ரசவாதம், நம் சித்தர்களின் சித்துவிளையாட்டுகளில் ஆராய்ச்சியாளர்களுக்குப் பிடிபடாமல் இருக்கும் விஞ்ஞானம். இப்பொழுது இது எப்படி சாத்தியம் என்று பார்ப்போம்.
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் அணுக்களால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அவைகளுக்குள் இருக்கும் ப்ரோடான், நியூட்ரான், எலக்ட்ரான் அளவுகளைப் பொருத்து அதன் அணு எண், நிறை எண் போன்றவற்றை வகுத்துள்ளனர். பாதரசத்துக்கும், தங்கத்துக்கும் ஒரே ஒரு அணு எண் தான் வித்தியாசம். அதாவது, பாதரசத்தின் அணுக்கருவில் 80 ப்ரோடான்களும், எலக்ட்ரான்களும் இருக்கின்றன. அதே, தங்கத்தில் 79 ப்ரோடான்களும், எலக்ட்ரான்களும் உள்ளன. இப்பொழுது, பாதரசத்தின் அணுக்கருவில் உள்ள ஒரு ப்ரோட்டனை எடுத்துவிட்டால் அது தங்கமாகிவிடும். இதைத் தான் நம் சித்தர்கள் பல மூலிகைகளின் துணை கொண்டு ரசவாதம் செய்தார்கள் என்று கூறப்படுகிறது.
என்ன தங்கமாக பாதரசத்தை மாற்றுவது எளிதாக தோன்றுகிறதா? ஆனால் இதில் பல சிக்கல்கள். முதலில் அணுக்கருவில் இருந்து ப்ரோட்டானை எடுப்பது அவ்வளவு சுலபம் இல்லை. அதற்கான ஆற்றல், அதை பாதுக்காப்பாக பயன்படுத்தும் முறை என்று பல தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளன. நிற்க.
இந்த முறை குறித்து பல முறை நண்பர்களுடன் விவாதித்திருந்த போதும்,வலைப்பூவில் எழுத முடியவில்லை. ஆனால் சில நாட்களாக ஒரு வலைப்பூவில் படித்து வருகிறேன், மனிதர் அற்புதமாக எழுதியுள்ளார். நியூட்டன் விதிகள், சார்பியல் தத்துவம், கருப்புபொருள் கதிர்வீச்சு, எலக்ட்ரானின் இரு நிலைகள்(அலை மற்றும் பருப்பொருள்), ஒளி ஃபொடான்(photon) என்ற எடையில்லா பொருளால் கட்டமைக்கப்பட்ட நிகழ்வுகள், அணு மாதிரிகள், இன்னும் பல.
இதுவரை படித்ததிலேயே இயற்பியல் விடயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், எளிமையாகவும் யாரும் விளக்கவில்லை. எழுத்தில் "சுஜாதா"வின் சாயல், கடுமையான கோட்பாடுகளையும் சுவாரஸ்யமாக கூறுவது தொடர்ந்து படிக்க வைக்கிறது.. பலர் படித்திருந்தாலும், 2010-லிருந்து அணு அண்டம் அறிவியல் என்ற பெயரில் எழுதப்பட்ட தொடர் என்பதால் புதிதாக பதிவுலகம் வருபவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு.
சமுத்ரா எனற பெயரில் பதிவு எழுதி வருகிறார். கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில், அணு அண்டம் அறிவியல் தொடரின் முதல் இடுகை உள்ளது.
இப்படியான எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவது இன்னும் நிறைய நல்ல படைப்புகள் வருவதற்கு துணை செய்யும்...
அவரின் ஒவ்வொரு பதிவும் இப்படித்தான் என்று அனுமானிக்க முடியாது... உங்கள் தளத்தில் அறிமுகத்திற்கு நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteஅறிவியல் பதிவு எழுதுவதற்கு வாசகர்களின் கருத்துக்கள் அவசியம் தேவை. அவர்களுக்கு நாம் கூறும் கருத்துக்கள் புரிகிறதா என்று தெரியாமல் ஒன்றை தொடர்வது கடினம்.
என்னால் முடிந்த ஒரு சிறிய உதவி இந்த அறிமுகம்...
கிருஷ்ணா, நன்றி:)
ReplyDeleteஅறிவியலைப் படிப்பவர்கள் குறைவு
புரியும்படி சொன்னால் படிக்கிறார்களா என்று பார்த்தேன்.
சிலர் படிக்கவே செய்கிறார்கள் :)
கிருஷ்ணா, நன்றி:)
ReplyDeleteஅறிவியலைப் படிப்பவர்கள் குறைவு
புரியும்படி சொன்னால் படிக்கிறார்களா என்று பார்த்தேன்.
சிலர் படிக்கவே செய்கிறார்கள் :)
வருகைக்கு நன்றி..
ReplyDeleteஸ்டீபன் ஹாக்கிங், ஸ்ட்ரிங் தியரி, Singularity , என நானும் ஒரு காலத்தில் தேடித்தேடி படித்திருக்கிறேன்.
தொடர வாழ்த்துக்கள்
give me your email id :)
ReplyDelete