வணக்கம்.
எம்.ஜி.ஆர் - ஏ.ஆர்.ரகுமான் இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்கள். ஆனால் எம்.ஜி.ஆருக்கு ரகுமான் ஒரு பாடல் இல்லை கிட்டத்தட்ட நான்கு பாடல்கள் இசையமைத்துள்ளார்.
நான்கில் எனக்கு பிடித்த ஒரு மெலோடி பாடலை கீழே காணொளியாக கொடுத்துள்ளேன்.

-------
-------
-------
-------
-------
-------
-------
-------
-------
-------
காணொளியின் முகப்பு படம் பார்த்ததும் பலருக்கு தெரிந்திருக்கும் இது இருவர் படத்தில் வரும் நறுமுகையே பாடல் என்று. இந்த படம் கருணாநிதி மற்றும் எம்.ஜி,ஆர் இருவரின் நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. முதலில் எம்.ஜி.ஆர் கேரளாவில் இருந்து நடிப்பார்வம் கொண்டு சென்னையில் தங்குவது, கிடைக்கும் சிறிய வேடங்களில் நடிப்பது என அவரின் இளமைக் கால திரையுலக வாழ்வை அழகாக படமாக்கியிருப்பார் மணிரத்னம்.
படம் வேகமெடுப்பது, மோகன்லாலை(எம்.ஜி.ஆர்) பிரகாஷ்ராஜ்(கருணாநிதி) அரசியலுக்கு அழைத்து வரும் காட்சியில் இருந்து தான். மோகன்லால் கையைப் பிடித்து தூக்கி ஒரு மொட்டை மாடியின் மேலிருந்து கீழே கூடியுள்ள மக்களின் முன் கையை காட்ட் சொல்லுவார். இப்போது படம் எடுப்பவார்கள் இந்த ஒரு காட்சியைப் பார்த்தாலே போதும், ஒரு காதாநாயகன் அறிமுக காட்சி எப்படி இருக்க வேண்டும் என்பது விளங்கிவிடும்.
அந்தக் கால அரசியல் தில்லுமுல்லுகள் சிலவற்றையும் மறைமுகமாக சொல்லியிருப்பார்கள் படத்தில். இன்னொரு கவனிக்கத்தக்க விடயம் ஜெயலலிதா. ஒரு முறை ஆனந்த விகடனின் பொக்கிஷம் பகுதியில் ஜெயலலிதா திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்த சமயம் எடிக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்கள். பார்த்ததும் தான் மணிரத்னம் ஏன் ஐஸ்வர்யா ராயை அந்த வேடத்திற்கு பயன்படுத்தினார் என்று தெரிந்தது. :)

படத்தில் மிகவும் கவர்ந்த ஒன்று ஒளிப்பதிவு. சந்தோஷ் சிவன், இந்த படத்திற்காக தேசிய விருது பெற்றார். ஒரு பாடல் காட்சியில் "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தில் வரும் "புதிய வானம்" பாடலைப் போன்றே இதிலும் ஒரு பாடல் வரும். அதில் வடகிழக்கு இந்திய குழந்தைகளுடன் மோகன்லால் ஆடிக்கொண்டிருப்பார். அப்போது செய்திருக்கும் ஒளிப்பதிவு அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். அந்த படத்தை கீழே இணைத்துள்ளேன்.
படத்தில் மோகன்லான்- பிரகாஷ்ராஜ் சந்திக்கும் ஒவ்வொரு காட்சியிலும் அவர்களுக்கு இடையிலான நட்பு சொல்லப்பட்டிருக்கும். ஒருவரைப் பற்றி மற்ற்வரிடம் போட்டுக்கொடுப்பவர்களை இருவருமே கண்டித்து அனுப்புவார்கள். தனியாக கட்சி ஆரம்பிப்பது, முதல்வராவது மற்றும் இறுதியில் எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு வரும் மக்கள் கூட்டம், என பல விடயங்களைப் பற்றி பேசும் போது இதில் எம்.ஜி.ஆர் -கருணாநிதி நட்பைப் பற்றி யாரும் அதிகம் பேசியதில்லை. ஒருவேளை படம் வெளியான நேரத்தில் வணிக ரீதியிலான வெற்றியை பெறாமல் போனது ஒரு காரணமாக இருக்கலாம்.
நேரம் கிடைத்தால் இந்த "இருவரை" பார்க்கவும்...
No comments :
Post a Comment