Sunday 6 July 2014

யாருக்கு ரசிகர்கள் அதிகம் ஷரபோவா அல்லது சச்சின் ?

வணக்கம்.

ஷரபோவா சச்சினை யாரென்று தெரியது என்று சொன்னது சச்சினுக்கு வேண்டுமானால் பெரிதாக இல்லாமல் இருக்கலம். ஆனால் அவரின் அடிபொடிகளாகிய சச்சின் ரசிகனுக்கு (வெறியர்களுக்கு என்றும் கூறலாம்) வேறு அனைத்தையும் விட முக்கியமான விடயம்.


S.Ramani அவர்களின் பதிவில் ஒரு பெயரிலாத கொரில்லா(அதான் பெயரே இல்லையே, என்ன பெயர் சொன்னால் என்ன) இந்த கேள்வியைத் தான் கேட்டது. ரமணி அவர்களின் பதிவின் இணைப்பு கீழே...
http://ramaniecuvellore.blogspot.in/2014/07/blog-post_5.html

இதற்கு பதில் தேடுவோம். ஐரோப்பாவில் ஃப்ரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடென், ரஷ்யா, அயர்லாந்து, இங்கிலாந்து என  கிட்டத்தட்ட 30 நாடுகள், பல தென்னமெரிக்க நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா,நியுசிலாந்து, கிழக்காசிய நாடுகள், இந்தியா என நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச்  சேர்ந்த விரர்களைக் கொண்டது டென்னிஸ் விளையாட்டு. டென்னிஸ்-ல் அற்புதமாக விளையாடும் ஒரு வீரருக்கு தேசம் கடந்த ரசிகர்கள் இருப்பது விளையாட்டை பார்ப்பவர்களுக்கு தெரியும். உதாரணம் பீட் சாம்ப்ரஸ், ரோஜர் ஃபெடரர். ஷரபோவா 17 வயதில் பட்டம் வென்றவர். அப்போதிலிருந்தே அவருக்கு என ஒரு ரசிகர் வட்டம் உருவாக தொடங்கியது. டென்னிசைப் பார்க்கும் அனைவருக்கும் ஷரபொவாவை தெரியும்.


கிரிக்கெட்டில் இல்லாத ஒரு முக்கியமான விடயம், டென்னிஸில் தனிமனித திறமையே ஒருவரின் வெற்றி தோல்வியை முடிவு செய்யும். மூன்று மணி நேரத்திற்கும் மேல் தனியாக களத்தில் நின்று எதிராளியை சமாளிக்க வியூகங்கள் அமைப்பது, பந்து வரும் ஒரு நொடியில் அதனை எப்படி அடிக்க வேண்டும் என முடிவு செய்வது என தனிமனிதனின் ஆளுகையில் தான் வெற்றி, தோல்வி நிர்ணயம் செய்யப்படுகிறது.ஆனால் இதுவே கிரிக்கெட்டில் பந்தையும், மட்டையும் தொடாமலேயே ஒருவன் வெற்றியை சொந்தம் கொண்டாட முடியும். கிரிக்கெட் உலகக்கோப்பையில் 15 பேர் கொண்ட அணியில் பங்கு பெற்றவர்கள் ஒரு ஆட்டத்திலும் ஆடமலேயே பல கோடிகளை வீட்டுக்கு அள்ளிச் செல்கின்றனர். ஐபில் வந்த பிறகு வீரர்களை ஏலம் எடுக்கும் தொழிலதிபர்கள், இதை ஒரு வணிகமாகவே மாற்றிவிட்டனர். அவர்களே சூதாட்டம் நடத்துவார்கள், நட்டமடைந்தால் அடுத்தவர்களை போட்டுக் கொடுப்பார்கள். இந்த ஜென்டில்மேன் விளையாட்டில் இதெல்லாம் சகஜமாகிப்போய்விட்டது. கிரிக்கெட்டில் நடக்கும் உலகக்கோப்பை இன்னொரு கேலிக்கூத்து. கிட்டத்தட்ட 10 நாடுகளின் வீரர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் இதில் வெற்றி பெருபவர் உலக சாம்பியன்... வெளங்கிரும். மற்றொன்று சச்சின் சதமடிக்கும் போட்டியில் இந்தியா தோற்றுவிடும் என்னும் நம்பிக்கை. பல போட்டிகளில் அவர் தனது சொந்த சாதனைகளுகாக தான் விளையாடுவார் பின்னர் எப்படி இந்தியா தோற்காமல் இருக்கும். 90 ஓட்டங்களுக்கு மேல் போனபின் 100 அடிக்க பல பந்துகளை வீணடிப்பார். அந்த பதட்டத்திலேயே 90-களில் பமுறை ஆட்டம் இழந்துள்ளார். நம் மேல் சபையின் உறுப்பினர் என்ற முறையில் தன் அடிமட்ட ரசிகர்களின் நலனுக்கு விரோதமாக இயற்றப்படும் சட்டங்களைப் பற்றி இதுவரையில் ஒரு வார்த்தை விமர்சனம் கூட செய்யவில்லை இந்த கோடிகளைக் குவிக்கும் வீரர். 

