நான் விரும்பிப் படிக்கும் தளங்களில் வினவு ஒன்று. ஆனால் அவர்கள் பிரச்சனைகளை சரியாக சொல்லிவிட்டு சில சமயம் சொல்லும் தீர்வுகள் தான் படு மொண்ணையாக இருக்கிறது.இப்பொழுது கூட உமா மகேஸ்வரி கொலையில் அனைத்தையும் அலசி விட்டு கடைசியில் முதலாளித்துவ எதிர்ப்பு, தொழிற்சங்கம் என பாட ஆரம்பித்துவிட்டனர்.
சரி, தகவல் தொழில்னுட்பத் துறை ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் அமைத்துக் கொடுத்தால் இந்த பிரச்சனை எல்லாம் சரியாகிவிடுமா?
முதலில் உள்ளே என்ன நடக்கிறது என்பதே வெளியில் பல சமயம் தெரிவதில்லை. வெளியில் தெரிவதெல்லாம் ஐந்திலக்க ஊதியம், ஆங்கிலத்தில் பேசிவது, HI-FI வாழ்க்கை. எல்லாமே வெளியில் இருந்து பார்த்தால் நன்றாக தான் இருக்கும்.
அப்போ உள்ளே என்ன நடக்கிறது?. இதில் கூறப்படும் தகவல்கள் பலவற்றை நீங்கள் அறிந்திருக்கலாம்!!.
பொறியியல் படித்த மாணவர்கள் தமிழ்நாட்டில் முதன் முதலாக அதிகமாக தேவைப்பட்ட ஆண்டு 1999. Y2k எனப்படும் கணிணியில் தேதி மாறும் குழப்பம் கண்டரியப்பட்ட ஆண்டு. பொதுவாக கணிணிகள் 8-பிட் நினைவகம் கொண்டு இயங்கிய காலம். அப்போதெல்லம் நினைவகம் இன்று போல் வளர்ச்சி அடையாததால், சேமிக்கும் பொருட்டு கடைசி இரண்டு எண்களை மட்டும் ஆண்டுகளை குறிக்க பயன்படுத்தினார்கள். ஆனால், 2000 வந்த போது கடைசி இரண்டு "00"-களை 1900 என கணிணிகள் எடித்துக்கொண்டன. இதை சரி செய்வதற்கு 16-பிட் நினைவகம் கொண்டதாக கணிணி நிரல்களில் மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. இதற்கு உலகம் முழுவதும் உள்ள கணிணி வல்லுனர்கள் உழைத்ததன் மூலம் கணிணிகள் எந்த பிரச்சனையும் இன்றி 2000-கு மாறின. ஆனால் அவற்றின் பின்னால் இருந்த தகவல் தொழில்னுட்ப ஊழியர்களின் உழைப்பு இன்று வரை வெளியில் தெரியவில்லை.அது முதல் புதிய கண்டிபிடிப்புகள் வளர, ஐ.டி துறையினருக்கு பெரிதாக பிரச்சனை ஏதுமில்லை.
ஆனால் தற்போது, நிதிச் சரிவின் பின் ஐ.டியில் ஆள் எடுப்பதும் குறைந்து போய், சலுகைகளையும் பிடுங்கி விட்டார்கள். ஒரு மாணவன் கல்லூரி முடிந்து உள்ளே வரும் போதே, இவர்கள் சொல்லிக் கொடுக்கும் முதல் விடயம், எதிர்த்து கேள்வி கேட்காதே, அடுத்தவனுக்கு என்ன ஆனால் உனக்கென்ன, உனக்கு வேண்டியதை மட்டும் கேள். முதலில் training என்று ஒரு ஆறு மாதம் படுத்துவார்கள். கல்லூரியில் நான்கு வருடங்கள் படித்தும் புரியாததை ஆறு மாதத்தில் திணிப்பார்கள். கூடவே, வரம் சில தேர்வுகளை வைத்து ஒவ்வொருவராக வீட்டுக்கு அனுப்புவார்கள், இதை பார்க்கும் மற்றவர்களுக்கு இயல்பாகவே அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்ற மன நிலை வந்து விடும். உண்மையில் இந்த training என்பது புதிய ஊழியர்களை மனதளவில் ஒரு ஆட்டு மந்தையாக மாற்றுவதே. இதன் பின் training முடித்து ப்ராஜக்டில் சேர்ந்து விட்டால் கொஞ்சம் பரவாயில்லை, ஆனால் ஏதும் இல்லாமல் பெஞ்ச் என்று சும்மவே உட்கார வைத்து சம்பளம் கொடுப்பார்கள், முதல் சில நாட்கள் எதுவும் தோனாது,ஆனால் நம்மோடு training போனவர்கள் சில நாட்களுக்கு பின் வந்து "இப்படியே இருந்தால் தூக்கிருவானுங்க மச்சி" என வயிற்றில் ஆசிடை ஊற்றி விட்டு போய்விடுவார்கள். அப்புறம் என்ன ஏதாவது ஒரு ப்ராஜக்டில் போடுங்கள் என்று H.R -ன் காலில் விழ வேண்டியது தான்.
