Sunday, 13 April 2014

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அல்வா கொடுத்த சூரிய கிரகணம்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இந்த நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி. பெயரை சொன்னதும் உடனே E=MC2-ஐ  நினைக்காதீர்கள். அதற்கும் மேல் பலவற்றை கண்டுபிடித்துள்ளார். அணுகுண்டு போட்டதினால் ஐன்ஸ்டீன் என்றாலே அந்த சமன்பாடு நியாபகம் வருகிறது.....


இவர் தனது சார்பியல் கோட்பாடுகளை நிரூபிக்க முயன்ற போது, அவருக்கு சூரிய கிரகணங்கள் தேவைப்பட்டது, ஆனால் ஒவ்வொரு முறையும் அவரால் அதை சரிவர நிரூபிக்க முடியவில்லை. சூரியன் அவருக்கு அல்வா கொடுத்த வண்ணம் இருந்தது, ஆனால் தான் ஆராய்ச்சியை தொடங்கி கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து, அவருக்கு அனைத்தும் பிடிபட்டது.

பல வருடங்கள் வேலை கிடைக்காததால் சுவிட்சர்லாந்து காப்புரிமை அலுவலகத்தில் எழுத்தராக பணியில் சேர்ந்தார்.காப்புரிமை அலுவலகத்தில் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த பணி ஆராய்சியாளர்களால் கொடுக்கப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை தொகுத்து, அவற்றை வகைப்படுத்தி வைப்பது.இதில் பலதரப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை அவரால் வாசிக்க முடிந்தது.இப்படி வாசித்த பின் பிரபஞ்சத்தை பற்றிய பல சிந்தனைகள் அவருக்குள் எழுந்தன.இந்த வாசிப்பு அனுபவம், 1905-ல் அவர் நான்கு ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட உதவியது. அதில் முக்கியமானது "ஒளி"யை பற்றிய "Photo Electric Effect". இதுவரை அலையாக பார்த்த ஒளியை அவர் துகள்களாக பார்த்தார். போடான் என்ற துகள்களால் ஒளி கட்டமைக்கப்பட்டுள்ளது என்றார். மற்றொரு கட்டுரையில் அணுவின் இருப்பை பற்றிய கணிப்புகளைத் தெரிவித்திருந்தார்.(அக்காலத்தில் அணுவைப் பற்றி  ஆய்வுகள் இல்லை, பிறகு தான் எலக்ட்ரான், ப்ரொடான் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன). பின் அனைவருக்கு நன்கு அறிமுகமான E=MC2 , இறுதியாக சிறப்பு சார்பியல் கொள்கை. இதின்படி காலமும் வெளியும் வெவ்வேறு இல்லை, இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்த காலவெளி, நீங்கள் இருக்கும் வெளி சுருங்கினால் காலமும் சுருக்கிவிடும், உதாரணம், வார்ம் ஹோல்(Worm Hole). இவை வெளியை வளைத்து நமக்கு காலத்தை சுருக்கக்கூடியவை. Worm Hole பற்றி சமுத்ரா அணு அண்டம் அறிவியலிலும், சார்வாகனும் பல எளிமையான பதிவுகளை எழுதியுள்ளனர். விளக்கம் தேவைப்படுவோர், அவர்கள் தளங்களை பார்க்கவும்.

சிறப்பு சார்பியல் கொள்கையை முடித்தபின் அவருக்கு அதில் எதோ தப்பு உள்ளது போல் தோன்றியது. அதை மறு ஆய்வு செய்த போது, அதன் சமன்பாடுகள் சீரான வேகத்தில் செல்லும் போது மட்டுமே சரியான தரவுகளை கொடுத்தன. ஆனால் பிரபஞ்சத்தில் எல்லாமே முடுக்கம்(acceleration) பெருபவை. உடனே தனது சிறப்பு சார்பியல் கொள்கைகளை மறுஆய்வு செய்து பொது சார்பியல் கொள்கைகளாக மாற்றினார். இந்த முறை அவர் எடுத்துக்கொண்டது ஈர்ப்பு விசையை!. ஐசக் நியூட்டன் இழுவிசையால் ஆப்பிள் மரத்தின் மேலிருந்து விழுவதாக கூறினார், ஆனால் நினைத்து பாருங்கள் மரத்தின் மேலிருந்து ஒரு ஆப்பிள் விழவேண்டுமானால் அதனை ஏதேனும் ஒன்று தள்ள வேண்டும், அப்படி தள்ளுவது எது?. இந்த கேள்வி தான் ஐன்ஸ்டீன் மனதில் முளைத்தது.


இப்பொழுது ஒரு சிறிய உதாரணம். சூரியனை பூமி சுற்றி வருவதாக தான் இதுவரை சொல்லப்பட்டுள்ளது. ஆனால் ஏன் பூமி சூரியனை சுற்ற வேண்டும்?. உண்மையில் பூமி ஒரு நேர்கோட்டில் தான் பயணம் செய்ய முயல்கிறது ஆனால் சூரியன் அதன் பாதையை(வெளியை) வளைத்துவிடுவதால் பூமி ஒரு நீள்வட்ட பாதையில் சூரியனை சுற்ற ஆரம்பிக்கிறது.


படத்தில் ஒரு எளிமையான உதாரணம். படத்தில் உள்ள நீல நிற துணி தான் வெளி என்று வைத்துக்கொள்வோம். மத்தியில் உள்ள பெரிய இரும்புத்துண்டு தான் சூரியன். சூரியனின் நிறை வெளியை வளைக்கிறது. இப்பொழுது ஒரு சிறிய இருப்புத்துண்டு முதலில் நேர்கோட்டில் தான் தன் பயணத்தை தொடங்குகிறது.புற விசையின் பாதிப்பு ஏதும் இல்லையெனில் அது நேர்கோட்டில் தன் பயணத்தை தொடரும், ஆனால் சூரியன் அதன் வெளியை வளைத்துவிடுவதால், நீள்வட்ட பாதையில் பூமி சூரியனை சுற்றுகிறது. காற்று மற்றும் துணியின் உராய்வால், அந்த சிறிய இரும்பு தன் வேகத்தை இழக்கிறது. அண்டவெளியில் அப்படிப்பட்ட உராய்வின்மையால் , பூமி தொடர்ந்து சுற்றிவருகிறது.எனவே காலவெளி என்பது வளைக்ககூடியது.

இதே போல்  தான் பூமியும் தன்னை சுற்றியுள்ள வெளியை வளைக்கிறது, எனவே வளைந்த வெளி பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளின் மேலும் தள்ளுவதால் நாம் ஈர்ப்புவிசையை உணர்கிறோம். இதை அவர் வெளியிட்ட போது பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. காலம்காலமாக ஈர்ப்புவிசையை மக்கள் பார்த்த விதத்தை ஐன்ஸ்டீனின் கூற்றுகள் அடியோடு மாற்றின. எனவே பலருக்கும் அதில் மாற்றுக்கருத்து இருந்தது. தனது கோட்பாடுகளை நிரூபிக்க பலவாறாக சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு சிறிய வழி புலப்பட்டது. கிட்டத்தட்ட சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகளில் வருவது போன்ற ஒரு பரிசோதனை அது.

சூரியன் வெளியை வளைக்கிறது, எனவே அதன் வளைந்த வெளியினூடாக போகும் எந்த பொருளும் வளைந்து தான் செல்ல வேண்டும். நேராக செல்லும் ஒரு பொருளை சூரியனின் ஓரத்தில் பயணிக்க வைத்தால் அதன் பாதையை சூரியன் வளைக்கும் எனவே, சூரியனை கடக்கும்போது அதன் பாதை சற்று வளைந்து இருந்தால் தனது கோட்பாடுகளை நிரூபித்துவிடலாம் என்றார்.