10 நாடுகள் மட்டும் பங்குபெறும் கிரிகெட்டை பற்றி பல நாட்டு மக்களுக்கு தெரியாமல் இருப்பதில் வியப்பில்லை. அவர்களுக்கு எதில் விருப்பமோ அந்த விளையாட்டில் இயற்கையாக அவர்களின் கவனம் போவது இயல்பே. அதனைப் பற்றிய தகவலகளை தெரிந்து கொள்வது போல் மற்ற துறைகளைப் பற்றி ஆர்வமின்றி இருப்பதும் அவரவர் விருப்பம். அதே போல ஷரபோவா தன் துறை சார்ந்த விடயங்களை தெரிந்து வைத்திருந்தால் போதுமானது, மற்றதெல்லம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என அவருக்கு எந்த கட்டாயமும் இல்லை. ஒருவேளை அவர் பொது அறிவில் அவ்வளவு திறமையானவராக இல்லமலும் இருக்கலாம். எனவே சச்சினை ஷரபோவா தெரியாது என்று கூறியது ஒரு சாதாரணமான நிகழ்வாகவே இருக்குமே தவிர வேண்டுமென்றே நிகழ்ந்ததாக இருக்காது. உலகம் முழுவதும் விளையாடும் டென்னிஸ் நட்சத்திரத்திற்கு பல ரசிகர்கள் இருப்பார்கள், இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை விட அதிகமாகவே இருப்பார்கள்.

நாட்டில் பல பிரச்சனைக்கும் வாயைத் திறக்காதவர்கள், இந்த ஒரு நிகழ்வுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.  250 ரூபாய் சமையல் எரிவாயு விலை ஏற்றப்போவதாக செய்தி வெளியான போது [இப்போது நீக்கிவிட்டகள் :-)] வாயை சாப்பிடக் கூட திறக்காத இந்த பண்ணாடைகள் இதற்கு மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு ஷரபோவாவின் "FaceBook" பக்கத்தில் போய் வாந்தி எடுத்து வைத்துள்ளன. ஒரு சர்வதேச பிரபலத்தின் பக்கத்தை அனைத்து நாட்டு மக்களும் பார்ப்பார்கள் என்ற சிறிய அறிவு கூட இல்லாமல் கருத்துக்களை பதிவிட்டிருக்கிறார்கள். இதைப் பார்க்கும் வேற்று நாட்டவர்கள் மத்தியில் நம் மக்களைப் பற்றிய மதிப்பும், மேதகு சச்சினின் ரசிகர்களைப் பற்றிய மதிப்பும் எவ்வாரு போய்ச் சேரும் என கொஞ்சம் கூட நினைக்கவில்லை. அவரும் இந்த கேடுகெட்ட செயலைப்பற்றி எதுவும் கூறாமல் இருக்கிறார்.

3 comments :

  1. வெறியால் வரும் வாந்தி...!

    ReplyDelete
  2. வாங்க தலைவா...

    வெறி புடிச்சா இவங்களுக்கு மட்டும் எப்ப்டி வாந்தி வருது..

    நம் நாட்டில் சில பேரை விமர்சனமே செய்யகூடாது.. இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், சச்சின்........
    அவர் மத்த பாட்டுக்களை காப்பி அடித்தால் "inspiration" , அதுவே இளம் இசையமைப்பாளர் செய்தால் "copycat".
    எங்க போய் சொல்ல :-(

    ReplyDelete
  3. யாருக்கு ரசிகர்கள் அதிகம் என்று ஓட்டெடுப்பு நடத்தினால் இப்படிக் கூவிகொண்டிருக்கும் கிரிக்கெட்சோம்பேறிகளின் ரசிகர்களுக்கு பேரிடி விழும்.

    இந்தியாவில் சில புண்ணியவான்களை sacred cow என்று வெகு உயரத்தில் வைத்துவிட்டார்கள் மக்களில் சிலர். அதுபடி சச்சினை யாரும் விமர்சனமே செய்யக்கூடாது. இளையராஜாவைப் பற்றி எதிராக எதுவும் சொன்னால் அதற்கும் தடா. உங்களின் அலுப்பு கோபம் எல்லாமே நியாயமானதுதான். Inspiration and copy இரண்டும் ரசிகர்கள் தங்களுக்கேற்றார்போல மாற்றி உபயோகிக்கும் அர்த்தமில்லாத வார்த்தைகள்.

    பதிவுக்கு பாராட்டுக்கள் நண்பரே.

    ReplyDelete