Thursday, 13 February 2014

யுவன் ஷங்கர் ராஜவின் புதிய பெயர்

அனைவருக்கும் வணக்கம்!.

மீண்டும் இங்கே அனைவரும் அரைத்த மாவையே அரைத்து தோசை சுட போகிறேன்.யுவன் இசுலாமியரக பல மாதங்களாக வாழ்ந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு தான் தனது ட்விட்டர் கணக்கு மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதைப் பற்றி பல தளங்களில் விவாதங்கள் நடைப்பெற்றுவிட்டன. யுவன் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போகிறார் என செய்திகளும் வருகின்றன. அது அவரது தனிப்பட்ட வாழ்க்கை, அவருக்கு பிடித்த மதத்தை பின்பற்றவோ , பிடித்த பெண்ணை மணம் முடிக்கவும் அவர்க்கு எல்லா வித உரிமையும் சுதந்திரமும் உள்ளது. அதில் மற்றவர்கள் மூக்கை நுழப்பது அநாகாரீகம்.
பதிவுகளையும், விவாதங்களையும் பார்க்கும் போது ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. இசுலாமியர்கள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து இதற்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர். மற்ற மதத்தில் இது சாத்தியமா என்று தெரியவில்லை. உதாரணத்திற்கு, யுவன் அறிவித்த அன்று "மனிதாபிமானி" ஒரு பதிவிட்டர். சில மணி நேரங்களில் அதற்கு கிட்டத்தட்ட 32 ஓட்டுகள் பெற்று பலரது கவனத்தைப் பெற்றது. இது கண்டிப்ப்பாக மற்ற மதத்தினரிடம் பார்க்க முடியாது. நேற்று தான் சுவனப்பிரியன் அவர்களின் பதிவுகளைப் படித்தேன், மூன்று பதிவுகள் எழுதியுள்ளார், இதில் யுவனின் பிரத்யேக பேட்டி ஒன்றும் அடங்கியுள்ளது. அதில், தனக்கு தீராத மன உளச்சல் இருந்ததாகவும், குர்-ஆனைப் படித்ததும் கண்களில் நீர் கசிந்து உருகிவிட்டாடர் எனவும், தனக்கு இப்பொழுது தான் நல்ல கனவுகள் தோன்ற ஆரம்பிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சுவனப்பிரியனின் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டம் பற்றி கேட்கவே வேண்டாம், பல அறிவியல் உண்மைகளை குர்-ஆனில் இல்லை என்பதால் மட்டுமே ஏற்க மறுத்துள்ளார். யுவன் பற்றிய பதிவுகளுக்கு கண்டிப்பாக எதிர்வினைகள் வந்திருக்கும் ஆனால் பின்னூட்டங்களில் பல பெயரில்லா பதிவர்கள் குர்-ஆனை போற்றுவது மட்டுமே உள்ளன.

இன்னொரு பிரிவினர் கேட்கும் கேள்விகள் இனி அவர் எதையெல்லாம் ஹராம் என எடுத்துக் கொள்வார். இசுலாமில் இசை விலக்கப்பட்டதே, இனிமேல் அவர் இசையுலகை விட்டுப் போய்விடுவார?. ஒரு மனிதன் மதம் மாறினால் அந்த மதத்தில் உள்ள முட்டாள் தனமான விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.யுவனின் ரசிகர்கள் அவரின் இசையை மட்டுமே பார்ப்பவர்கள், அவர்களுக்கு எந்த மதமாக இருந்தாலும் தரமான இசையை  கொடுத்தால் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவார்கள். ரஹ்மான் சூஃபியுசத்தை கடைபிடிக்கிறார், அவர் என்ன இசையை விட்டு போய்விட்டாரா?

இரண்டு திருமணங்கள் தந்த தோல்வி, தான் தாயின் இழப்பு அவரை வெகுவாக பாதித்திருப்பது தெரிகிறது. கலங்கிய குட்டையில் இப்பொழுது ஒரு தெளிவு தெரிவது போல் இருந்தாலும், அடிப்படைவாதிகள் இதில் மீன் பிடிக்க நினைக்கிறார்கள். பெரியார்தாசன், இசுலாமைத் தழுவியதும், அவரை அடிப்படைவாதிகள் ஆக்கிரமித்துக் கொண்டதால் தான் இன்றும் ஒரு விவாதப்பொருளாகியுள்ளார். யுவன் தான் பணிபுரியும் படங்களில் சில இயக்குனர்களுக்கு மட்டும் அருமையான பாடல்கள் கொடுப்பது வழக்கம். அதில் இயக்குனர் அமீர் சுல்தானும் ஒருவர். முன்பு செல்வராகவன் அவருக்கு தொழில்முறையை விட நெருங்கிய நண்பனாக இருந்தார். இருவரும் பிரிந்த பிறகு பல வெத்து படங்களை கொடுத்தார். தன் கவலைகளை அவரின் புதிய இசுலாமிய நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது, அவர்கள் குர்-ஆனை கொடுத்து படிக்க சொல்லியுள்ளனர். ஒரு வருடங்கள் படித்த பின்னர், இசுலாமியராக மாறிவிட்டார். அவர் தன்னிலை உணர்ந்து மதம் மாறியிருந்தால் நல்லது, ஆனால் அடிப்படைவாதிகளின் துணை கொண்டு மாற்றப்பட்டிருந்தால் அதில் இருந்து மீண்டு வருவது கடினம்.

