Monday, 21 October 2013

வேற்று கிரகவாசிகளிடமிருந்து ஒரு அழைப்பு. WOW! சமிக்ஞை...

ஆண்டுக்கணக்கில் தேடிக்கொண்டிருக்கும் வேற்று கிரகவாசிகளிடமிருந்து ஒரு தொடர்பு கிடைத்தால்?. உள்ளூரில் நாம் எதிர்பார்க்கும் நபர், குறிப்பாக ஒரு பிரபலம் நம்மைத் தொடர்பு கொண்டாலே உடனே எதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, ஆரவாரம், உற்சாகம் நம்மைத் தொற்றிக்கொள்ளும். இதுதான் அமெரிக்காவின் ஒஹியோ-வில் 1977-ஆம் ஆண்டு ஆகஸ்டு 18 அன்று நடந்தது.ஜெர்ரி எல்மன், ஒரு அமெரிக்க வான்வெளி ஆய்வாளர். 

  
Jerry Ehman


ஒஹியோ பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்தவர், "SETI" என்ற வேற்று கிரக உயிரின தேடுதல் ஆய்வுகளில் தன்முனைப்பளாரக ஈடுபட்டிருந்தவர். ஒருநாள் ஜெர்ரி தன் சாப்பாட்டு மேசையில் வருக்கப்பட்ட ரொட்டிகளை சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரம் அவரது கணிணியுடன் இணைக்கப்பட்டிருந்த அச்சு எந்திரத்தில்  இருந்து ஆறு எண்களும்,எழுத்துக்களும் கொண்ட ஒரு அச்சுப்படி(print out) வருவதைக் கண்டார். அதை எடுத்துப் படித்துப்பார்த்த அவர் ஆச்சர்யத்தின் உச்சிக்கே போனார். பின் அந்த அச்சுப்படி தாளில் "Wow!" என எழுதினார்.
 
Wow! சமிக்ஞை

ஜெர்ரி ஆய்வகத்தில் வேற்று கிரக உயிரின தேடுதல் ஆய்வுகளில் ரேடியோ அலைகளில் வரும் தகவல்களை "SETI" ஆய்வகத்திற்கு அனுப்பும் பிரிவில் பணியில் இருந்தார்.விண்வெளியின் தொலைவிலிருந்து வரும் தகவல்களையும்,சமிக்ஞைகளையும் படித்துப்பார்த்து ஏதேனும் வேற்று கிரகவாசிகள் தொடர்பு கொண்டார்களா என அனைவரும் சிண்டப் பிய்த்துக்கொண்டிருந்த நேரம். ஒவ்வொரு வாரமும் "The Big Ear" ஒஹியோவின் தொலைநோக்கி மையத்திலிருந்து ஒருவர் அங்கு திரட்டிய தகவல்களை ஜெர்ரியிடம் தருவார். அதைப் படித்து ஏதேனும் முக்கியமான தகவல்களோ, தொடர்போ இருந்தால் அதனை ஜெர்ரி "SETI" மையத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இந்த நிகழ்விற்கு பதினெட்டு வருடங்களுக்கு முன் Philip Morrison and Giuseppe Cocconi என  இரண்டு இயற்பியலாளர்கள் வேற்று கிரகத்தில் இருந்து யாரேனும் நம்மைத் தொடர்பு கொண்டால் அது எப்படிப்பட்ட சமிக்ஞையாக இருக்கும் என சிறிய கருத்து ஒன்றை கூறினார்கள். "ரேடியோ அலைகள் உருவாக்குவதற்கு மிக சுலபமானவை மற்றும் மிக நீண்ட தொலைவு போகக்கூடியவை. ஒரு ஹைட்ரோஜென் அணுவை எறியவிடுவதன் மூலம் கூட இதை உருவாக்கலம் எனவே வேற்று கிரக வாசிகள் நம்மை தொடர்பு கொள்ள நிச்சயம் ரேடியோ அலைகளையே பயன்படுத்துவார்கள் மேலும் இந்த முறையில் கிடைக்கும் அலைகளின் அதிவெண்(Frequency) 1420MHZ என்ற அளவில் இருக்கும், எனவே விண்வெளியில் சற்று சத்தமாக எதேனும் கிடைக்கிறதா என்று தேடுங்கள் என கூறியிருந்தனர்".
 
