தலைவர் கவுண்டமணி தனது நகைச்சுவையில் அரசியல்வாதிகளை காய்ச்சி எடுப்பதில் வல்லவர். நம் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்களையும், அவர்கள் நம்மை ஏமாற்ற பயன்படுத்தும் கொள்கைகளும், ஓட்டு பற்றியும் தலைவரின் நக்கல் வசனங்களை தொகுத்துள்ளேன்...
காஷ்மீர்!. பேரை சொல்லும்போதே ஒருவித குளுமை ஆட்கொள்ளும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்ற இரு நாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட ஒரு தொன்மையான வளம் செரிந்த நிலப்பரப்பு.இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் அடைந்த தினம் முதல் காஷ்மீரின் சுதந்திரம் பரி போனது. காஷ்மீர் பிரச்சனை பற்றி பலருக்கு விரிவாக தெரிந்திருக்கும், அதைப் பற்றி அறியாதவர்களுக்கு ஒரு அறிமுகம். இதில் காஷ்மீரின் முக்கியமான நிகழ்வுகளை சற்று விரிவாகவே பார்க்கலாம்.
ஐ.டி துறையில் நடப்பது என்ன ? வினவு தளம் தரும் உபதேசம்
நான் விரும்பிப் படிக்கும் தளங்களில் வினவு ஒன்று. ஆனால் அவர்கள் பிரச்சனைகளை சரியாக சொல்லிவிட்டு சில சமயம் சொல்லும் தீர்வுகள் தான் படு மொண்ணையாக இருக்கிறது.இப்பொழுது கூட உமா மகேஸ்வரி கொலையில் அனைத்தையும் அலசி விட்டு கடைசியில் முதலாளித்துவ எதிர்ப்பு, தொழிற்சங்கம் என பாட ஆரம்பித்துவிட்டனர்.
சரி, தகவல் தொழில்னுட்பத் துறை ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் அமைத்துக் கொடுத்தால் இந்த பிரச்சனை எல்லாம் சரியாகிவிடுமா?
Frankly Speaking with Arnabஎன்ற ஒரு நிகழ்ச்சிக்கு ராகுல் காந்தி வந்திருந்தார். அர்னாப், ராகுலிடம் பல கேள்விகளை முன்வைக்கிறார், ஆனால் ராகுல் காந்தி சொன்ன பதில்கள் மூன்று விடயங்களை மட்டுமே சுற்றி வந்தது.
பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், தகவல் அறியும் உரிமை சட்டம், எல்ல நிலைகளிலும் இருக்கும் தற்போதைய செயல்திட்டங்களையும், வேலை செய்யும் முறையையும் மாற்ற வேண்டும்.(கவனிக்கவும் எல்லா நிலைகளிலும்!!).
அவர் பேசியதை, நம் தலைவர் கவுண்டமணியுடன் இணைத்து ஒரு காணொளி உருவாக்கியுள்ளனர்.ஆங்கிலதில் உள்ள கணொளியை தமிழில் (முடிந்தவரை) மொழிபெயர்கிறேன். காணொளியையும் இணைத்துள்ளேன். பாத்து படிச்சு தெளிவாயுடுங்க.
இங்கே அர்னாப் -கு பதிலாக கவுண்டமணி என்று போட்டுள்ளேன்.
கவுண்டமணி: ராகுல், உங்களை Franly Speaking நிகழ்ச்சிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி!
ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்
கவுண்டமணி: !!!???? , சரி, உங்கள் 10 வருட அரசியல் வாழ்க்கையில் இது தான் முதல் முறையாக நீங்கள் தொலைக்கட்சிக்கு அளிக்கும் பேட்டி...ஏன் இவ்வளவு இடைவெளி ?
ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
கவுண்டமணி: எனக்கு ஒரு வேண்டுகோள்...
ராகுல்: (பேசிக்கொண்டிருக்கும்போதே....) பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
கவுண்டமணி: நான் உங்கிட்ட என்ன கேட்டேன்?