இவர்கள் ஊழியர்களின் காலம் சார்ந்து வாடிக்கையாளரிடம் பணம் பெரும் முறையை பெரும்பாலும் பின்பற்றுகின்றனர். அதாவது ஒரு ஊழியர் ஒரு குறிப்பிட்ட ப்ராஜக்டில் 60 மணி நேரம் வேலை செய்துள்ளார் என்றால் ஒரு மணிக்கு இவ்வளவு என்று காசை கறந்து விடுவார்கள். ஆனால் இப்பொழுது வாடிக்கையாளர்கள், எவ்வளவு வேலை முடிந்துள்ளதோ அந்த அடிப்படையில் பணம் தருகிறோம் என கூறுவதாலும், குறைந்த ஊழியர்களைக் கொண்டே வேலைகளை முடிக்க பணிக்கப்படுகிறார்கள். இதன்னல் தான் இன்றைய நிலையில் ஓரே நாளில் சாதாரணமாக சில நூறு பணியாளர்கள் கூட வீட்டுக்கு அனுப்பபடுகிறார்கள்.
இப்பொழுது, ஒப்பந்த தொழிலாளர்களை அனைத்து தகவல் தொழில்னுட்ப நிறுவனங்களும் பணியில் அமர்த்த தொடங்கிவிட்டர்கள். இவர்களுக்கு நிரந்தர தொழிலார்கள் போல் எதுவும் சலுகைகள், ஊதியங்கள் கிடையாது. ஊதியமும் நிரந்தர தொழிலாளர்கள் வாங்குவதில் பாதி தான். ஆனாலும் இப்படிப்பட்ட நிலையில் கூட எதோ அனுபவம் வேண்டி இதில் அனைவரும் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். இப்படியே போனால், அனைவரையும் ஒப்பந்த தொழிலாளர்களாக வைத்துக் கொள்ளவும் இவர்கள் தயங்க மாட்டார்கள்.
இவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் வினவு தளத்தில் எழுதுபவர்களுக்கு முதலாளிகளை
எதிர்த்து ஐ.டி துறையினர் பலமான தொழிற்சங்கம் அமைப்பதும், உரிமைகளை
பெருவதும் தான் முக்கியம். ஒன்று மட்டும் நிச்சயம், ஏதேனும் இப்படி நடக்கப்
போவது அறிந்தால், நாஸ்காம்-ல் ஒன்று கூடி பேசி , உடனே அவர்கள் பெட்டியை கட்டிக்கொண்டு சீனவுக்கும், பிலிப்பைன்சுக்கும் போய்விடுவார்கள். பின் பொறியியல் படிப்பிற்கு என்று இருக்கும் 500 -க்கும் மேற்பட்ட ஆட்டுமந்தை கல்லூரிகளையும் என்ன செய்வதாக உத்தேசம் தோழர்களே?பின்னர் அமெரிக்காவில் ஏற்பட்ட நிலை தான் இந்தியாவிலும். கீழேயுள்ள படத்தில் அயல் பணிகள் மாற்றி கொடுத்ததால் அங்கு இருக்கும் பட்டதாரிக்கு ஏற்பட்ட நிலைமை.
![]() | |
அனைத்து ஐ.டி தொழிலாளர்களின் மனநிலை இது தான்.. "முடிந்தவரை சம்பாதித்துவிட்டு ஏதேனும் தொழில் செய்து வாழலாம், அல்லது ஊருக்கு போய் திரும்பவும் விவசாயம் பார்கலாம்".
ஐ.டி துறை தான் எப்போதே ஒடுங்கி விட்டதே... விஷயம் தெரிந்தவர்கள் போகவே மாட்டார்கள்... போகவும் விட மாட்டார்கள்...