Wow! சமிக்ஞையின் அமைப்பு


ஆகஸ்டு 15 1977-ல் இந்த மாதிரியான ஒரு ரேடியோ அலை தான் புவியை வந்தடைந்தது. ஜெர்ரி பார்த்த அந்த ரேடியோ சமிக்ஞை 1420MHZ -க்கு மிக அருகில் இருந்தது அதாவது 1420.4556MHZ.இந்த சமிக்ஞை 72 நொடிகளுக்கு நீடித்தது.சமிக்ஞையின் அமைப்பும் கூட Morrison மற்றும் Cocconi கூறிய வகையில் இருந்தது ஆச்சர்யம். அந்த அச்சுப்படியில் உள்ள அலைவரிசை 6EQUJ5 என்ற வரிசயில் பதிவானது. ரேடியோ அலைவரிசையின் செறிவு(intensity) எண்களாலும், எழுத்துக்களாலும் அளக்கப்படுகின்றன. 0 என்றால் மிக குறைந்த அளவு, 9 -க்கு பிறகு  10-க்கு பதிலாக  A, 11-க்கு B , பின்னர் Z வரை இப்படியே இது தொடரும். எனவே ஆங்கில எழுத்தின் கடைசியை நெருங்கும்போது அலைவரிசையின் செறிவும் அதிகமாக இருக்கும். 

சமிக்ஞையில் U
ஜெர்ரி கண்ட சமிக்ஞையில் U என்ற எழுத்து இருப்பதைப் பார்த்து மனிதர் அசந்துவிட்டர் ஏனென்றால் இது ஆங்கில கடைசி எழுத்தின் வெறும் நாங்கு எழுத்துக்களே குறைவாக இருந்தது. சமிக்ஞையை ஆரய்ந்து முடித்தபின் "இதுவரையில் நான் இப்படிப்பட்ட ஒரு சமிக்ஞையை பார்த்ததில்லை என்று தெரிவித்தார்." பின்னர் தான் அதன் அருகில் "Wow!" என்று எழுதினார். "சாதாரண சமிக்ஞையைப்போல் 30 மடங்கு சக்தி வாய்ந்தது U என்ற செறிவளவு, கிட்டத்தட்ட அது ஒரு அழைப்பு போல்; அதானால் தான் அதன் அருகில் "Wow!" என்று  எழுதிவிட்டேன் "என்றார் ஜெர்ரி .
ஜெர்ரியைப் போலவே செ.டியும்(SETI) ஆச்சர்யம் அடந்தது. அந்த சமிக்ஞை எங்கிருந்து யாரால் அனுப்பப்பட்டது.அது ஒரு குறுகிய "AM/FM" சமிக்ஞை போலவே இருந்தது, இறுதியில் நமக்கு அருகில் இருக்கும் "சாகிடேரியஸ்" நட்சத்திரக்கூட்டத்தில் இருந்து இந்த சமிக்ஞை வந்தது தெரிந்து விஞ்ஞானிகள் அந்த பகுதி முழுவதையும் சல்லடை போட்டுத் தேடினார்கள். ஆனால் ஒன்றும் அகப்படவில்லை. 

"சாகிடேரியஸ்" நட்சத்திரக்கூட்டம்
அதே அலைவரிசை கொண்ட சமிக்ஞை திருப்பி அனுப்பியும் அதற்கும் பதில் கிடைக்கப்பெறவில்லை. ஒருவேளை அந்த சமிக்ஞை அனுப்பியவர்கள் அந்த இடத்தில் இருந்து அகன்று விட்டிருக்கலாம் என்று யூகித்தனர். மேலும் மற்ற பல கோணங்களிலும் இது ஆராயப்பட்டது, இந்த சமிக்ஞை ஏதேனும் செயற்கைகோள், ராணுவ செய்தி அனுப்பும் எந்திரங்கள்,வின்வெளி குப்பையானா சில வின்கலங்கள், தவறுதலாக அனுப்பப்பட்ட பொது சமிக்ஞைகளாக இருக்கும எனவும் ஆராயப்பட்டன. ஆனால் இதற்கு எல்லாம் கிடைத்த பதில் இல்லை என்பதே. "தகவல் அனுப்புபவர்கள் கண்டிப்பக ஒரு முறைக்கு மேல் தகவலை அனுப்புவார்கள் ஆனால் இது ஒரு முறை மட்டுமே அனுப்பப்பட்டது , ஆகஸ்டு 15-க்கு பிறகு இப்படி எதுவும் நம்மை அடையவில்லை, ஒரு அழைப்பை நாம் நிச்சயம் செய்வதற்கும் அதுவே சிறந்த வழி" என்றார் ஜெர்ரி. நிச்சயமாக இது எதோ விண்வெளி பயணிகள் அல்லது வேற்றுகிரகவாசிகள் அனுப்பிய தகவல் தான், ஆனால் அனுப்பியவர்களை நாம் தவறவிட்டுவிட்டோம் எனவும் ஆய்வுகள்  செய்யப்பட்டன. எப்படியிருந்தாலும் அயல் கிரகவாசிகள் நம்மை தொடர்புகொள்ளும் நோக்கில் நம்மை வந்தடந்த ஒரே சமிக்ஞை  WOW! மட்டுமே.