ராகுல் : தகவல் அறியும் உரிமை சட்டம்..
கவுண்டமணி: நிகழ்சிக்கு போவதற்கு முன் சில இதில் நாம் விவாதிக்கப்ப்போகும் அடிப்பையான விடங்களைப் பார்க்கலாம். சரியா?
ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்
கவுண்டமணி: ... உட்கார்... நான் உங்கிட்ட என்ன கேட்டேன்?
ராகுல்: நீங்க என்ன வேணும்னாலும் கேளுங்கள்.
கவுண்டமணி: காங்கிரஸ் கட்சி நீங்கள் வ்ந்ததும் அதன் இப்போதைய தடைகளை தாங்குமா?
ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
கவுண்டமணி: (டென்சனாகிரார்!!).. அடேய்.... நான் உங்கிட்ட என்ன கேட்டேன்.. நீ என்ன பேசிட்டு இருக்க?
பாலையா: ஏன்ணே.. என்னாச்சு? ஏன் அவன போட்டு இப்பிடி படுத்துரீங்க?
கவுண்டமணி: நான் எவ்வளே பேரை பேட்டி எடுத்துருக்கேன். இவன மாதிரி ஒரு கல்லூளிமங்கனை பார்த்ததே இல்ல..
பாலையா: இப்பிடி கேட்டா அவன் எப்பிடி சொல்லுவான்.. இப்ப நான் கேக்குறேன். டேய், அண்ணா, உங்கிட்ட ஒரு கேள்வி கேட்டாரு ,
ராகுல் : தகவல் அறியும் உரிமை சட்டம்..
பாலையா: குஜராத்-ல மோடி க்கு எதிரா என்ன வியூகம் வச்சிருக்க ?
ராகுல் : தகவல் அறியும் உரிமை சட்டம்.. சொல்லுங்க.. நீங்க என்ன வேணும்னாலும் கேளுங்க?
பாலையா: நீ வந்ததுக்கு அப்புறம் காங்கிரஸ் ல என்ன பன்னனும்-னு இருக்க?
ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
கவுண்டமணி: அடேய்... உன்ன.... யோவ், விடுங்கய்யா.. நானே கேக்குறேன். டேய் நான் உங்கிட்ட என்ன கேட்டேன்.
ராகுல்: கேளுங்கனே..
கவுண்டமணி: நீ உங்க கட்சில என்ன பண்ண போற? தெளிவா ஒரு பதில் சொல்லும்மா ராஜா...
ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
கவுண்டமணி: டேய்.. இன்னிக்கு உன்ன கொல்லாம விட மாட்டேன்.. சார் புடிங்க சார் அவன..
இப்படி ஒரு மாங்கா மடையன் நம்ம நாட்டுக்கு பிரதமரா வந்தா... வெளங்கிரும்....
Thursday, 13 February 2014
யுவன் ஷங்கர் ராஜவின் புதிய பெயர்
அனைவருக்கும் வணக்கம்!.
மீண்டும் இங்கே அனைவரும் அரைத்த மாவையே
அரைத்து தோசை சுட போகிறேன்.யுவன் இசுலாமியரக பல மாதங்களாக வாழ்ந்து வந்த
நிலையில், சில நாட்களுக்கு முன்பு தான் தனது ட்விட்டர் கணக்கு மூலம்
அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதைப் பற்றி பல தளங்களில் விவாதங்கள்
நடைப்பெற்றுவிட்டன. யுவன் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போகிறார் என செய்திகளும் வருகின்றன. அது அவரது தனிப்பட்ட வாழ்க்கை, அவருக்கு பிடித்த மதத்தை பின்பற்றவோ , பிடித்த பெண்ணை மணம் முடிக்கவும் அவர்க்கு எல்லா வித உரிமையும் சுதந்திரமும் உள்ளது. அதில் மற்றவர்கள் மூக்கை நுழப்பது அநாகாரீகம்.