ReplyDelete// முடிந்தவரை சம்பாதித்துவிட்டு // இந்த முடிந்தவரை தான் பிரச்சனையே... இந்த முடிந்தவரை சம்பாதித்து விட்டு, தற்போது எழக்கூட முடியாமல் Special "பெட் ரெஸ்ட்"டில் இருக்கிறார்கள் சில நண்பர்கள்... சம்பாதித்த பணம் எல்லாம் இப்போது மருத்துவருக்கு + மருத்துவ செலவிற்கு...!
ஆமாம் விவசாயம் அவ்வளவு எளிதா என்ன...?
வாங்க தலைவா..
Deleteதற்போதைய மனநிலை முடிந்தவரை என்பது தானாக ஒரு தொழில் தொடங்கும் அளவுக்கு என்னும் அளவிலும் உள்ளது.
விடயம் தெரிந்தவர்கள் போகவே மாட்டார்கள் தான் :) :)
//ஆமாம் விவசாயம் அவ்வளவு எளிதா என்ன...?//
பலர் இப்பொழுது இயற்கை விவசாயத்திலும் காளன் உற்பத்தியிலும் இருக்கிறார்கள். தனியாக பயிற்சி எடுத்து செய்கிறார்கள். எளிது என்றெல்லாம் இல்லை.
சொர்க பூமி யாக ச்சொல்லப்பட்ட ஐ.டி துறை நரக பூமியாக மாறி விட்டதா !
ReplyDeleteவாங்க .. வருகைக்கு நன்றி.
Deleteஅது என்றுமே சொர்க பூமியாக இருந்ததில்லை ஐயா(என்னைபொருத்தவரையில்).. எல்லாம் வெளிப்பூச்சு தான்.
//இப்படியே போனால், அனைவரையும் ஒப்பந்த தொழிலாளர்களாக வைத்துக் கொள்ளவும் இவர்கள் தயங்க மாட்டார்கள்.//
ReplyDeleteஎதற்கு இவ்வளவு பதட்டம் நண்பரே, அடிமை வேலை செய்ய நீங்கள் வேண்டுமானால் தயாராக இருக்கலாம். வரும் தலைமுறையும் இப்படி தான் இருக்க வேண்டும் என்பது போல் நீங்கள் பேசுவது எவ்வளவு பெரிய அபத்தம், பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் இருக்கின்றனவே!!..
இந்த வேலை இல்லையென்றால் வேறு வேலை என்ற பக்குவத்தை வளர்த்து கொள்ளாதது எவருடைய தவறு.. சாணியாக மிதித்தாலும் பணம் தருகிறான் என்று மண்டியிடுவது எவ்வளவு அபத்தம்...
நானும் மென்பொருள் சார்ந்த நிறுவனத்தில் தான் பணி செய்கிறேன். ஒரு கம்பெனியை தூக்கி கொண்டு இன்னொரு நாட்டில் நிறுவது என்பது முதலாளிகளுக்கு ஒன்றும் எளிதான காரியம் அல்ல. எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது... உங்களை நீங்களே மிரட்டி கொள்கிறீர்கள்..
பணியிடங்களில் உங்களுக்கு அடிப்படை தேவைகளையாவது கேட்க முனையுங்கள் அல்லது கேட்பவர்களையாவது சற்று ஆதரியுங்கள்...
//அடிமை வேலை செய்ய நீங்கள் வேண்டுமானால் தயாராக இருக்கலாம். வரும் தலைமுறையும் இப்படி தான் இருக்க வேண்டும் என்பது போல் நீங்கள் பேசுவது எவ்வளவு பெரிய அபத்தம், பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் இருக்கின்றனவே!!..//
Deleteவாங்க நாடோடி..
வரும் தலைமுறை அப்படி இருக்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாக இப்போதிருக்கும் ஊழியர்களின் நிலையைப் பற்றித் தான். இன்று வரும் மாணவர்கள் மிகவும் தெளிவு, ஆனால் அவர்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்குமளவுக்கு வய்ப்புகளை நமது கல்வி முறை வழங்காததே இப்படி நிறுவனங்களின் இழுப்புக்கெல்லம் போகிறார்கள்.
உங்களுக்கு தெரிந்திருக்கும் விப்ரோ நிறுவனம் "WASE" என்னும் நிலையில் மாணவர்களை 7000-8000 சம்பளம் மற்றும் 4 வருட ஒப்பந்தம் போட்டு வேலையில் அமர்த்தியுள்ளன.
//ஒரு கம்பெனியை தூக்கி கொண்டு இன்னொரு நாட்டில் நிறுவது என்பது முதலாளிகளுக்கு ஒன்றும் எளிதான காரியம் அல்ல. எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது..//
அப்படி பார்த்தால் இந்தியாவிற்கு இத்தனை offshore development center வந்திருக்க முடியாது. லாபம் ஒன்றே குறிக்கோளாக செயல்படும் முதலைகளுக்கு எவன் எக்கேடு கெட்டால் என்ன...