ஆனால் எதை வைத்து இந்த பரிசோதனையை செய்வது?. ஒளியை வைத்து செய்யாலாமே... சூரியனின் பின்னால் இருந்து ஒளிக்கற்றை ஒன்றை செலுத்தினால் அது சூரியனை கடக்கும் போது நேராக இல்லாமல் வளைந்து பயணிக்கும், அப்படி வளைந்து  பயணித்தால் சூரியன் அதை சுற்றியுள்ள வெளியை  வளைப்பதால் தான் ஈர்ப்பு உண்டாகிறது என்பதை காணலாம், ஏனெனில் ஒளிக்கற்றை நேர்கோட்டில் தான் பயணம் செய்யும். இதை எப்படி செய்யலாம், அவ்வளவு பெரிய ஒளிக்கற்றையை உருவாக்கும் ஒரு விளக்கும், அதன் வளைந்த பாதையை கணிக்கும் கருவிகளுக்கும் எங்கு போவது?. இதற்கு இயற்கை ஒரு நல்ல தீர்வை அளித்தது. நட்சதிரங்களில் இருந்து வரும் ஒளி சூரியனால் வளைக்கப்பட்டும், எனவே சாதாரணமாக ஒரு நட்சத்திரத்தை பார்ப்பதை காட்டிலும், சூரியனின் பின்புறம் இருந்து ஒளிரும் நட்சத்திரத்தை பார்க்கும் போது அதன் ஒளி சற்று விலகி தெரியும்.இது தான் அவர் செய்ய நினைத்த பரிசோதனை..

சூரிய ஒளியில் நட்சத்திரங்கள் தெரியாது, ஆனால் சூரியனின் பின்னால்  இருந்து வரும் நட்சத்திரங்களின் ஒளி வளைக்கப்படுவதை பார்க்கலாம். எப்படி?. ஒரு முழு சூரிய கிரகணம் ஏற்படும்பொழுது, சூரிய ஒளி மறைக்கப்பட்டு அதன் பின்னனியில் உள்ள நட்சத்திரங்கள் அனைத்தும் தெரியும். எனவே ஐன்ஸ்டீனின் கோட்பாடுப்படி அவற்றின் ஒளி சாதாரண இடத்தை காட்டிலும் சற்று விலகி தெரிய வேண்டும். யாரேனும் ஒருவர் இதை படம் பிடித்து காண்பிப்பது வரை இதை நிரூபிக்க முடியாது. எனவே ஐன்ஸ்டீன் பல நாடுகளில் உள்ள ஆய்வு மையத்தின் தொலைநோக்கி ஆய்வாளர்களுக்கு எழுதினார். அப்பொழுது ஒரு ஆய்வு மையத்தின் உதவியாளரான இர்வின் பின்லே ஃப்ரெண்ட்லிச் ஐன்ஸ்டீனுடன் தொடர்பு கொண்டார். ஃப்ரெண்ட்லிச் புதிதாக திருமணமான தன் மனைவியுடன் சுவிட்சர்லாந்து செல்கையில் ஐன்ஸ்டீனிடம் இருந்து அழைப்பு வந்தது. ஃப்ரெண்ட்லிச் உடனே சூரிஸ் சென்றார். ஐஸ்டீனுடன் பலமணி நேரம் உரையாடிவிட்டு பின்னர் அடுத்த முழு சூரிய கிரகணம் 21-ஆகஸ்டு 1914 அன்று ரஷ்யாவின் கிரிமியா பகுதியில் தெரியவிருப்பதையும் அதை படம் எடுத்து தருவதாகவும் கூறினார் [அப்போது கிரிமியா ரஷ்யாவின் பகுதி; இப்பொழுது 2014-ல் மீண்டும் :)]

உடனே ஃப்ரெண்ட்லிச் அமெரிக்கவில் உள்ள லிக் ஆய்வு மையத்திற்க்கு ஒரு கடிதம் எழுதினார். அங்கு வில்லியம் வாலசு காம்பெல், கிரகணங்களை படம் எடுப்பதில் திறமை மிக்கவர்.கடிதத்தை பார்த்த அவர் உற்சாகமடைந்து புகைப்படங்களை தானும் எடுக்கப்போவதாக கூறி கிரிமியா சென்றார். ஃப்ரெண்ட்லிச்  தனது இரு உதவியாளர்களுடன் சூரிய கிரகணத்தை படம் பிடிக்க கிளம்பினார்.அது முதல் உலகப்போர் காலகட்டம், ஃப்ரெண்ட்லிச் ஒரு ஜெர்மானியர் எனவே ரஷ்யா ராணுவத்தினர் அவரை உளவாளி என நினைத்து போர்க் கைதியாக பிடித்து சென்றனர். காம்பெல் அமெரிக்காவை சேர்ந்தவர் ஆகையால் அவரி படம் பிடிக்க அனுமதித்தனர், அமெரிக்க அப்பொழுது போரில் பங்கு பெறவில்லை.துரதிர்ஷ்டவசமாக காம்பெல் படம் எடுக்கையில் மேகங்கள் சூழ்ந்து கொண்டதால் அவரால் படங்களை சரிவர எடுக்க முடியவில்லை.

ஐன்ஸ்டீன் தொடர்ந்து தனது கணக்குகளில் கவனம் செலுத்தினார். அப்பொழுது அதில் இருந்த தவறுகளை சரி செய்தபோது , தன் பொது சார்பியல் கொள்கையை ஆய்வுகளில் முன்னேற்றம் காண்பது தெரிந்தது. அப்போது ப்ரஷ்யாவில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் உரையாற்ற அழைப்பு வந்தது. அங்கு டேவிட் ஹில்பர்ட் ஐன்ஸ்டீனின் உரையை கேட்க வந்திருந்தார், இவர் ஒரு தலைசிறந்த கணித மேதை. ஐன்ஸ்டீனின் உரையை கேட்டபின் அவரின் கணிதத்தில் உள்ள தவறுகள் ஹில்பர்ட்ற்கு புரிந்தது ,அந்த கணக்குகளை ஹில்பர்ட் மறு ஆய்வு செய்தார்.

ஐன்ஸ்டீன், அப்பொழுது புதன் கிரகம் சூரியனை சுற்றும் பாதை எப்பொழுதும் ஒரே இடமாக இல்லாமல் இருப்பதையும், அது நியூட்டனின் இயக்க விதிகளை மதிக்காமல் ,அந்த பாதை பல நீள்வட்டங்கள் இணைந்த ஒரு சுற்றாக இருப்பதை வைத்து தனது கணக்குகளை போட்டு பார்த்தார். தனது பொது சார்பியல் கோட்பாடு புதன் கிரகத்தின் இந்த சுற்றுப் பாதை மர்மத்தை முழுமையாக விளக்கியது.

இப்பொழுது மறுபடியும் ஒரு சூரிய கிரகணம் ஜூன் 18- 1918-ல் வாஷிங்க்டனில்; காம்பெல் எப்படியாவது படம் பிடிக்க வேண்டும் என கலிபோர்னியாவில் இருந்து வாஷிங்டன் வந்தார். இந்த முறையும் மேகங்கள் சூழ்ந்து ஏமாற்றியது போல் இருந்தது, ஆனால் சரியாக நிலா சூரியனை மறைக்கும் வேளையில் மேகங்கள் விலக, காம்பெல் படம் எடுத்தார். சாதாரண இரவில் அதே கோணத்தில் எடுக்கப்பட்ட படங்களின் மேல் இந்த படங்களை வைத்து நட்சத்திரங்களின் இருப்பை கணித முறையில் கணித்தனர். ஆனால் அவர்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. பின்னர் மற்றொருவர், ஆப்ரிக்காவில் இருந்து ஒரு முழு சூரிய கிரகண படம் எடுத்து வந்தார், அதில் தெளிவின்மையால் ஆய்வு முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. திரும்பவும் ஐன்ஸ்டீனுக்கு அல்வா கொடுத்தது சூரிய கிரகணம்

