Friday 31 January 2014

இந்தியப்* பகுதியில் பாகிஸ்தானும், சீனாவும் இணைந்து அமைத்துள்ள நெடுஞ்சாலை


வணக்கம்!!!


இது ஒரு சர்வதேச பிரச்சனை என்பதால் தலைப்பில் உள்ள * குறியீடுக்கான அர்த்ததை முதலில் சொல்லிவிடுகிறேன்.தலைப்பை முதலில் இந்தியாவில் என்று தான் வைத்திருந்தேன், ஆனால் அது மிகப்பெரிய அபத்தம் என்பதால் இந்தியப் பகுதி என மாற்றிவிட்டேன் [அபத்தத்தை இறுதியில் பார்க்கலாம் :)]. அதென்ன இந்தியப் பகுதி..ஆமாம், அதுவே தான். காஷ்மீர்.
நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசுகிறேன் என்று வழக்கு தொடரவும் வாய்ப்புள்ளதால் தான் * குறியீடு, ஆனால் இந்தியாவின் இறையாண்மை அல்ல, பாகிஸ்தானின் இறையாண்மை.  ஏனெனில் இந்த நெடுஞ்சாலை அமைந்துள்ள இடம் பாகிஸ்தானின் ஆளுகைக்கு உட்ப்பட்ட காஷ்மீர் பகுதியில். 1948-ம் ஆண்டு நடந்த முதல் இந்திய-பாகிஸ்தான் போரில், ஐ.நா சபை  அவரவர் போரில் கைப்பற்றிய பகுதியில் தங்கள் எல்லைகளை அமைக்க வேண்டும் என சில வழிமுறைகளை கூறியது. அத்துடன் இரு தரப்பு ராணுவமும் வெளியேறிய பிறகு ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீர் மக்கள் இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணையலாம் அல்லது தனி தேசமாக தொடரலாம் என முடுவெடுக்கப்பட்டது. ஆனான் துரதிர்ஷ்டவசமாக, ராணுவமும் வெளியேறவில்லை, எனவே வாக்கெடுப்பவது மன்னாங்கட்டியாவது என்று இரு நாட்டு அரசுகளும் கங்கணம் கட்டிக் கொண்டு காஷ்மீரை கூறு போட தொடங்கின. 1965-ல் நடந்த இந்தியா-சீன போர், அதை போர் என்று சொல்லக்கூடது. அரசியல்வாதிகள் அடிமட்ட மக்களின் நிலங்களை அடாவடியாக எழுதி வாங்குவது போல் லாடாக் பகுதியின் கிழக்கில் உள்ள சின்சியாங்க்(தற்போதைய பெயர்) பகுதியை வளைத்துக்கொண்டது.


அப்படி என்ன இருக்கிறது காஷ்மீரில்? சொர்க்கம் என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் காஷ்மீருக்கு போனால் நேரில் பார்க்கலாம். வெண்மையும், பச்சையும்,நீலமும் கலந்த ஒரு பரவச உலகம் அது. இந்த் பதிவை படித்துவிட்டு பின்னூட்டத்தில் தெரிவித்தால் காஷ்மீர் பற்றி பதிவிடுகிறேன்(ஏனென்றல் இது கொஞ்சம் SENSITIVE). சரி எங்கோ போகிறோம்... நெடுஞ்சாலைக்கு போவோம்.

காரகோரம் மலைத்தொடர், எங்கோ படித்த மாதிரி இருக்கிறதா? பள்ளி வரலாறு புத்தகத்தில் இந்தியாவின் மிக உயர்ந்த சிகரங்களை கொண்ட மலைத்தொடர் என்று இருக்கும். ஆனால் இது ஒரு மொள்ளமாரித்தனம் என்பது பலருக்கு தெரிவதில்லை. எனெனில்  காரகோரம் பகுதி முழுவதும் பாகிஸ்தான் வசம் போய் கிட்டத்தட்ட 65 ஆண்டுகளுக்கு மேல் ஆச்சு. இந்த காரகோரம் மலைத்தொடரில் தான் பாகிஸ்தானும், சீனாவும் நெடுஞ்சாலை அமைத்திருக்கிறார்கள். உலகின் மிக உயர்ந்த நெடுஞ்சாலையும் இதுவே. சராசரி உயரம் 4500 மீட்டர்கள்!!!.

பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் இருக்கும் இந்த நெடுஞ்சாலை சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீரின் ஜின்சியாங்க் நகரையும் அபோதாபாத், ஆம் பின்லேடன் தங்கியிருந்த அதே அபோதாபாத்யும் இணைக்கிறது.. 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சாலை பணி 1979-ல் முடிவடந்தது. 1986-ம் ஆண்டு போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது. என்ன இந்தியாவா? அப்போது என்ன செய்துகொண்டிருந்ததா? ம்ம்ம் பஞ்சசீலக் கொள்கைகளை வகுத்துக்கொண்டிருந்தத்து.. அட போங்கப்பா......

1300 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த நெடுஞ்சாலை இதன் கரடு முரடான பதைகளுக்கு பெயர்போனது. சுற்றிலும் இமய மலை, பனிக்காற்று, ஆறுகள் என்று இது ஒரு அழகுப் பிரதேசம். இதன் இன்னொரு சிறப்பு  யுரேசிய கண்டத்தட்டு மற்றும் இந்திய கண்டத்தட்டையும் கடந்து இந்த நெடுஞ்சாலை பயனிக்கிறது, மேலும் ஆப்கனிஸ்தான், டஜிகிஸ்தான்னும் மிக அருகில் வந்து போகும். பாகிஸ்தானை பொருத்தவரையில் இது ஒரு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடம், எனென்றால் கில்கிட்-நகரின் அருகில் தான் நம் நாட்டின் கார்கில் உள்ளது. சும்மா இமய மலையில் ஒரு ஏறு ஏறி இறங்கினால், பாகிஸ்தான் சென்றுவிடலாம். அங்கே சீன வீரர்கள் நம்மை கைமா பண்ண காத்திருப்பார்கள் என்பது வேறு விடயம்.

கில்கிட், சிந்து,ஜால்கோட் நதிகளை கடந்து செல்லும்  இதன் 801 கிலோ  மீட்டர்கள் பாகிஸ்தானில் உள்ளது.அப்படியே போகிர வழியில் killer Mountain என்று அழக்கப்படும் நங்க பர்பத் மலையை பார்ர்தபடி பயனித்தால் குஞ்செராப் கணவாய் வழியே பாகிஸ்தானின் எல்லைக்கு வந்துவிடலாம். அங்கே செக் போஸ்டில் கையெழுத்து அல்லது கைநாட்டு வத்து விட்டு அப்படியே ஒரு சைனா டீயும் குடித்துவிட்டு வண்டியை எடுத்தால் நேராக குல்மா கணவாய் வழியாக சீனாவின் பகுதியில் மலிவு விலையில் பெட்ரோல் போட்டுக்கொள்ளலாம். சீனவின் பகுதில் பெரிய குடியிருப்புகள் எதும் இல்லை, மக்களை குடிவைக்கவா வளைத்துபோடுவார்கள். எல்லாம் அதற்கு தான்.. புரிந்துவிட்டதா? சரி நல்லது....

பாகிஸ்தான் இதை ஒரு சுற்றுலாதலமாக மாற்றியுள்ளது. இமய மலையில் ஏற விரும்பும் வெளி நாட்ட்டவருக்கு இது ஒரு மிகச் சிறந்த கேந்திரம். பாகிஸ்தானின் கடவுச்சீட்டு இல்லாமல் இருந்தால் நீண்ட நாட்கள் தாக்குபிடிக்க முடியாது(உளவாளி என்ற பயம் கலந்த மரியாதையால்). ஒன்று ராணுவத்தால் மற்றொன்று பல குண்டு வெடிப்புகளையும், தீவிரவாத செயல்களையும் பொறுப்புடன் செய்து பொறுப்பேற்கும் சுதந்திர போராட்ட வீரர்களால், அட பாகிஸ்தானின் அத்தனை ஆட்சியாளர்களும் அப்படித்தான் கூறுகி(ன்)றார்கள்.

ஆயிரம் வார்த்தை சொல்ல முடியாததை ஒரு படம் சொல்லிவிடும் என்பார்கள். கீழே காரகோரம் நெடுஞ்சாலையின் சில படங்களை இணைத்துள்ளேன். பார்த்து ரசிக்கும் போதே கண்டிப்பாக மெல்லிய ஏக்கம் வருவது ஏன் என்று தெரியவில்லை.