//ஆனால் அவர்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்குமளவுக்கு வய்ப்புகளை நமது கல்வி முறை வழங்காததே இப்படி நிறுவனங்களின் இழுப்புக்கெல்லம் போகிறார்கள்.//
Deleteஇதைப் பற்றி தான் பேச வேண்டும் என்று சொல்லுகிறேன். பெரிய நிறுவனங்களில் வேலை செய்வதற்கு எடுக்கும் முயற்ச்சியில் பாதியை கூட தொழில் தொடங்குவதற்கு நாம் எடுப்பதில்லை என்பதையும் வசதியாக மறந்து விடுகிறோம்.
//அப்படி பார்த்தால் இந்தியாவிற்கு இத்தனை offshore development center வந்திருக்க முடியாது. லாபம் ஒன்றே குறிக்கோளாக செயல்படும் முதலைகளுக்கு எவன் எக்கேடு கெட்டால் என்ன...//
இந்தியாவில் வந்து தொழில் தொடங்குவதற்கும், வெளி நாடுகளில் தொழில் தொடங்குவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. நாம் கதவே இல்லாமல் இருக்கிறேம். அதனால் தான் இங்கு சில சின்ன வெளி நாட்டு கம்பெனிகள் கூட எளிதாக கடை விரிக்க முடிகிறது..
//உங்களுக்கு தெரிந்திருக்கும் விப்ரோ நிறுவனம் "WASE" என்னும் நிலையில் மாணவர்களை 7000-8000 சம்பளம் மற்றும் 4 வருட ஒப்பந்தம் போட்டு வேலையில் அமர்த்தியுள்ளன. //
இதை விட நல்ல சம்பளம் கொடுக்கும் எவ்வளவோ சின்ன நிறுவனங்கள் இருக்கிறது என்பதையும் நீங்கள் ஒத்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். "விப்ரோ" இந்த பெயருக்காவே போய் விழுபார்களை என்னவென்று சொல்வது.
கிருஷ்ணா,
ReplyDeleteஐ.டி பற்றிய கவலை சரியானது தான் ,ஆனால் பொறியியல் படிப்பவர்கள் எல்லாம் ஐ.டிய நம்பித்தான் படிப்பதாக நினைத்துக்கொண்டுள்ளீர்கள் அதான் சரியல்ல.
ஐ.டி துறை ஓகோனூ ஓடிய காலத்தில் கூட சுமார் 20,000 பேருக்கு மேல் தமிழக பொறியியல் மாணவர்கள் ஐடியில் சேரவில்லைனு,நாஸ்காம், வேலைவாய்ப்பு பெற்ற பொறியியல் மாணவர்களை சதவீத அடிப்படையில் மாநில வாரியாக ஆண்டு தோறும் வெளியிடுகிறது பார்த்தது இல்லையா?
தமிழ்நாடு 20வது இடத்தில் இருந்தது கடந்தாண்டு. கடந்த ஆண்டும் 500 பொறியியல் கல்லூரிகள் தான் இருந்தன.
//500 -க்கும் மேற்பட்ட ஆட்டுமந்தை கல்லூரிகளையும் என்ன செய்வதாக உத்தேசம் தோழர்களே?//
மூடிட்டு போவாங்க,அதைப்பற்றிய கவலை காலேஜ் கட்டினவங்களுக்கு,உங்களுக்கு சொந்தமா பொறியியல் கல்லூரி இருக்கா :-))
ஆசிரியர்களுக்கு வேலைக்கிடைக்குதுனு சுமார் 600 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளை போட்டிப்போட்டு உருவாக்கினாங்க, வேலை வாய்ப்பு குறைஞ்சதும் பலரும் மூடிட்டு போயிட்டாங்க, இத்தனை ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் தொறந்ததும், மூடியதும் பற்றி செய்தியாச்சும் கேள்விப்பட்டிங்களா?
இதெல்லாம் கடந்த 5 ஆண்டுகளில் தான் நடந்தது.
கண்னை மூடிக்கிட்டு மாணவர்களாக ஓடிப்போய் சேர்வது படிப்படியாக குறையும்.
AICTE charman S.S.மகந்தா வின் பேட்டி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்,ஒரு ரெண்டு மாசம் முன்னர் வந்துச்சு படிச்சுப்பாருங்க, பொறியியல் மாணவர்களின் வேலை வாய்ப்பினை பற்றி சொல்லி இருக்கார்.
times of india செய்தி கிடைக்கலை,இந்துவில் வந்த அதை ஒத்த பேட்டி.