தற்போது யுவனின் ட்விட்டர் பக்கம் வேலை செய்யவில்லை. அவர் கணக்கை பார்வையிட்டால் "Sorry, that page doesn’t exist! Thanks for noticing—we're going to fix it up and have things back to normal soon" என்று வருகிறது. தன் பக்கத்தை முடக்கம் செய்யும் அளவுக்கு அவருக்கு என்ன நேர்ந்தது. இதைப் பார்த்தால் இப்பொழுது தான் முன்பை விட அதிக மன உளச்சளில் உள்ளது போல் தோன்றுகிறது.
ஒருவேளை கீதை அல்லது பைபிள் எடுத்து படிக்க கொடுத்திருக்கும் நண்பர் இருந்திருந்தால் அவர் கிறித்துவராக மாறியிருக்கும் சாத்தியங்களும் உள்ளது.

இப்பொழுது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட்டு தனது கணக்கையே மூடி வைத்துக் கொள்ளும் அளவுக்கு அவருக்கு என்ன இருப்பியல் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன என தெரியவில்லை. ஆனால் அவர் திரும்பவும் இசையுலகில் பல காலம் நம்மை மகிழ்விக்க , இறைவனை(அப்படி ஒருவர் இருந்தால்) வேண்டிக்க்கொள்வோம்.

சரி, அவரின் புதிய பெயர்.. அப்துல்லா என மாற்றிக் கொண்டதாக தெரிகிறது. திரு.சுவனப்பிரியன் அவர்களும் இதையே குறிப்பிட்டுள்ளார். என்ன இருந்தாலும் எங்களுக்கு அவர் மதம் தேவையில்லை எப்பொழுதும் எங்களுக்கு அவர் யுவன் தான்....

8 comments :

 1. naan inthu mathathirku vanthal yentha jathiyil serthu kolverkal. naan our jaathiyil inainthu mantra jathiyil ullavarkal yennai sakotharanaka yetrukolla thayara.yuvan muslimanathum anaithu muslimum vara verkiran. matra mathankalil ithu sathiyama?

  ReplyDelete
  Replies
  1. வாங்க சுல்தான். வருகைக்கு நன்றி.

   இசுலாமியர்கள் ஒன்றாக இணைந்ததை நான் குறை கூறவில்லை. ஒருவேளை "கிருஷ்ணா" என்ற பெயரில் இதை சொல்வதால் உங்களுக்கு அப்படி தோன்றியிருக்கக்கூடும்.

   நீங்கள் இந்து மதத்திற்கு வந்தால் கண்டிப்பாக உங்களை சகோதரனாக ஏற்றுக் கொள்ளும் நல்ல உள்ளங்கள் உள்ளன. இடைவெளிகளை நாம் தான் உருவாக்கிக் கொள்கிறோம்.

   யுவன் இசுலாமியராக மாறியதை விட, அவர் ஒரு சுதந்திர மனிதராக , அடிப்படைவாதிகளின் கட்டுக்கள் போய்விடாமல் வாழவேண்டும் என்ற நோக்கத்துக்காகவே இந்த பதிவை எழுதினேன்.

   மீண்டும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

   Delete
 2. அவரவர் முடிவு + விருப்பம்... வேறு ஏதும் சொல்வதற்கில்லை...

  நேரம் கிடைப்பின் இன்றைய பதிவை பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி..

   படித்தேன்.. எல்லா மதமும் சம்மதம் என்பதில் என்றைக்குமே எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. இன்று யுவன் ஒரு பிரபலம், அதனால் இது பெரிதாக பேசப் படுகிறது. அவர் அடிப்படைவாதிகளின் கட்டுக்குள் போய்விடாமல் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்.

   Delete
 3. மதம் மாறுவது அவர் விருப்பம். உலகில் பயங்கர சக்திகளாக எழும் மத தீவிரவாத மற்றும் அடிப்படைவாதக் குழுக்களில் சேர்ந்து விட்டால் அவரை மட்டுமல்ல அவர் வழியை பின்பற்ற நினைக்கும் அனைவருக்கும் ஆபத்தே. மதங்கள் நடத்துவோர் மனித இயலாமைகளை அறுவடை செய்து பயனடைகின்றனர். அவ்வளவு தான். வகாபிய குழுக்களில் போய்ச் சேருவோரை எச்சரிக்கின்றோம். அது அவர்களையும் அவர்தம் சந்ததியரையும் பாரதூரமாய் பாதிக்கும். அதி தீவிர இஸ்லாம், - வகாபியம், சலாபி. அதி தீவிர கிறித்தவம் - பெந்தகோஸ்தே, மோர்மோன், யெகோவா சாட்சியங்கள், சில கத்தோலிக்க பிரிவுகள். அதி தீவிர இந்து - ஆரிய சமாஜம், இந்துத்துவம், பார்ப்பனத்துவம். இவை மக்களை பிரித்தாள நினைக்கும் விஷச் செடிகள், கவனமாக இருப்பது மிதவாத நம்பிக்கையாளரின் கடமைகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி விவாரணன்.

   //உலகில் பயங்கர சக்திகளாக எழும் மத தீவிரவாத மற்றும் அடிப்படைவாதக் குழுக்களில் சேர்ந்து விட்டால் அவரை மட்டுமல்ல அவர் வழியை பின்பற்ற நினைக்கும் அனைவருக்கும் ஆபத்தே//

   சரியாக சொன்னீர்கள். அடிப்படைவாத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் இப்பொழுது இருக்கும் நிலையை பார்த்த பின்பும் அதன் பின்னால் போவதும், அதை சுட்டிக் காட்டுவதை எதிர்ப்பதும் தாம் இப்போது எதிர்கொண்டுள்ள சவால்கள்.
   புரிந்து கொள்வார்கள் என்றாவது ஒரு நாள்.

   Delete
 4. Replies
  1. வாங்க வேகநரி, வருகைக்கு நன்றி. :)

   Delete