இறுதியாக, 1922 செப்டம்பரில் ஆஸ்திரேலியாவின் மேற்கு கரையில் ஒரு முழு சூரிய கிரகணம் வருவதையறிந்தது, காம்பெல் தனது கருவிகளுடன் ஆஸ்திரேலியா சென்றார். காம்பில் மட்டுமல்லாமல் ஏழு வெவ்வேறு ஆய்வு குழுக்கள் இந்த ஆய்வுக்காக ஆஸ்திரேலியா வந்தது.ஒரு பிரிடிஷ் குழு மற்றும் ஃப்ரெண்ட்லிச் குழுவினருக்கு மேக மூட்டத்தினால் படம் எடுக்க முடியவில்லை. ஆஸ்திரேலிய குழுவும், இந்திய குழுவும் கருவிகள் சரிவர இயங்காததால் அவர்களும் பிந்தங்கிவிட்டனர்.காம்பெல் குழுவிற்கு அற்புதமான படங்கள் கிடைதன. கிட்டத்தட்ட 92 நட்சத்திரங்கள் சூரியனின் மங்கிய ஒளியில் தெரிந்தன. அவற்றை ஆய்வு செய்தபோது நட்சத்திரங்களின் ஒளி ஐன்ஸ்டீன் கூறியது போலவே விலகியிருந்தது. ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கொள்கை நிரூபிக்கப்பட்டது.காம்பெல் தனது படங்களி முதலில் ஐன்ஸ்டீனுக்கு அனுப்பி வைத்தார். பதினைந்து வருடங்களுக்கு பிறகு ஈர்ப்பு விசையின் பரிமாணத்தையே மாற்றியமைத்தார், ஈர்ப்பு விசை மட்டுமல்ல பிரபஞ்சம் இயங்கும் முறையும் இதன் மூலம் மாறியது. பலவருடங்களாக நோபல் பரிசை மறுத்து வந்த நோபல் கமிட்டி அவருக்கு ஒளிமின்விளைவு ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கி கவுரவித்தது.33 comments :

 1. மிகவும் உபயோகமான பதிவு! ஐன்ஸ்டீனின் காலவெளிக் கொள்கையை எளிமையாகப் பரிசோதனையுடன் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 2. கிருஷ்ணா,

  ஐன்ஸ்டீன் சிறந்த விஞ்ஞானி தான் ஆனால் அவரை விட பல சிறந்த விஞ்ஞானிகள் அவர் காலத்தில் இருந்தும் கண்டுக்கொள்ளப்படவில்லை.

  //E=MC2-ஐ நினைக்காதீர்கள். அதற்கும் மேல் பலவற்றை கண்டுபிடித்துள்ளார். அணுகுண்டு போட்டதினால் ஐன்ஸ்டீன் என்றாலே அந்த சமன்பாடு நியாபகம் வருகிறது.....//

  அணு குண்டுக்கும் இந்த சமன்ப்பாட்டிற்கும் ஒரு தொடர்பும் இல்லை, ஐன்ஸ்டீன் முதலானவர்கள் ,ஜெர்மன் அணுகுண்டு தயாரிக்கும் முன்னர் அமெரிக்கா அணுகுண்டு தயாரிக்கனும் என கடிதம் எழுதி அழுத்தம் கொடுத்தவர்கள். அவ்வளவு தான்.

  //இதே போல் தான் பூமியும் தன்னை சுற்றியுள்ள வெளியை வளைக்கிறது, எனவே வளைந்த வெளி பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளின் மேலும் தள்ளுவதால் நாம் ஈர்ப்புவிசையை உணர்கிறோம்//

  இதெல்லாம் முழுமையான விளக்கம் இல்லைனு எப்பவோ சொல்லியாச்சே , பிரபஞ்சம் விரிவடையாமல் நிலையாக இருக்கு என நினைத்து இப்படிலாம் சொன்னாங்க , பிரபஞ்சம் விரிவடைவதால் இதெல்லாம் செல்லாத நிலையாகிடுச்சு.

  'வெளியை வளைப்பதால் எல்லாம் உள் நோக்கி தள்ளப்பட்டு" ஈர்ப்பு விசை உருவானால், பிரபஞ்சம் மையத்தில் குழிவாக இருக்கணும் ஆனால் உண்மையில் பிரபஞ்சம் மையத்தில் உப்பலாக இருக்கு :-))

  பிரபஞ்ச துகள்கள்(சூரியன் போன்ற நட்சத்திரங்கள்) ஒன்றை விட்டு ஒன்று விலகியே செல்கின்றன ,எனவே தான் ரெட் ஷிஃப்ட் என நிற மாலையில் ஏற்படுகிறது, இதனை கண்டறிந்து நோபல் பரிசு வாங்கியவர் இந்தியரான சந்திரசேகர் , எவ்ளோ தூரம் பிரபஞ்சம் விரியும் என்பதனை "சந்திரா'ஸ் லிமிட்" என்கிறார்கள்.

  # ஒளியின் வேகம் நிலையானது அல்ல ,ஒவ்வொரு ரெபரென்ஸ் ஃபிரேமிலும் மாறுபடுது , முடிவிலா தொலைவில் ஒளியின் வேகம் பூஜ்ஜியம் ஆகிடும், அப்போ ஒளி அலை , பொருளாக மாறிவிடும் , இப்படி ஒன்றிணையும் ஒளி அலைப்பொருளில் இருந்து ஒரு புதிய பிரபஞ்ச நிறை (mass)உருவாகிறது , இப்படித்தான் புதிய நட்சத்திரங்கள் பிறக்கின்றன, பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் அழிவதை போல இப்பவும் புதிதாக உருவாகின்றன.

  இதெல்லாம் ஐன்ஸ்டீனின் ஒளி வேகம் நிலையானது என்ற சார்பியல் கொள்கையை தூக்கிப்போட்டு மிதித்து விட்டது.(அச்சூத்திரத்தில் ஒளி வேகம் நிலையானது என வைத்திருப்பார்)

  ReplyDelete
  Replies
  1. வாங்க வவ்வால்.

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   //வெளியை வளைப்பதால் எல்லாம் உள் நோக்கி தள்ளப்பட்டு" ஈர்ப்பு விசை உருவானால், பிரபஞ்சம் மையத்தில் குழிவாக இருக்கணும் ஆனால் உண்மையில் பிரபஞ்சம் மையத்தில் உப்பலாக இருக்கு :-))//

   இந்த பதிவின் தொடர்சியாக, ஐன்ஸ்டீன் Singularity- ஐ விளக்க universal constant கொண்டு செய்த வேலைகளையும் சில தவறான கணிப்புகளை எல்லாம் வைத்து ஒரு பதிவு தேத்தலாம் நு இருந்தேன். அதுக்குள்ள நீங்களே பின்னூட்டமா போட்டுட்டீங்க ஆவ்வ் :)...

   //பிரபஞ்ச துகள்கள்(சூரியன் போன்ற நட்சத்திரங்கள்) ஒன்றை விட்டு ஒன்று விலகியே செல்கின்றன ,எனவே தான் ரெட் ஷிஃப்ட் என நிற மாலையில் ஏற்படுகிறது,//
   ஆமாம். ரெட் ஷிஃப்ட் வைத்து தான் தொலை தூர விண் பொருட்களின் தூரத்தை கணிக்கிறார்கள். annual doppler effect மூலம் பூமியின் அதன் பாதையின் திசைவேகம் காரணமாக மாறும் விண் பொருட்களின் வருடாந்திர தூரத்தையும் கணிக்கின்றனர்.. !!! உங்களுக்கு நான் போய் இதெல்லாம் சொல்லனுமா!!!

   Delete
 3. இயற்பியல் மேல் தங்களுக்கு உள்ள ஆர்வம் மகிழ்ச்சியைத் தருகிறது.

  E=MC^2 பத்தி ஒரு பதிவு கொஞ்ச நாள் முன்னாடி எழுதினேன், நேரம் கிடைத்தால் படித்து தங்களது கருத்துக்களைத் தெரியப் படுத்தவும்.

  http://jayadevdas.blogspot.com/2012/09/emc2.html

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி..
   குறிப்பிட்ட பதிவை ஏற்கனவே படித்துள்ளேன்..