Deleteநாஸ்காம் ஆரம்பத்தில் இருந்தே வேலை வாய்ப்பினை குறைத்தே மதிப்பிடுகிறது, அப்படி இருந்தும் இத்தனை பொறியியல் கல்லூரிகள் உருவாகின.
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-educationplus/number-counts-quality-matters/article4450319.ece
வாங்க வவ்வால்.
Deleteஉரலியில் உள்ள செய்தியை படித்தேன்.
முக்கியமாக "மாணவர்களின் செயல்திறன் மற்றும் தரம்" பற்றி சொலியுள்ளனர். ஆனால், நம் மாணவர்களுக்கு வாய்க்கும் ஆசிரியர்களிடம் இருந்து இன்றைய தேதியில் கற்றுக் கொள்ள ஒன்றும் இல்லை. சரி, அவர்களாகவே அறிவை வளர்க்கலாம் என்றாலும், கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகள் வெளியில் சொல்ல முடியாத அளவில் உள்ளன.
//ஐ.டி துறை ஓகோனூ ஓடிய காலத்தில் கூட சுமார் 20,000 பேருக்கு மேல் தமிழக பொறியியல் மாணவர்கள் ஐடியில் சேரவில்லைனு,நாஸ்காம், வேலைவாய்ப்பு பெற்ற பொறியியல் மாணவர்களை சதவீத அடிப்படையில் மாநில வாரியாக ஆண்டு தோறும் வெளியிடுகிறது பார்த்தது இல்லையா?//
இதை வருடம் தோறும் செய்து வருகிறார்கள். எங்களுக்கு திறமை மிகுந்த ஊழியர்கள் கிடைப்பது இல்லை என பாடும் நிறுவனங்கள் நிறைய. நாஸ்காம் எனற அமைப்பில் எனக்கு என்னமோ உள்ளடி வேலைகள் கொண்டதாகவே படுகிறது.
// நாஸ்காம்-ல் ஒன்று கூடி பேசி , உடனே அவர்கள் பெட்டியை கட்டிக்கொண்டு சீனவுக்கும், பிலிப்பைன்சுக்கும் போய்விடுவார்கள்.//
ReplyDelete:)
வாங்க குட்டி பிசாசு...
Deleteபொழப்பு சிரிப்ப சிரிக்குதுல்ல...
Yes... After earning of enough money, he cannot go to agriculture because their land was already made into 100s of plots.
ReplyDeleteIf NASCOM taken some other recession, after that people like VINAVU will have many opportunities on public interest. They will get many manifestos for them like Government has to open IT companies, Government has to take all private colleges in control overnite and offer free education for all. Besides all the staff of that colleges to be taken as government staff and they will separately ask for many more on their part from Government.
One member from a family to be given IT Job through Government. They have to be Diversified as BC, MBC, SC, ST, MINORITY and all of them to be given special allowances. Particularly some category SC, ST, MINORITIES to be brought directly to government job from newly undertaken colleges without any exam, as we know India is a secular country.
Such many more opportunities will be available if all ITens start their own Unions.
//அனைத்து ஐ.டி தொழிலாளர்களின் மனநிலை இது தான்.. "முடிந்தவரை சம்பாதித்துவிட்டு ஏதேனும் தொழில் செய்து வாழலாம், அல்லது ஊருக்கு போய் திரும்பவும் விவசாயம் பார்கலாம்".//
ReplyDelete100% உன்மை எனக்கு தெரிந்தவரை நான் உட்பட ஐ.டி தொழிலாளர்களின் மனநிலை இதுதான் .
வாங்க கமலக்கண்னன், வருகைக்கு நன்றி.
ReplyDeleteஎனக்கு தெரிந்தவரை, இவ்வளவு நாள் யாரோ ஒருவனுக்கு உழைத்தோம், இனிமேல் நம் மண்ணுக்கு உழைப்போம் என்னும் நினைப்பும் காரணம்.
என்னங்க சும்மா காமெடி பன்ணிட்டு, தனபாலன் அவர்கள் கேட்டது போல் விவசாயம் செய்வது என்பது அவ்வளவு எளிதாக போய்விட்டாதா என்ன???
