சுவையையும்,பயனையும் எந்த உப்பு, உயர் புட்டி உணவும் தந்துவிடவ முடியாது

Monday, 3 February 2014

சூப்பர் சிங்கர் 4- திவாகர் எப்படி பட்டத்தை கைப்பற்றினார்?

பல பேர் பல பதிவுகளை எழுது தள்ளிவிட்டனர் இதைப் பற்றி.. நான் கொஞ்சம் தாமதம். இருந்தாலும் எதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

முதலில் சூப்பர் சிங்கரில் இந்த ஓட்டு மூலம் ஒரு நல்லது நடந்தது போல் இருக்கிறது. என்ன என்கிறீர்களா? திறமைக்கு மதிப்பு கிடைத்துள்ளது. பதிவான ஓட்டுகளில் எப்படி கிட்டத்தட்ட 80 சதவீதம் திவாகருக்கு போனது?


Friday, 31 January 2014

இந்தியப்* பகுதியில் பாகிஸ்தானும், சீனாவும் இணைந்து அமைத்துள்ள நெடுஞ்சாலை


வணக்கம்!!!


இது ஒரு சர்வதேச பிரச்சனை என்பதால் தலைப்பில் உள்ள * குறியீடுக்கான அர்த்ததை முதலில் சொல்லிவிடுகிறேன்.தலைப்பை முதலில் இந்தியாவில் என்று தான் வைத்திருந்தேன், ஆனால் அது மிகப்பெரிய அபத்தம் என்பதால் இந்தியப் பகுதி என மாற்றிவிட்டேன் [அபத்தத்தை இறுதியில் பார்க்கலாம் :)]. அதென்ன இந்தியப் பகுதி..ஆமாம், அதுவே தான். காஷ்மீர்.
நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசுகிறேன் என்று வழக்கு தொடரவும் வாய்ப்புள்ளதால் தான் * குறியீடு, ஆனால் இந்தியாவின் இறையாண்மை அல்ல, பாகிஸ்தானின் இறையாண்மை.  ஏனெனில் இந்த நெடுஞ்சாலை அமைந்துள்ள இடம் பாகிஸ்தானின் ஆளுகைக்கு உட்ப்பட்ட காஷ்மீர் பகுதியில். 1948-ம் ஆண்டு நடந்த முதல் இந்திய-பாகிஸ்தான் போரில், ஐ.நா சபை  அவரவர் போரில் கைப்பற்றிய பகுதியில் தங்கள் எல்லைகளை அமைக்க வேண்டும் என சில வழிமுறைகளை கூறியது. அத்துடன் இரு தரப்பு ராணுவமும் வெளியேறிய பிறகு ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீர் மக்கள் இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணையலாம் அல்லது தனி தேசமாக தொடரலாம் என முடுவெடுக்கப்பட்டது. ஆனான் துரதிர்ஷ்டவசமாக, ராணுவமும் வெளியேறவில்லை, எனவே வாக்கெடுப்பவது மன்னாங்கட்டியாவது என்று இரு நாட்டு அரசுகளும் கங்கணம் கட்டிக் கொண்டு காஷ்மீரை கூறு போட தொடங்கின. 1965-ல் நடந்த இந்தியா-சீன போர், அதை போர் என்று சொல்லக்கூடது. அரசியல்வாதிகள் அடிமட்ட மக்களின் நிலங்களை அடாவடியாக எழுதி வாங்குவது போல் லாடாக் பகுதியின் கிழக்கில் உள்ள சின்சியாங்க்(தற்போதைய பெயர்) பகுதியை வளைத்துக்கொண்டது.


அப்படி என்ன இருக்கிறது காஷ்மீரில்? சொர்க்கம் என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் காஷ்மீருக்கு போனால் நேரில் பார்க்கலாம். வெண்மையும், பச்சையும்,நீலமும் கலந்த ஒரு பரவச உலகம் அது. இந்த் பதிவை படித்துவிட்டு பின்னூட்டத்தில் தெரிவித்தால் காஷ்மீர் பற்றி பதிவிடுகிறேன்(ஏனென்றல் இது கொஞ்சம் SENSITIVE). சரி எங்கோ போகிறோம்... நெடுஞ்சாலைக்கு போவோம்.

காரகோரம் மலைத்தொடர், எங்கோ படித்த மாதிரி இருக்கிறதா? பள்ளி வரலாறு புத்தகத்தில் இந்தியாவின் மிக உயர்ந்த சிகரங்களை கொண்ட மலைத்தொடர் என்று இருக்கும். ஆனால் இது ஒரு மொள்ளமாரித்தனம் என்பது பலருக்கு தெரிவதில்லை. எனெனில்  காரகோரம் பகுதி முழுவதும் பாகிஸ்தான் வசம் போய் கிட்டத்தட்ட 65 ஆண்டுகளுக்கு மேல் ஆச்சு. இந்த காரகோரம் மலைத்தொடரில் தான் பாகிஸ்தானும், சீனாவும் நெடுஞ்சாலை அமைத்திருக்கிறார்கள். உலகின் மிக உயர்ந்த நெடுஞ்சாலையும் இதுவே. சராசரி உயரம் 4500 மீட்டர்கள்!!!.

பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் இருக்கும் இந்த நெடுஞ்சாலை சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீரின் ஜின்சியாங்க் நகரையும் அபோதாபாத், ஆம் பின்லேடன் தங்கியிருந்த அதே அபோதாபாத்யும் இணைக்கிறது.. 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சாலை பணி 1979-ல் முடிவடந்தது. 1986-ம் ஆண்டு போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது. என்ன இந்தியாவா? அப்போது என்ன செய்துகொண்டிருந்ததா? ம்ம்ம் பஞ்சசீலக் கொள்கைகளை வகுத்துக்கொண்டிருந்தத்து.. அட போங்கப்பா......

1300 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த நெடுஞ்சாலை இதன் கரடு முரடான பதைகளுக்கு பெயர்போனது. சுற்றிலும் இமய மலை, பனிக்காற்று, ஆறுகள் என்று இது ஒரு அழகுப் பிரதேசம். இதன் இன்னொரு சிறப்பு  யுரேசிய கண்டத்தட்டு மற்றும் இந்திய கண்டத்தட்டையும் கடந்து இந்த நெடுஞ்சாலை பயனிக்கிறது, மேலும் ஆப்கனிஸ்தான், டஜிகிஸ்தான்னும் மிக அருகில் வந்து போகும். பாகிஸ்தானை பொருத்தவரையில் இது ஒரு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடம், எனென்றால் கில்கிட்-நகரின் அருகில் தான் நம் நாட்டின் கார்கில் உள்ளது. சும்மா இமய மலையில் ஒரு ஏறு ஏறி இறங்கினால், பாகிஸ்தான் சென்றுவிடலாம். அங்கே சீன வீரர்கள் நம்மை கைமா பண்ண காத்திருப்பார்கள் என்பது வேறு விடயம்.

கில்கிட், சிந்து,ஜால்கோட் நதிகளை கடந்து செல்லும்  இதன் 801 கிலோ  மீட்டர்கள் பாகிஸ்தானில் உள்ளது.அப்படியே போகிர வழியில் killer Mountain என்று அழக்கப்படும் நங்க பர்பத் மலையை பார்ர்தபடி பயனித்தால் குஞ்செராப் கணவாய் வழியே பாகிஸ்தானின் எல்லைக்கு வந்துவிடலாம். அங்கே செக் போஸ்டில் கையெழுத்து அல்லது கைநாட்டு வத்து விட்டு அப்படியே ஒரு சைனா டீயும் குடித்துவிட்டு வண்டியை எடுத்தால் நேராக குல்மா கணவாய் வழியாக சீனாவின் பகுதியில் மலிவு விலையில் பெட்ரோல் போட்டுக்கொள்ளலாம். சீனவின் பகுதில் பெரிய குடியிருப்புகள் எதும் இல்லை, மக்களை குடிவைக்கவா வளைத்துபோடுவார்கள். எல்லாம் அதற்கு தான்.. புரிந்துவிட்டதா? சரி நல்லது....

பாகிஸ்தான் இதை ஒரு சுற்றுலாதலமாக மாற்றியுள்ளது. இமய மலையில் ஏற விரும்பும் வெளி நாட்ட்டவருக்கு இது ஒரு மிகச் சிறந்த கேந்திரம். பாகிஸ்தானின் கடவுச்சீட்டு இல்லாமல் இருந்தால் நீண்ட நாட்கள் தாக்குபிடிக்க முடியாது(உளவாளி என்ற பயம் கலந்த மரியாதையால்). ஒன்று ராணுவத்தால் மற்றொன்று பல குண்டு வெடிப்புகளையும், தீவிரவாத செயல்களையும் பொறுப்புடன் செய்து பொறுப்பேற்கும் சுதந்திர போராட்ட வீரர்களால், அட பாகிஸ்தானின் அத்தனை ஆட்சியாளர்களும் அப்படித்தான் கூறுகி(ன்)றார்கள்.

ஆயிரம் வார்த்தை சொல்ல முடியாததை ஒரு படம் சொல்லிவிடும் என்பார்கள். கீழே காரகோரம் நெடுஞ்சாலையின் சில படங்களை இணைத்துள்ளேன். பார்த்து ரசிக்கும் போதே கண்டிப்பாக மெல்லிய ஏக்கம் வருவது ஏன் என்று தெரியவில்லை.

  


முதலில் கூறிய அபத்தத்தை பார்ப்போம். இப்படிப்பட்ட பகுதியத்தான் இந்தியா , பாகிஸ்தானிடம் போய் அது எனக்கு சேர வேண்டிய பகுதி, குடுத்துவிட்டு போய் ஹிந்துகுஷ் மலையில் கோவேரு கழுதை மேய்த்து பிழைத்துக்கொள் என்று சொல்கிறது. இனிமேலும் இதை எப்படி கொடுப்பர்கள்? இந்தியப் பகுதி என்று சொல்லக்கூட இனிமேல் நமக்கு வழியில்லை. அங்கு போவதற்கு இந்தியன் என்ற காரணத்தினாலே கண்டிப்பாக கெடுபிடிகள் இருக்கும். ம்ம்ம் என்ன செய்வது, இப்படி நெட்டில் பார்த்து ஆசையை தீர்த்துக்கொள்ள வேண்டியது தான்.