  


முதலில் கூறிய அபத்தத்தை பார்ப்போம். இப்படிப்பட்ட பகுதியத்தான் இந்தியா , பாகிஸ்தானிடம் போய் அது எனக்கு சேர வேண்டிய பகுதி, குடுத்துவிட்டு போய் ஹிந்துகுஷ் மலையில் கோவேரு கழுதை மேய்த்து பிழைத்துக்கொள் என்று சொல்கிறது. இனிமேலும் இதை எப்படி கொடுப்பர்கள்? இந்தியப் பகுதி என்று சொல்லக்கூட இனிமேல் நமக்கு வழியில்லை. அங்கு போவதற்கு இந்தியன் என்ற காரணத்தினாலே கண்டிப்பாக கெடுபிடிகள் இருக்கும். ம்ம்ம் என்ன செய்வது, இப்படி நெட்டில் பார்த்து ஆசையை தீர்த்துக்கொள்ள வேண்டியது தான்.
 


5 comments :

  1. கசுமீர மக்களின் அடிப்படை உரிமைகளையும் நில புலங்களையும் சுதந்திரத்தையும் மூன்று நாடுகளும் சேர்ந்து கூறு போட்டு கொண்டதே மிகப் பெரிய மானிடக் கொடுமை. பேராதிக்க சக்திகளால் பிளவடைந்துள்ள கசுமீரத்தின் சுதந்திரத்தைப் பற்றி உலகில் எவருக்கும் கவலை இல்லை. இந்தியா, பாகிஸ்தான், சீனா கிடைக்கிற வரைக்கும் லாபம் என பிடுங்கி கொண்டு அப்பாவி கசுமீரிகளை நட்டாற்றில் விட்டுள்ளன. ஐநாவின் வழிகாட்டலின் படி ராணுவங்கள் வெளியேறி பொது வாக்கெடுப்பு வைத்திருந்தால் விடுதலை பெற்ற கசுமீர குடியரசு மலர்ந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகி இருக்கும், பலரும் கொல்லப்பட்டும் இரார்கள். நம் இந்தியாவுக்கும் வீண் பகையும், ராணுவ செலவினங்களும் குறைந்திருக்கும். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களும் குறைவாக இருந்திருக்கும். கசுமீரத்தை விட்டுவிட்டு ஒத்த மொழி பண்பாடு உடைய நேபாளத்தை இந்தியாவோடு சேர்த்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..


      ஷேக் அப்துல்லா காஷ்மீரின் பிரதமராக இருந்த காலத்தில் அப்படி ஒரு நிலை வந்தது. ஆனால் பாகிஸ்தானில் காஷ்மீர் இல்லாமல் அரசியல் பண்ணவே முடியது என்ற நிலை அப்பொழுது வந்துவிட்டிருந்ததால் அப்படியே அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டன.
      சும்மா சுதந்திர காஷ்மீர் என்று ஒப்புக்கு ஒரு சிறிய பகுதியை அறிவித்துவிட்டு, மற்ற பகுதிகளை சீனாவின் துணை கொண்டு ஆக்கிறமித்துக் கொண்டனர். இதில் மக்கள் விருப்பமே பலியாடு ஆனது..

      //பொது வாக்கெடுப்பு வைத்திருந்தால் விடுதலை பெற்ற கசுமீர குடியரசு மலர்ந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகி இருக்கும்,//

      ஆமாம். 5000 வருட பாரம்பரியம் கொண்ட ஒரு தேசம் இப்படி பந்தாடப்படுகிறது.. விரைவில் கசுமீர குடியரசு மலரும் என நம்புவோம்.

      Delete
  2. அழகும், ஆபத்தும் நிறைந்திருக்கும் பொல!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      அழகை விட இப்போ ஆபத்து அதிகமா போச்சு.. :-(

      Delete
  3. படிக்கும்போது ஒரு ஆர்வம் என்னை தொற்றிக்கொன்டது இந்த சாலையில் இந்தியர் ஆகிய நாம் பயனிக்க வாய்ப்பு உள்ளதா?

    ReplyDelete