Deleteஇவ்வளவு பேசும் நாம் விவசாய வியாபாரிகளிடம் ஒரு பொருளையாவது வாங்குகிறோமா என்று சிந்தியுங்கள், அவர்கள் தான் பொருட்களை விளைய வைக்கிறார்கள். அவர்களிடம் வாங்கினால் அந்த பொருளுக்கான லாபம் அவர்களுக்கு கிடைக்கும். ஐடி துறையில் வேலை பார்க்கும் ஒருவராது இது போன்ற கடைகளில் வாங்குவதை பார்த்து இருக்கிறீர்களா??.. எல்லோரும் ரிலையன்ஸ் பிரஸ்லிலும், மோர் மற்றும் பிக் பஜாரிலுல் வாங்கினால் விவசாயி எங்கு விவசாயம் செய்வது, விவசாய நிலம் ஒன்று எப்படி இருக்கும். அவ்வளவு விவசாய நிலங்களும் இன்று பிளாட்டாக மாறி வருகிறது இதை வாங்குபவர்கள் யார் என்று உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்... என்னவோ போங்க...
உங்களுக்கு விவசாயம் பண்ண விருப்பம் இல்லையெனில் விட்டுவிடுங்கள். ஆனால் ஐ.டி யில் இருக்கும் யாருக்கும் விருப்பம் இல்லை என்பது போல் உள்ளது உங்கள் கருத்துக்கள்.
Deleteஎளிது இல்லை என்றும் கூறி விட்டேன், வேறு பதில் எதையாவது எதிர்பார்க்கிறீர்களா?
எனக்கு தெரிந்த ஒருவர், ஈரோட்டில் இருந்து வந்து வட தமிழகத்தில் இயற்கை விவசாயம் மற்றும் மரபு சார்ந்த காளான் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். அவர் வாங்கியதும் கிட்டத்தட்ட ப்ளாட் போட்ட நிலத்தை தான். வருவதற்கு முன் ஒரு ஐ.டி நிறுவனத்தில் மாதம் 2 லட்சம் சம்பளம்.
//ஐடி துறையில் வேலை பார்க்கும் ஒருவராது இது போன்ற கடைகளில் வாங்குவதை பார்த்து இருக்கிறீர்களா??.. எல்லோரும் ரிலையன்ஸ் பிரஸ்லிலும், மோர் மற்றும் பிக் பஜாரிலுல் வாங்கினால் விவசாயி எங்கு விவசாயம் செய்வது, விவசாய நிலம் ஒன்று எப்படி இருக்கும்//
உண்மையாகவே கவலைப் பட்டால் இன்று முதல் சிறு விவசாயிகளிடம் பொருட்களை வாங்குங்கள்.
இன்றைக்கு இயற்கை விவசாய பயிற்சி வகுப்புகளில் போய் பாருங்கள் எவ்வளவு விவசாயிகள் இருக்கிறார்கள்( தற்கால விவசாயிகள்), பண்ணாட்டு கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள் என்று.
நீங்கள் சொல்வது என்னமோ ஐ.டி -ல் உள்ள அனைவருமே ஓரே நாளில் விவசாயத்தை கையில் எடுக்க போவதுபோல் உள்ளது.
தயவுசெய்து இதை காமெடியாக மட்டும் பார்க்காதீர்கள், உங்களால் முடிந்தால் உதவுங்கள், இல்லையெனில் செய்ய விரும்புபவர்களை அவர்கள் போக்கில் விடுங்கள்.
ஐ.டி. பற்றிய சமீபத்திய செய்திகள் கவலை அளிப்பதாகவே உள்ளன.எதிர் காலத்தில் விவசாய நாடுகளே பொருளாதார ஸ்திரத் தன்மை கொண்டதாக அமையும் என்று நினைக்கிறேன். அந்த நிலை வரும்போது இந்தியாவில் விவசாயம் செய்ய நிலம் இருக்காது.
ReplyDeleteவாங்க டி.என்.முரளிதரன்
Deleteவருகைக்கு நன்றி...
//எதிர் காலத்தில் விவசாய நாடுகளே பொருளாதார ஸ்திரத் தன்மை கொண்டதாக அமையும் என்று நினைக்கிறேன்//
கண்டிப்பக இது போல் நடக்க வேண்டும்.. ஆனால் விளை நிலங்கள் இல்லாமல் போவது தான் கவலையளிக்கிறது. இருப்பினும், பலர் இயற்கை விவசாயத்திற்கு திரும்பிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியூட்டும் விதத்தில் உள்ளது.
