Friday 7 February 2014

ஆறாம் திணை. நண்டு ஊறுதும் நரி ஊறுதும்....

ஆறாம் திணை. ஆனந்த விகடனில் உருப்படியாய் வரும் ஒரு தொடர் கட்டுரை. இந்த வாரம் இதில் மருத்துவர்.சிவராமன் செயற்கை உணவுகள் மற்றும் குழந்தகளுக்கு உடல் உழைப்பு இல்லாமை பற்றி குறிப்பிட்டிருந்தார்.

கட்டுரையின் கடைசி பத்தியை வாசித்தேன். இந்த முறையில் தழிழ்நாட்டில் சாப்பிட்ட கடைசி தலைமுறையை சார்ந்ததாலோ என்னவோ (கிராமங்களில் கூட இப்பொழுதெல்லம் பார்க்க முடிவதில்லை), இதை பகிர வேண்டும் என்று தோன்றியது..

நீங்களும் வாசிக்கவும்...

குழந்தையின் மென்மையான உள்ளங்கையை சமையல் களமாக்கி 'இது இட்லி,இது சாம்பார் சாதம்,இது கத்தரிக்காய் பொரியல்,இது தயிர்ச் சோறு...' என ஒவ்வொரு விரலாக மடித்து,அம்மாவுக்கு ஒரு வாய்,அப்பவுக்கு ஒரு வாய்,பாட்டிக்கு ஒரு வாய்,தாத்தாவுக்கு ஒரு வாய்,அப்புறம் தொழுவத்துல உள்ள கன்னுகுட்டிக்கு ஒரு வாய், அப்புறமா இந்த செல்லக்குட்டிக்கு' என நண்டு ஊறுது, நரி ஊறுது எனச் சொல்லி மகிழ்வித்து உறவை உயிரைப் போற்றி உணவூட்ட்டிய சமூகம் இது.

இதன் அக்கரை தரும் சுவையையும்,பயனையும் எந்த உப்பு, உயர் புட்டி உணவும் தந்துவிடவ முடியாது

5 comments :

  1. Replies
    1. முதல் கருத்துரையின் போது தளம் இங்கே (http://buddyhost.info/) செல்கிறது... கவனிக்கவும்...

      ஏதோ Gadget-ல் தவறு உள்ளது நீக்கவும்...

      Delete

    2. "Daily Calendar " gadget -ல் தான் பிரச்சனை.. நீக்கிவிட்டேன்...

      Delete
  2. கிராமங்களும் ந'ர'கமாகிக் கொண்டு வருவது வேதனை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

      பாவம் குழந்தைகள்... :-(

      Delete