Friday, 25 July 2014

எம்.ஜி.ஆர் -ருக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்.

வணக்கம்.

எம்.ஜி.ஆர் - ஏ.ஆர்.ரகுமான் இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்கள். ஆனால் எம்.ஜி.ஆருக்கு ரகுமான் ஒரு பாடல் இல்லை கிட்டத்தட்ட நான்கு பாடல்கள் இசையமைத்துள்ளார்.

நான்கில் எனக்கு பிடித்த ஒரு மெலோடி பாடலை கீழே காணொளியாக கொடுத்துள்ளேன்.

Sunday, 6 July 2014

யாருக்கு ரசிகர்கள் அதிகம் ஷரபோவா அல்லது சச்சின் ?

வணக்கம்.

ஷரபோவா சச்சினை யாரென்று தெரியது என்று சொன்னது சச்சினுக்கு வேண்டுமானால் பெரிதாக இல்லாமல் இருக்கலம். ஆனால் அவரின் அடிபொடிகளாகிய சச்சின் ரசிகனுக்கு (வெறியர்களுக்கு என்றும் கூறலாம்) வேறு அனைத்தையும் விட முக்கியமான விடயம்.


S.Ramani அவர்களின் பதிவில் ஒரு பெயரிலாத கொரில்லா(அதான் பெயரே இல்லையே, என்ன பெயர் சொன்னால் என்ன) இந்த கேள்வியைத் தான் கேட்டது. ரமணி அவர்களின் பதிவின் இணைப்பு கீழே...
http://ramaniecuvellore.blogspot.in/2014/07/blog-post_5.html

Sunday, 29 June 2014

டிஷ்யூ பேப்பர்-ல் கையை துடைப்பவரா நீங்கள்?

வணக்கம்.

நீங்கள் அதிக அளவில் காகிதம் பயன்படுத்துபவரா.. அப்படியென்றால் உங்களுக்கு சமூகம்,சுற்றுச்சூழல் குறித்த அக்கரை குறைந்துள்ளது எனலாம். பெரும்பாலான உணவகங்களிலும், வணிக வளாகங்களிலும் டிஷ்யூ பேப்பர் எனப்படும் திசுத்தாள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. உலகில் காகித பயன்பாட்டுக்கு வெட்டப்படும் மரங்களில் கிட்டத்தட்ட 25 சதவீதம் இந்த திசுத்தாள் எடுத்துக்கொள்கிறது. இதை உருவாககவும் சாதாரண தாளை விட அதிக அளவில் தண்ணீர் தேவை. ஒரு பக்கம் நிலத்தடி நீரை உறிஞ்சி கொள்ளையடிக்கும் பண்ணாட்டு நிறுவனங்கள், நம் நாட்டின் மலைப் பாங்கான இடங்களில் மரங்களை வெட்டி, கிடைக்கும் சொற்ப தண்ணீரையும் இப்படி வேறு வழியில் திருப்பிவிடுகின்றனர். இதுவரை நீங்கள் எவ்வளவு திசுத்தாளை பயன்படுத்தியிருப்பீர்கள். 5 வருடம் தினமும் திசுத்தாள் பயன்படுத்தும் ஒரு மனிதன் சாராசரியாக 10 மரங்களை அழித்துள்ளனர். இந்த திசுத்தாள் பயன்பாடடில் முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா. அங்கு இதற்காகவே என மரங்களை வளர்த்தும் வருகின்றனர். ஆனால் நம் தாய்த்திரு(ட்டு) நாட்டில் இதை எதிர்பார்கக முடியுமா. பெயருக்காக மரங்களை வளர்த்துவிட்டு காடுகளில் மரங்களை வெட்டுவதே இங்கு நடைமுறை. இப்படிப்பட்ட நாட்டில் இருந்து தான் தனியாளாக சுமார் 30 ஆண்டுகளாக 1360 ஹெக்டேர் வனத்தை வளர்த்து பராமரித்து வருகிறார் ஒருவர்.

Friday, 20 June 2014

ஈராக் படுகொலைகள்... ஆவணப்படம் வெளியீடு. 21 +

ஈராக் , சிரியா உள்ளிட்ட பகுதிகளில் தீவிரவாதிகள் கலகத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

கொலைக்களத்தில் பதிவான காட்சிகளை இணைத்து காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது. பலர் ஈவிரக்கம் இன்றி சுட்டுக் கொல்லப்படுவதும், தலைகளை கொய்வதும் என பார்த்தாலே குலை நடுங்கச் செய்யும் காட்சிகளை கொண்டுள்ளது இக்காணொளி.



Sunday, 15 June 2014

வலைப்பூக்களில் இருந்து தகவல்களைத் திருடுவது எப்படி?

வணக்கம்!!!

பண்ணாட்டு நிறுவனங்க்கள் பல தகவல் மேலாண்மை மென்பொருட்களை பயன்படுத்தினாலும், சாதாரண பயனாளர்களின் தகவல் மேலாண்மைக்கு பெரும் உதவியாக இருப்பவை வலைப்பூக்கள்.இவற்றை பலதரப்பட்ட தகவல்களை சேமிக்க பயன்பதுத்தும் போதும் இதனை வடிவமைத்த நிறுவனங்கள் முறையான பாதுகாப்பு மற்றும் காப்புரிமை பற்றி பயனாளர்களுக்கு சுலபமாக தெரியும் அளவிற்கு தகவல்களை தெரிவிப்பதில்லை. உதாரணமாக, "Blogger" சேவையை எடுத்துக்க் கொண்டால் ஒவ்வொரு Blogger வலைப்பூவும் அதன் தனிப்பட்ட காப்புரிமையுடனே வருகிறது. ஆனால் தகவல் திருட்டு நடந்துகொண்டு தான் உள்ளது. எனவே பயனாளர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் வலைப்பூவில் "Copy/paste" செய்யும் விருப்பத்தேர்வை கூட முடக்கிவிடுகிறார்கள்.

சரி, நேரிடையாக விடயத்திற்கு வருகிறேன். இப்படிப்பட்ட வலைப்பூக்களில் உள்ள தகவல்களை எப்படி "Copy/Paste" செய்வது. மக்களே இதுவும் ஒரு திருட்டு தான், அறிவுத் திருட்டு.