எல்லா துறைகளிலும் ஏற்படுவதுபோன்றே ஐ.டி துறையில் இப்போது தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மைதான். ஆனால் இதுவே நிரந்தரமாகாது என்று நினைக்கிறேன். வசந்த காலம் மீண்டும் வரலாம். ஆனால் ஒன்று. லாபம் ஒன்றையே குறிக்கோளாக வைத்திருக்கும் இந்திய நிறுவனங்களில் மட்டுமே இந்த அவல நிலை என்று நினைக்கிறேன். பன்னாட்டு நிறுவனங்களிலும் கூட பெரும்பாலான குழுத்தலைவர்கள் (team leaders) மற்றும் மேலாளர்கள் (project managers) இந்தியர்களாகவே இருப்பதாலும் இத்தகைய சூழல் உள்ளது. இதுவும் ஒரு நாள் நிச்சயம் மாறும். இல்லையெனில் மனதிருப்தியில்லாத ஊழியர்கள் செய்யும் பணியின் தரமும் நாளடைவில் குறைந்து ஐ.டி துறையில் இந்தியாவின் பங்களிப்பும் பாதிக்கப்படும். இதை இத்துறையில் இன்று கொடிகட்டிப் பறக்கும் நிறுவனங்கள் புரிந்துக்கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று கூறலாம். மற்றபடி இங்கு சில ஆல் இன் ஆல் அழகுராஜாக்கள் சொல்வதைப் போலெல்லாம் நிச்சயம் நடக்காது. நானெல்லாம் வினவு தளத்தின் தலைப்பைப் பார்த்துவிட்டு விலகிவிடுவேன். இன்றைய தலைப்பும் நகைப்புக்குரியதுதான். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே ஒழிக்க முடியாத கொசுத்தொல்லையை இந்தியாவில் ஒழித்துவிட வேண்டுமாம்!
ReplyDeleteவருகைக்கு நன்றி ஜோசப்.
Delete//நானெல்லாம் வினவு தளத்தின் தலைப்பைப் பார்த்துவிட்டு விலகிவிடுவேன். இன்றைய தலைப்பும் நகைப்புக்குரியதுதான். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே ஒழிக்க முடியாத கொசுத்தொல்லையை இந்தியாவில் ஒழித்துவிட வேண்டுமாம்!
அவர்கள் பிரச்சனைகளை கூறுவது ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் தரும் தீர்வுகள் தான் ஏற்றுக்கொள்ள முடியாதவயாக உள்ளது.
கிருஷ்ணா,
ReplyDeleteவிவசாயம் செய்துக்கிட்டு இருக்கவங்கள விட செய்யப்போறோம்னு சொல்வதற்கே ,இவ்வளவு உணர்ச்சிவசப்படுறிங்களே அவ்வ்!
விவசாயம் செய்ய முன் வருவது நல்ல விடயம், அனைவருமே செய்யலாம். கொஞ்சம் கஷ்டப்படணும்.
இப்போ இதில் என்ன பிரச்சினைனா, ஐ.டி மக்கள் எல்லாம் ஆர்கானிக் ,காளான் இதான் விவசாயம்னு நினைச்சிட்டு இருக்காங்க போல. நெல் ,கரும்பு என முதுகொடிக்கிற விவசாயம்லாம் இருக்கு,அது எல்லாம் படிப்படிய்யா குறைஞ்சிட்டே போகுது.
அதுக்கு முதல் காரணம் என்னவெனில் உழைப்பு,முதலீட்டுக்கு ஏற்ப வருமானம் இல்லை,காரணம் விலை இல்லை.
மேலும் விவசாயத்தில் குறைந்த பட்ச லாபம் எடுக்க வேண்டுமெனில், சரியாக விற்றால் தான் சாத்தியம்.
ஆர்கானிக் காய்,காளான் எல்லாம் நகரப்பகுதியில் தான் விற்பனை ஆகும், ஐ.டி மக்கள் அங்கேயே விவசாய இடம் தேடுவாங்க!
ஐ.டி மக்கள் விவசாயத்துக்கு வருவதாக சொல்வது , ஹாபி கார்டனிங்க் செய்வது போல நகரில் , ஒரு சிறு இடத்தில் செய்வதாகவே இருக்கும் ,இதை வச்சு விவசாய மறுமலர்ச்சியே உருவாகிட்டதாக, பத்திரிக்கைகள் தான் பேசிக்கலாம்.
ஆனால் பெருமளவு விவசாயிகளுக்கு நட்டமே இருப்பதால் ,நாளுக்கு நாள் நலிவடைந்தே வருகிறது விவசாயம்.
எனவே ஐ.டி மக்களை விவசாயம் செய்ய வேண்டாம்னு சொல்லவில்லை, எல்லா வகையிலும் முழுமூச்சா செய்யுங்க என்கிறேன்.