   Delete
 4. \\பிரபஞ்ச துகள்கள்(சூரியன் போன்ற நட்சத்திரங்கள்) ஒன்றை விட்டு ஒன்று விலகியே செல்கின்றன ,எனவே தான் ரெட் ஷிஃப்ட் என நிற மாலையில் ஏற்படுகிறது, இதனை கண்டறிந்து நோபல் பரிசு வாங்கியவர் இந்தியரான சந்திரசேகர் \\
  ஐயா, சந்திரசேகர் இதெல்லாம் செய்தார் என்று நீங்க கண்டு புடிச்சதுக்கே எதாச்சும் பரிசு குடுக்கனுமுங்க ஐயா. இந்த ஹப்பிள்..........ஹப்பிள்.......... [Hubble] அப்படின்னு ஒருத்தர் இருந்தாராமே, அவர் என்ன சந்திரசேகருக்கு விடியற்காலையில் எழுப்பி டீ போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தாருங்களா ஐயா?

  \\எவ்ளோ தூரம் பிரபஞ்சம் விரியும் என்பதனை "சந்திரா'ஸ் லிமிட்" என்கிறார்கள்.\\

  ஐயா, ஊர்ல இருக்கும் மடப்பசங்க உங்க மாதிரி அறிவாளி இல்லீங்க, அவங்க வேற மாதிரி சொல்லிக்கிட்டு இருக்காங்க.

  Chandrasekhar limit
  n
  1. (Astronomy) astronomy the upper limit to the mass of a white dwarf, equal to 1.44 solar masses. A star having a mass above this limit will continue to collapse to form a neutron star.

  http://www.thefreedictionary.com/Chandrasekhar+limit

  ++++++++++++++++++++++++++++
  The greatest mass a white dwarf star can have before it goes supernova is called the Chandrasekhar limit, after astrophysicist Subrahmanyan Chandrasekhar, who worked it out in the 1930s. Its value is approx 1.4 sols, or 1.4 times the mass of our Sun

  Read more: http://www.universetoday.com/40852/chandrasekhar-limit/#ixzz2z7SpJjqo
  +++++++++++++++++++++++++++++++++++++++++++++++

  Chandrasekhar limit, in astrophysics, maximum mass theoretically possible for a stable white dwarf star.

  http://www.britannica.com/EBchecked/topic/105468/Chandrasekhar-limit

  ReplyDelete
 5. \\ஒளியின் வேகம் நிலையானது அல்ல ,ஒவ்வொரு ரெபரென்ஸ் ஃபிரேமிலும் மாறுபடுது\\ இதுக்கு மட்டும் தொடுப்பு குடுங்க ஐயா, புதுசா இருக்கு நாங்களும் தெரிஞ்சுக்குவோமில்ல..............

  ReplyDelete
 6. Red shift-ஐக் கண்டுபிடிச்சது யாரு?

  http://wiki.answers.com/Q/Who_invented_redshift?#slide=2

  ReplyDelete
 7. பாகவதரே,

  உம்மோடு எல்லாம் அறிவியல் பேசும் நிலை வரும்னு நினைக்கலை அவ்வ்.

  சந்திராஸ் லிமிட் என்பதை வெறும், ஒயிட் ட்வார்ப்க்கு என நினைத்துக்கொண்டு பேசுகிறீரே, என்னத்த சொல்ல?

  //Vindication would eventually come to Chandrasekhar when he was awarded the Nobel Prize in 1983 for his work. The Chandrasekhar Limit is now accepted to be approximately 1.4 times the mass of the sun; any white dwarf with less than this mass will stay a white dwarf forever, while a star that exceeds this mass is destined to end its life in that most violent of explosions: a supernova. In so doing, the star itself dies but furthers the growth process of the universe—it both generates and distributes the elements on which life depends.//

  http://www.pbs.org/wgbh/nova/blogs/physics/2012/01/the-chandrasekhar-limit-the-threshold-that-makes-life-possible/

  பிரபஞ்சம் தோன்ற சூப்பர் நோவா வெடிப்பு தேவை என்பதும் ,அதனை நிர்ணயிக்க "சந்திராஸ் லிமிட்" உதவுகின்றது என்பதும் புரியும்.

  பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடையுமா, இல்லை ஒரு எல்லையில் விரிவு நின்று விடுமா, அல்லது மீண்டும் சுருங்கி சிங்குலாரிட்டி ஏற்பட்டு "பிக் பாங்க்' ஏற்படுமா என்பதை நிர்ணயிக்க பிரபஞ்சத்தின் நிறை மற்றும் ஈர்ப்பு விசை ஆகியவற்றை ஒப்பிடுகிரார்கள், அதற்கும் சந்திராஸ் லிமிட் அடிப்படையிலேயே கணக்கீடு செய்கிறார்கள்.

  # ரெட் ஷிப்ட் விடயத்தில் நேரடியாக அதனைக்கண்டுப்பிடித்தவர் சந்திர சேகர் என்பதாக சொல்லிவிட்டேன் ,அதனைக்கண்டுப்பிடிக்க அச்சாரமிட்ட டாப்லர் முதல் ஃபிரைட்மேன் வரையில் பலரும் ரெட் ஷிப்ட் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

  ஹப்பிள் ஆய்வும் அதனை உறுதிப்படுத்தி பிரபஞ்சம் விரிவதை சொல்லியுள்ளது.

  படிச்சத எல்லாம் ரெபர் செய்துவிட்டு பின்னூட்டமிடுவதில்லை, பிரபஞ்சம் விரிவடைய எல்லை இருக்கு என்பதையும் ,விரிவடைகிறது என்பதையும் ஐன்ஸ்டீன் கணிக்க தவறிவிட்டார் என்பதையே கூற வந்தேன்.

  # பிரபஞ்சத்தின் அளவினை நிர்ணயிக்க சந்திராஸ் எல்லையே பயன்ப்படுகிறது, ஹபிள் வகுத்த காண்ஸ்டண்ட் என்பதை தெளிவாக கணக்கிட்டு சொல்லியது சந்திரசேகரின் கண்டுப்பிடிப்பே. அது வெறும் நட்சத்திரத்துக்கு மட்டுமல்ல ,பிரபஞ்சத்துக்கும் பொருந்தும் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

  பிரபஞ்ச நிறையை வைத்து, மூன்று நிலைகள் பிரபஞ்சத்துக்கு ஏற்படலாம் என்கிறார்கள்,

  1)பிரபஞ்சத்தின் நிறையும் , ஈர்ப்பு விசையும் சம நிலை ஆனால் ,விரிவடைந்த பிரபஞ்சம் அப்படியே நின்றுவிடும்.

  2) நிறை ஈர்ப்பு விசையை விட அதிகம் ஆனால் ,தொடர்ந்து விரிவடையும்.

  3) நிறையை விட ஈர்ப்பு விசை அதிகம் ஆனால் சுருங்கி ,சிங்குலாரிட்டி ஏற்படும். அதன் பின் மீண்டும் பெரு வெடிப்பு.

  இதற்கு அடிப்படையாக இருப்பது சந்திராஸ் லிமிட் கண்டுப்பிடிப்பே.

  முன்னர் தோராயமாக நினைவில் இருந்து பின்னூட்டமிட்டேன் ,எனவே கொஞ்சம் கவனிக்கலை,இனிமே பார்த்துடுவோம்!

  ReplyDelete
 8. மாறுபடும் ஒளியின் வேகம்,

  http://www.livescience.com/29111-speed-of-light-not-constant.html

  பழைய பாடப்புத்தகத்தை மட்டும் படிக்காதீர் கொஞ்சம் தேடிப்படிக்கவும் செய்யுமய்யா.

  ReplyDelete
 9. \\உம்மோடு எல்லாம் அறிவியல் பேசும் நிலை வரும்னு நினைக்கலை அவ்வ்.\\ உங்களைப் போல விஷயம் தெரிஞ்சவங்க போல என்னைப் போல தெரியாதவங்களுக்கு புரிய வைக்கனுமுங்க ஐயா, இதில என்னங்கைய்யா தப்பு.

  //Vindication would eventually come to Chandrasekhar when he was awarded the Nobel Prize in 1983 for his work. The Chandrasekhar Limit is now accepted to be approximately 1.4 times the mass of the sun; any white dwarf with less than this mass will stay a white dwarf forever, while a star that exceeds this mass is destined to end its life in that most violent of explosions: a supernova. In so doing, the star itself dies but furthers the growth process of the universe—it both generates and distributes the elements on which life depends.// இதுல எந்த வரிகளில்

  \\எவ்ளோ தூரம் பிரபஞ்சம் விரியும் என்பதனை "சந்திரா'ஸ் லிமிட்" என்கிறார்கள்.\\

  அப்படின்னு சொல்லியிருக்காங்கன்னு மட்டும் சொல்லிடுங்கைய்யா, ஏதோ இங்கிலீஷ் தெரியாதவன் கேட்கிறேன்.

  ReplyDelete
 10. \\Speed of Light May Not Be Constant, Physicists Say\\ ஐயா , அறிவாளி ஐயா.......... இதில் May என்று ஒரு வார்த்தை வருதே கவனிச்சீங்களா ஐயா? அது ஆடு கத்தும் சத்தம்னோ, இல்லை ஏப்ரலுக்கு அடுத்து வரும் மாசம்னோ நினைச்சிட்டீங்க போல. அதுக்கு அர்த்தமே வேறங்க ஐயா.

  \\Einstein's theory of special relativity sets of the speed of light, 186,000 miles per second (300 million meters per second). But some scientists are exploring the possibility that this cosmic speed limit changes.\\exploring the possibility அப்படின்னா அர்த்தம் என்னன்னு கொஞ்சம் சொல்லுங்க ஐயா, ஏதோ தெரியாதவன் கேட்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. // Both papers say that light interacts with virtual particle-antiparticle pairs. In Leuchs' and Sanchez-Soto's model, the impedance of the vacuum (which would speed up or slow down the speed of light) depends on the density of the particles. The impedance relates to the ratio of electric fields to magnetic fields in light; every light wave is made up of both kinds of field, and its measured value, along with the permittivity of space to magnetic fields, governs the speed of light.

   Some scientists are a bit skeptical, though. Jay Wacker, a particle physicist at the SLAC National Accelerator Laboratory, said he wasn't confident about the mathematical techniques used, and that it seemed in both cases the scientists weren't applying the mathematical tools in the way that most would. "The proper way to do this is with the Feynman diagrams," Wacker said. "It's a very interesting question [the speed of light]," he added, but the methods used in these papers are probably not sufficient to investigate it.//

   இது இன்னனும் ஆய்வு நிலையிலே உள்ளது..
   மற்றும், அவர்கள் ஃபயின்மென் சமன்பாடுகளை/வரைபடங்களை வைத்தும் ஒளியின் இயல்புகளை கணிக்கவில்லை போலிருக்கிறது.

   Delete
 11. \\பிரபஞ்சத்தின் அளவினை நிர்ணயிக்க சந்திராஸ் எல்லையே பயன்ப்படுகிறது, ஹபிள் வகுத்த காண்ஸ்டண்ட் என்பதை தெளிவாக கணக்கிட்டு சொல்லியது சந்திரசேகரின் கண்டுப்பிடிப்பே. அது வெறும் நட்சத்திரத்துக்கு மட்டுமல்ல ,பிரபஞ்சத்துக்கும் பொருந்தும் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\\ இந்த விஷயமெல்லாம் சந்திரசேகருக்கே தெரியாதுங்களே, உங்களுக்கு எப்படி ஐயா தெரிஞ்சது? பேசாம சந்திரசேகருக்கு குடுத்த நோபல் பரிசை பிடுங்கி உங்களுக்கே குடுத்துடலாம்......... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........

  ReplyDelete

 12. \\பிரபஞ்ச நிறையை வைத்து, மூன்று நிலைகள் பிரபஞ்சத்துக்கு ஏற்படலாம் என்கிறார்கள்,

  1)பிரபஞ்சத்தின் நிறையும் , ஈர்ப்பு விசையும் சம நிலை ஆனால் ,விரிவடைந்த பிரபஞ்சம் அப்படியே நின்றுவிடும்.

  2) நிறை ஈர்ப்பு விசையை விட அதிகம் ஆனால் ,தொடர்ந்து விரிவடையும்.

  3) நிறையை விட ஈர்ப்பு விசை அதிகம் ஆனால் சுருங்கி ,சிங்குலாரிட்டி ஏற்படும். அதன் பின் மீண்டும் பெரு வெடிப்பு.

  இதற்கு அடிப்படையாக இருப்பது சந்திராஸ் லிமிட் கண்டுப்பிடிப்பே.\\ இதை எங்கே படிச்சீங்கன்னு தொடுப்பு இருந்தா குடுங்க ஐயா, நாங்களும் தெரிஞ்சுக்குறோம்............

  ReplyDelete
 13. பாகவதரே,

  நீர் வக்கணையாக கேள்விக்கேட்கிறீரே,ஆனால் உம்மிடம் யாராவது கேள்விக்கேட்டால் பதில் சொல்லியிருக்கீர்ரா?

  சரி அது போகட்டும் விஞ்ஞானத்தால் தீமை தான் என சொல்லிக்கொண்டு ,பின்னர் என்னத்துக்கு அதனை தெரிந்துக்கொள்ள நினைக்கணும் ?

  நான் விரிவாக விளக்கினாலும் புரியவாப்போகுது? கடைசியில் இதெல்லாம் எங்க புராணத்தில சொல்லியாச்சுனு ஒரு கதைய தானே சொல்லப்போறீர் அவ்வ்.

  # நான் எப்பவோ படிச்சதை வச்சு நினைவில் இருந்து சொல்கிறேன் , அதனால் சில சமயங்களில் பெயர் குழப்பம் வந்து விடுகிறது,எல்லாத்துக்கும் ரெபரன்ஸ் இருக்கு ,ஆனால் உடனே அதனை தேடி எடுக்க தான் நேரமில்லை. பதிவாக எழுதினால் விளக்கமாக ,ஆதாரத்துடன் இவற்றினை சொல்ல இயலும்.

  //If the density of the universe is less than the critical density, then the universe will expand forever, like the green or blue curves in the graph above. Gravity might slow the expansion rate down over time, but for densities below the critical density, there isn’t enough gravitational pull from the material to ever stop or reverse the outward expansion. This is also known as the “Big Chill” or “Big Freeze” because the universe will slowly cool as it expands until eventually it is unable to sustain any life.

  If the density of the universe is greater than the critical density, then gravity will eventually win and the universe will collapse back on itself, the so called “Big Crunch”, like the graph's orange curve. In this universe, there is sufficient mass in the universe to slow the expansion to a stop, and then eventually reverse it.//

  http://map.gsfc.nasa.gov/universe/uni_fate.html

  சந்திராஸ் லிமிட் அடிப்படையில்னு சொன்னேன், சூப்பர் நோவா ,அதில் இருந்து பிரபஞ்சம் ,இதற்கு கிரிடிகல் மாஸ் தான் காரணம்,அதன் எல்லையை சந்திரா சொல்லி இருக்கார், ஒன்றிலிருந்து இன்னொன்னு என தொடர்பு படுத்தப்படுவது, எங்கே ஒரே வரியில இல்லைனு கேட்டால் என்ன செய்ய?

  # "varying speed of light " என கூகிள் செய்தால் பல கட்டுரைகள் கிடைக்கும்,நான் சாம்பிளுக்கு ஒன்றை மட்டுமே கொடுத்தேன்.

  # ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவமே ஆய்வுப்பூர்வமாக நிருவாமல் எம்பிரிக்கல் ஃபார்முலாவா தானே காட்டினார். "IF" travels at the speed of light "என்பதே நிபந்தனை, ஆனால் இயல்பில் எந்த பொருளும் ஒளியின் வேகத்தில் பயணிக்காது.