விவசாயத்தில் உற்பத்திக்கூட எளிது,ஆனால் அதனை சந்தைப்படுத்துதல் தான் பெரும்பாடு. எல்லா விவசாயிகளும் சென்னைப்போன்ற நகரிலேவே இருக்காங்க,நேராக்கோயம்பேடுல லோட் இறக்க, ஒட்டன் சத்திரத்துல காய் போடுறவன் கமிஷன் ஏஜண்ட் கிட்டே ,நட்டத்துக்கு வித்துட்டு ,வயித்துல ஈரத்துண்டு போட்டுக்கிறான்.
-------------------
வங்கிகள் பெரும்பாலும் விவசாயம் என்றால் லோனே கொடுக்காமல் விரட்டியடிக்கின்றன, மீறி லோன் கிடைக்க வேண்டுமெனில் வலுவான சிபாரிசு, இடைத்தரகர் என பிடிக்கணும்,எல்லாருக்கும் கமிஷன் கொடுத்து கடன் வாங்கினால் எப்படி அதனை விவசாயத்தில் முதலீடு செய்ய முடியும்,இல்லை திரும்ப கடன் கட்ட முடியும்.
வங்கிகளில் விவசாயக்கடனுக்கு எத்தனை சதவீதம் மானியம் கொடுக்கிறதோ அதுக்கு ஏற்ப கமிஷன் மேனேஜர் முதல் பியூன் வரைக்கும் கொடுக்கணும்.. லஞ்சம் கொடுத்து கடன் வாங்கியாச்சு, அரசுப்பணம்,எப்படியும் தேர்தல் அப்போ தள்ளுபடி செய்யும் கட்ட வேண்டாம்னு நினைக்கும் போக்கு தான் தற்காலத்தில் இருக்கு.
மேலும் விவசாயக்கடன்களை பெருமளவு பெருவது அரசியல்வாதிகள்,அவர்களின் உறவினர்களே. எவனும் கடனை கட்டவே மாட்டான்.
இந்தக்கொடுமை எல்லாம் தட்டிக்கேட்க படித்தவர்கள்,அதாவது ஐ.டி மக்கள் விவசாயத்துக்கு வந்து மாத்தனும்.
---------------------
என்னோட இந்த விவசாயப்பதிவுகளையும் பாருங்க,(15-7-12)
#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: பசி!
1) விவசாயி படும் பாடு-1
2)விவசாயி படும் பாடு-2
இந்தப்பதிவுகளையும் பார்க்கவும்.
1)பஞ்ச கவ்யம்
2)காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-1
3)காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-2
4)நடவு எந்திரம்
5) ஒருங்கிணைந்த விவசாயம்
வால் மார்ட் குறித்த இடுகைகள்:
Deletehttp://vovalpaarvai.blogspot.in/2011/11/blog-post_29.html
http://vovalpaarvai.blogspot.in/2011/12/blog-post.html
பிடி பருத்தி குறித்த இடுகைகள்:
http://vovalpaarvai.blogspot.in/2013/10/bt-cotton.html
http://vovalpaarvai.blogspot.in/2013/11/bt-cotton-2.html
மொட்டை மாடித்தோட்டம்:
http://vovalpaarvai.blogspot.in/2012/06/blog-post_14.html
நன்றி வவ்வால்.... :)
Deleteநான் குறிப்பிட்டவர்கள் கிராமத்தில் விவசாயம் பார்ப்பவர்களே!
//இப்போ இதில் என்ன பிரச்சினைனா, ஐ.டி மக்கள் எல்லாம் ஆர்கானிக் ,காளான் இதான் விவசாயம்னு நினைச்சிட்டு இருக்காங்க போல. நெல் ,கரும்பு என முதுகொடிக்கிற விவசாயம்லாம் இருக்கு,அது எல்லாம் படிப்படிய்யா குறைஞ்சிட்டே போகுது.//
இதை ஒத்துக்கொள்கிறேன்.. இப்பொழுது விவசாயம் செய்பவர்கள் நட்டம் அடையாமல் செய்ய பார்கிறார்கள், அதைவிட ஆர்கானிக் அரிசிக்கு தான் வெளியில் அதிக விலை கிடைப்பதும் ஒரு காரணம்.விரைவில் இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கலாம்.
நீங்கள் குறிப்பிட்ட பதிவுகளை ஏற்கனவே படித்ததாக ஞாபகம். மீண்டும் படிக்கிறேன்.