  எனவே பெரும்பாலும் விஞ்ஞான எடுகோள்கள் நிபந்தனைக்குட்பட்ட ,பாசிபிளிட்டிகளை தான் ' assumption" ஆக சொல்லும்.

  ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவமே முழுவதும் நிறுவப்படாத, முடியாத தத்துவம் தான் ,அதில் உள்ள "ஃபேன்சி நேச்சருக்காக" மட்டுமே சிலாகிக்கப்படுகிறது, அத்தத்துவம் முழுமையானதாக இருந்திருந்தால் அதற்கு தானே நோபல் பரிசு கொடுத்திருக்க வேண்டும் ,ஏன் போட்டான் விளைவுக்கு' கொடுக்கிறார்கள்.

  #
  //\\Speed of Light May Not Be Constant, Physicists Say\\ ஐயா , அறிவாளி ஐயா.......... இதில் May என்று ஒரு வார்த்தை வருதே கவனிச்சீங்களா ஐயா? அது ஆடு கத்தும் சத்தம்னோ, இல்லை ஏப்ரலுக்கு அடுத்து வரும் மாசம்னோ நினைச்சிட்டீங்க போல. அதுக்கு அர்த்தமே வேறங்க ஐயா.//

  Huseyin Yilmaz என்ற ஆய்வாளர் வெளியிட்ட The Yilmaz Theory கூட வேறுபடும் ஒளியின் வேகத்தினை வைத்தே ,சார்பியல் தத்துவத்தினை விளக்குகிறது.

  ஐன்ஸ்டீனே ஒளியின் வேகம் நிலையானது என முதலில் எடுத்துக்கொண்டாலும், ஈர்ப்பு விசை, ஆக்சிலரேஷனால் ஒளியின் வேகம் வேறுபடும் என்பதை வைத்தே ரிலேட்டிவிட்டி தியரியை பின்னர் மாற்றி சொல்லி இருக்கிறார்.

  //The Yilmaz refinement of General Relativity solves this problem. The theory shows that the relativistic effect of gravity causes the speed of light to decay to zero at great cosmological distances. Consequently, the actual speed of a galaxy approaches zero at great distances, even though the galaxy is receding at nearly the speed of light. An external source of matter is not needed, because the over-all size of the infinitely expanding Steady-State universe remains constant. We postulate that energy radiated across the universe is converted into matter that compensates for the universe expansion.//

  http://www.olduniverse.com/

  http://en.wikipedia.org/wiki/Yilmaz_theory_of_gravitation

  http://www.dailygalaxy.com/my_weblog/2012/08/light-traveled-faster-in-the-early-universe-todays-most-popular.html

  http://en.wikipedia.org/wiki/Variable_speed_of_light

  ReplyDelete

 14. \\நீர் வக்கணையாக கேள்விக்கேட்கிறீரே,ஆனால் உம்மிடம் யாராவது கேள்விக்கேட்டால் பதில் சொல்லியிருக்கீர்ரா?\\ ஐயா என்னால் பதில் சொல்ல இயலவில்லை என்பதால் உங்களாலும் பதில் சொல்ல இயலவில்லை- என்று சொல்வது நகைப்புக்குரியதல்லவா? உங்களை மாதிரி அறிவாளி என்னைப் போன்ற ஒரு மக்கோடு ஒப்பிட்டு உங்கள் தரத்தையே தாழ்த்திக் கொள்ளலாமா? நான் விஷயம் தெரியாதவன், எடுத்துச் சொன்னாலும் புரிந்து கொள்ளத் தெரியாதவன், என்னுடன் வாதிடுவதே தங்களுக்கு இழுக்கு, ஏமாற்றுவதே என் வேலை இப்படியெல்லாம் என் மேல் குற்றம் சுமத்திய திருவாளர் பரிசுத்தம் ஆகிய தாங்கள் என்னைப் போலவே செயல்படலாமா? அப்புறம் உங்களுக்கும் எனக்கும் என்ன ஐயா வேறுபாடு?

  \\சரி அது போகட்டும் விஞ்ஞானத்தால் தீமை தான் என சொல்லிக்கொண்டு ,பின்னர் என்னத்துக்கு அதனை தெரிந்துக்கொள்ள நினைக்கணும் ?\\ ஐயா, இது நான் கேட்ட முதல் கேள்வியிலேயே இந்த பதிலைச் சொல்லி முடிச்சிருக்கலாமே, இப்போ டவுசர் கிழிஞ்ச பின்னாடி ஞானோதயம் வந்து எதற்கு ஐயா பிரயோஜனம்?

  ReplyDelete
 15. \\நான் விரிவாக விளக்கினாலும் புரியவாப்போகுது? \\ என்னை மாதிரி புரியாதவங்களுக்கு உங்களை மாதிரி அறிவாளிங்க எடுத்துச் சொன்னா தானுங்களே ஐயா புரியும், எல்லோரும் உங்களை மாதிரி அறிவுஜீவியாவே இருக்க முடியுமுங்களா ஐயா?

  ReplyDelete
 16. \\# நான் எப்பவோ படிச்சதை வச்சு நினைவில் இருந்து சொல்கிறேன் , அதனால் சில சமயங்களில் பெயர் குழப்பம் வந்து விடுகிறது,எல்லாத்துக்கும் ரெபரன்ஸ் இருக்கு ,ஆனால் உடனே அதனை தேடி எடுக்க தான் நேரமில்லை. பதிவாக எழுதினால் விளக்கமாக ,ஆதாரத்துடன் இவற்றினை சொல்ல இயலும்.\\ கஷ்டப்பட்டு தேடியெடுக்க நீங்க என்ன பனையோலையில எழுதி பானையிலா போட்டு வச்சிருக்கீங்க? Google........ Google........-ன்னு சொல்றாங்களே ஐயா, அது என்ன மாரியாத்தாவுக்கு ஊத்தும் கூழுங்கலா ஐயா? "அதனை தேடி எடுக்க தான் நேரமில்லை. " என்று உங்க வீட்டு எருமை மாடு கூட நம்பாதுங்க ஐயா. அதே சமயம் இல்லாத ஒன்னை எத்தனை வருஷம் தேடினாலும் கிடைக்காதுங்க ஐயா.......... குழப்பம் வர்றது சகஜம்தானுங்க ஐயா அதுக்காக அமரிக்க ஜனாதிபதி மன்மோகன் சிங்குன்னு எல்லாம் அடிச்சிவிடப் படாதுங்க ஐயா............

  ReplyDelete
 17. \\http://map.gsfc.nasa.gov/universe/uni_fate.html

  சந்திராஸ் லிமிட் அடிப்படையில்னு சொன்னேன், சூப்பர் நோவா ,அதில் இருந்து பிரபஞ்சம் ,இதற்கு கிரிடிகல் மாஸ் தான் காரணம்,அதன் எல்லையை சந்திரா சொல்லி இருக்கார், \\
  நீங்க இன்னும் ஒருவருஷம் வேணுமின்னாலும் தேடுங்க ஐயா
  "சந்திராஸ் லிமிட் அடிப்படையில்"
  பிரபஞ்சத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கலாம்னு எங்கேயாச்சும் போட்டிருந்தா சொல்லுங்க ஐயா, நான் காத்திருக்கேன்.

  \\ஒன்றிலிருந்து இன்னொன்னு என தொடர்பு படுத்தப்படுவது, எங்கே ஒரே வரியில இல்லைனு கேட்டால் என்ன செய்ய? \\ தொடர்பே இல்லாத இரண்டு விஷயங்களை தொடர்புபடுத்த என்ன பண்ணினாலும் முடியாதுன்னு எல்லாம் தெரிஞ்ச எல்லப்பன் உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியனுமாங்கைய்யா??

  ReplyDelete
 18. \\ # "varying speed of light " என கூகிள் செய்தால் பல கட்டுரைகள் கிடைக்கும்,நான் சாம்பிளுக்கு ஒன்றை மட்டுமே கொடுத்தேன்.\\ கற்பனைகளுக்கு வானமே எல்லைங்க ஐயா, ஆனால் ஆய்வுப் பூர்வமாக வந்தால் மட்டுமே அது ஏற்றுக் கொள்ளப் படுமுன்னு சொல்லிக்கிறாங்க ஐயா.............

  \\ # ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவமே ஆய்வுப்பூர்வமாக நிருவாமல் எம்பிரிக்கல் ஃபார்முலாவா தானே காட்டினார். "IF" travels at the speed of light "என்பதே நிபந்தனை, ஆனால் இயல்பில் எந்த பொருளும் ஒளியின் வேகத்தில் பயணிக்காது.\\ எல்லாமே "எம்பிரிக்கல் ஃபார்முலாவா" காட்டினார் என்றால் "இயல்பில் எந்த பொருளும் ஒளியின் வேகத்தில் பயணிக்காது." என்பது மட்டும் தங்கள் கண்டுபிடிப்புங்களா ஐயா?

  ReplyDelete
 19. \\எனவே பெரும்பாலும் விஞ்ஞான எடுகோள்கள் நிபந்தனைக்குட்பட்ட ,பாசிபிளிட்டிகளை தான் ' assumption" ஆக சொல்லும்.\\ என்னமோ சொல்றீங்க ஐயா, எனக்கு விளங்கல.

  \\ ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவமே முழுவதும் நிறுவப்படாத, முடியாத தத்துவம் தான் ,அதில் உள்ள "ஃபேன்சி நேச்சருக்காக" மட்டுமே சிலாகிக்கப்படுகிறது, அத்தத்துவம் முழுமையானதாக இருந்திருந்தால் அதற்கு தானே நோபல் பரிசு கொடுத்திருக்க வேண்டும் ,ஏன் போட்டான் விளைவுக்கு' கொடுக்கிறார்கள்.\\ உங்களுக்கு இன்னமும் ஏன் நோபல் பரிசு குடுக்காமா இருக்காங்கன்னு தான் ஐயா இன்னமும் புரியல..........

  ReplyDelete
 20. \\ http://en.wikipedia.org/wiki/Variable_speed_of_light \\

  Since some of them contradict established concepts, VSL theories are a **matter of debate**.

  \\http://www.dailygalaxy.com/my_weblog/2012/08/light-traveled-faster-in-the-early-universe-todays-most-popular.html\\

  The physicist João Magueijo has proposed a heretical question: **What if** the speed of light—now accepted as one of the unchanging foundations of modern physics—were not constant?

  ஐயா நீங்க கொடுத்த தொடுப்பு எல்லாம் கொஞ்சம் உன்னிப்பா கவனிச்சீங்களா?

  Matter of debate
  What if
  We postulate

  எல்லாம் இப்படியே போவுது, இதுக்கு அர்த்தம் தெரியுமுங்களா?

  எல்லாம் தெரிஞ்ச எல்லப்பன் வவ்வாலுக்கு யாராச்சும் அடிப்படை இங்கிலீஷ் சொல்லிக் குடுங்கப்பா..............

  ReplyDelete
  Replies
  1. பாகவதரே,

   தமிழும் தெரியாம இங்கிலீசும் தெரியாத தத்திய்யா நீர் :-))

   postulate= எடுகோள்.

   அப்படினு தானே நானும் சொல்லி இருக்கேன்.

   ஐன்ஸ்டீனின் சார்பியம் தத்துவம் விவாதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு அறிவியல் உண்மையா?

   அதுவே 'Matter of debate" தானே.

   முடிந்தால் சார்பியல் தத்துவம் 100% சாத்தியம், சரியாக சொல்லப்பட்டது ,நிறுவப்பட்டது என ஆதாரம் கொடுக்கவும்.

   அத்தத்துவமே "கண்டிஷன்ஸ் அப்ளைடு" என தான் நிறுவ முடியும்!

   அவரது தத்துவத்தில் இருக்கும் பிழைகளை பலரும் சுட்டி கட்டுரைகள் எல்லாம் எழுதி இருக்காங்க , நீர் தான் கூகிள் செய்வது என்ன கஷ்டமானு சொன்னீர்ல தேடிப்பாரும்.

   Delete
 21. பாகவதரே,

  //"சந்திராஸ் லிமிட் அடிப்படையில்"
  பிரபஞ்சத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கலாம்னு எங்கேயாச்சும் போட்டிருந்தா சொல்லுங்க ஐயா, நான் காத்திருக்கேன். //

  இக்கடச்சூடும்,

  //When a small ancient star known as a white dwarf has a companion star in close orbit around it, matter can be pulled from the companion star onto the white dwarf. If the infall occurs rapidly enough, the white dwarf will reach a critical mass limit of 1.4 solar masses (the Chandrasekhar limit - discovered by Chandra's namesake!) and subsequently explode. Because the mass of the exploding star for this class of supernova, called Type Ia, is always the same, the intrinsic brightness of the resulting explosion is also the same.

  A Type Ia supernova is called a "standard candle" for this convenient trait, and can be used to determine the distance to supernovas. For example, if one such supernova appears to be dimmer than another, it must be further away by an amount that can be computed from the difference in apparent brightness of the two supernovas.//

  http://chandra.harvard.edu/chronicle/0204/darkenergy/index.html

  A Type Ia supernova is called a "standard candle" இந்த சூப்பர் நோவா சந்திர சேகர் வரையறுத்த கிரிடிகல் மாஸ் உடையது.

  அதனை தாண்டிய சூப்பர் நோவாவினை சூப்பர் சூப்பர் நோவா என அழைக்கிறார்களாம்,அதுக்கு கூட சந்திரசேகர் சூப்பர் நோவா எனப்பெயரிடுகிறார்கள்!!!

  //Type 1a supernovae are usually used as a cosmic ruler to measure distances to supernovae's host galaxies. "Cosmologists also use them to try to understand the way the universe expanded in the past and how it is likely to do so in the future", and to explore the nature of dark energy.
  Type 1a supernovae, called white dwarfs, are caused by the explosion of dead cores of stars. Scientists initially thought that white dwarfs were not able to exceed the Chandrasekhar limit, a critical mass that equals about 1.4 times that of the Sun, before it explodes in a supernova. The Chandrasekhar limit is a vital tool for cosmologists to measure distances to supernovae. //

  http://cordis.europa.eu/news/rcn/31887_en.html

  இதனடிப்படையில் பிரபஞ்சம் எவ்வளவு தூரம் விரிகிறது,எல்லை எல்லாம் கண்டுப்பிடிக்கிறாங்க. மேலும் பிரபஞ்சத்தின் கிரிடிகல் மாஸ் கண்டுப்பிடிக்கவும் சந்திரசேகர் வகுத்த வழிமுறைகள் உதவுகின்றன.

  அதனால் தான் சந்திரா எக்ஸ்ரே அப்சர்வேட்டரி என பெயரிட்டு இருக்கிறார்கள், இவ்வாய்வு மையமே பிரபஞ்சத்தின் கிரிடிகல் மாஸ் என்ன என கண்டுப்பிடித்தது.

  இதெல்லாம் சந்திர சேகர் போட்ட அடிப்படையில் செயல்ப்படுது அதுக்குனு ,அவர் சொன்ன தியரிய நேரா அப்ளை செய்றாங்கலானு கூமுட்டைத்தனமா கேட்டுக்கொண்டிருந்தால் கேட்டுக்கொண்டே தான் இருக்கணும்!

  ReplyDelete
 22. @ வவ்வால்

  ஐயா..........

  டெலிஃபோன் ஒயர் அந்து போய் மூனு மசமாவுது...........

  ரீல் அந்து போச்சு.............

  வேணாம்........ விட்டுடு .......... நான் அழுதிடுவேன்............
  ஒருத்தன் பரிட்சைக்கு தென்னை மரத்தை பத்தி படிச்சிகிட்டு போனானாம், ஆனா கொஸ்டீன் பேப்பர்ல பசுமாட்டை பத்தி எழுதச் சொல்லிட்டாங்களாம். பாத்தானாம், பசுமாட்டை கொண்டுபோய் தென்னை மரத்தில் கட்டினாங்கன்னு எழுதிட்டு, அந்த தென்னை மரம் எப்படிப் பட்டதுன்னு தான் படிச்சதை வச்சு மிச்சத்தை எழுதி முடிச்சானாம்.

  உங்களோட தற்போதைய நிலைப்பாட்டுக்கு மேற்சொன்ன எல்லாமே அற்புதமா பொருந்தி வருதுங்கய்யா.........

  இப்படியே சுத்திகிட்டு இருங்க, ஏலியன் மாதிரி இளிச்சவா பயலுங்க ஊர்பூரா சுத்திகினு இருக்கானுவ, உமக்கு நல்லவரு..... வல்லவருன்னு சொல்லி சல்லியடிக்கிறதுக்கு, அப்புறம் என்ன?


  கற்றது கைம்மண்ணளவு, எல்லாம் தெரிஞ்சவன் யாரும் கிடையாது. ஆனால் தவறான தகவல்களைத் தருவது, பின்னர் அது தெரிந்த பின்னர் "முயலுக்கு மூனுகாலே தான்" என்று விடாப்பிடியாக நான் சொன்னதே சரி என்று நிற்பது போன்றவற்றைச் செய்து ஏலியன் மாதிரி இளிச்சவாயர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கலாம், விஷயம் அறிந்தவர்கள் மத்தியில் அது உம்மை உயர்த்திக் காட்டாது. திருந்துமைய்யா...........திருந்து.............

  ReplyDelete
  Replies
  1. பாகவதரே,

   புளியோதரை சாப்பிட்டு சாப்பிட்டு சாப்பிட்டு மூளை புழுத்து விட்டதா?

   நான் கொடுத்த தரவுகளை படித்தாலே நான் சொன்னது சரியானது என்பது புரிந்திருக்கும், எதுவும் நானாக சொல்லவில்லை,என்ன நினவில் இருப்பதை வைத்து சொன்னதால் சொற்கள் முன் பின்னாக போய்விட்டது, பல சந்தர்ப்பங்களில் படித்ததை இந்தளவுக்கு நினைவு வைத்து சொன்னதே என்னைப்பொறுத்து பெரிய விடயம், நீர் பிடித்த நாய்க்கு மூனு கால் என நின்றால் நான் என்ன செய்ய?

   அதனால் தான் ஆரம்பத்திலே சொன்னேன் ,இதெல்லாம் உமக்கு புரியாது என்று, புரியாத விடயம் என்பதால் தவறான விடயம் என குருட்டுத்தனமாக பேசிக்கொண்டிருக்க உம்மை விட்டால் லோகத்தில் ஆளேது அவ்வ்!

   போய்யா போய் மூஞ்சில வழியும் அசடைத்துடைத்துக்கொண்டு ,பஜனையை பாடும் அதை விட்டால் உமக்கு வேறென்ன தெரியப்போகுது.

   # சார்வாகன் நாம் சொன்னதில் உள்ள உண்மைகளை இன்னும் விளக்கி பதிவிட்டிருப்பதை படித்துப்பாரும்,அப்போவாது நான் எந்தளவுக்கு சரியாக சொன்னேன் என்பது புரியும், இதுக்கு தான் உம்மை போன்ற கடம் அடித்து பாசான கூமுட்டைகளுடன் அறிவியல் பேசக்கூடாது என்பது.

   http://aatralarasau.blogspot.in/2014/04/blog-post.html?showComment=1397839274671#c3274528654301425666

   Delete
 23. திருடனுக்கு இருட்டு சாட்சியா?

  ReplyDelete
  Replies
  1. உம்மை போன்ற அரைமண்டைக்கு இன்னொரு அரைமண்டையத்தான் சாட்சியா கூப்பிட்டு வரணுமா?

   சரி கஜேந்திர மோட்சம்னா என்னனு தெரியுமா? யானைக்கு சொர்க்கம் கிடைக்கும் போது ஏன் மிருகங்கள் சொர்கம் போகாதுனு புராணத்திலும் புளுகுகிறீர் :-))

   புராணத்திலும் புளுகும் உமக்கு எங்கே அறிவியல் தெரியப்போகுது?


   நம்மக்கிட்டே மூக்கை உடைச்சிக்கனே சிக்கிய ஆளுய்யா நீர் :-))

   Delete

 24. @ வவ்வால்

  பொய், புனைசுருட்டு, முட்டாள்தனமான உளறல், அதை மூடிமறைக்க மேலும் மேலும் அடுக்கடுக்கான பொய்கள், தன் அறியாமையை மூடிமறைக்க இன்னொரு செம்புதூக்கியின் துணையை நாடுதல், இதெல்லாம் ரொம்பநாளைக்கு கூட வராதுங்கைய்யா..........

  ReplyDelete
 25. \\ரெட் ஷிப்டை மட்டும் தவறாக கூறிவிட்டேன் என அப்பொழுதே சொல்லிவிட்டேன்.\\நீர் இந்த அளவுக்கு வந்ததே பெரிய விஷயம்யா !! Great !!

  வவ்ஸ், இங்கே யாரும் சூரப்புலி கிடையாது. உமக்கு விஷயம் தெரியாது என்று சிறுமைப் படுத்தி அதில் ஆனந்தம் காணுமளவுக்கு நான் தரம் தாழ்ந்தவனில்லை. நீர் சொன்னதில் உண்மை இருந்தால் ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

  இதுவரை நடந்த விவாதத்தில் நான் சொல்லிக் கொள்ள இது தான்.

  1. ஒளியின் வேகம் மாறும் என்பது பரிசோதனை அளவில் இன்னமும் ஏற்கப் படவில்லை.

  2. சந்திரசேகர் லிமிட் என்பது ஒரு விண்மீனின் [star] கதி என்னவாகும் என்பதைப் பற்றி சொல்கிறது. இது பிரபஞ்சத்திற்கும் பொருந்தும் என்ற கூற்று எங்கும் சொல்லப் படவில்லை.

  3. பிரபஞ்சத்தின் கதி [நீர் குறிப்பிட்ட 3 விதமான இறுதி நிலைகள்] என்னவாகும் என்பதை சந்திரசேகர் லிமிட் கூறுகிறது என்ற உமது கூற்று தவறான புரிதல், நீர் கொடுத்த எந்த சுட்டியிலும் அவ்வாறு சொல்லப் படவில்லை.

  4. ஒரு நட்சத்திரம் சூப்பர்நோவாவாக வெடிக்க என்ன கண்டிஷன் என்பதை சந்திரசேகர் லிமிட் சொல்கிறது. Galaxy களில் நடக்கும் சூப்பர்நோவா வெடிப்பை ஆராய்ந்து அந்த Galaxyஎவ்வளவு தொலைவில் உள்ளது, எவ்வளவு வேகத்தில் நம்மை விட்டு விலகுகிறது என்று கணக்கிட முடியும். இதைக் கொண்டு பிரபஞ்ச விரிவாக்கத்தைப் பற்றி பல தகவல்களை யூகிக்க முடியும், அதனால் சந்திரசேகர் லிமிட் பிரபஞ்சத்துக்கும் பொருந்தும் என்றாகிவிடாது.

  இறுதியாக: என்னுடைய மேற்கண்ட கூற்றுகளில் தவறும் இருக்கலாம், விவரமறிந்தவர்கள் எடுத்துச் சொன்னாள் ஏற்கத் தயார்............

  ReplyDelete
 26. மிகவும் உபயோகமான பதிவு!நன்றி.

  ReplyDelete