Monday 12 August 2013

The Conjuring - இது சாதாரண திகில் படம் இல்லை...!

திகில் படங்களில் இரண்டு வகை, ஒன்று படுபயங்கர காட்சிகள், வெட்டு குத்து என திரையை ரத்தக்களரி செய்துவிடுவது. மற்றொன்று ஒலி, காட்சியைப்புகள் இவற்றை வைத்தே அடிவயிற்றை கலக்கும் படங்கள். சமீபத்தில் வெளிவந்த "The Conjuring" இரண்டாவது வகை.

Conjuring Image
 டிஸ்கவரி தமிழில் இரவு 11 மணிக்கு "ஹாண்ட்டிங்" என்று ஒரு திகில் தொடரை அவ்வப்பொழுது ஒளிபரப்புவார்கள். பல தொடர்களைப் பார்த்த தைரியத்திலும், எல்லாம் ஒரே கதைதானே என்றும் தெனாவட்டாக போய் உட்கார்ந்தால், வெளியே வரும்போது பேயறந்தது போல் ஆகிவிட்டது. நன்றாக தெரிந்த கதை தான்!. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு பெரிய வீட்டை ஒரு அழகான குடும்பம் விலைக்கு வாங்குகிறது, அவர்கள் தங்களது அனைத்து சேமிப்பையும் அந்த வீட்டில் முதலீடு செய்திருப்பதால் அந்த வீட்டை விட்டு வேறு எங்கும் போக முடியாத நிலை. அந்த வீட்டில் ஒரு அமானுஷ்ய சக்தி அவர்களை அழிக்க நினைக்கிறது, அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவார்கள். இந்த கதையை பல படங்களில் - "Excorcist" வகையரக்களில் பார்த்திருந்தாலும் "The Conjuring" வித்தியாசப்படுகிறது. ஐந்து குழந்தைகளுடன் ஒரு குடும்பம் ஃப்ளொரிடாவின் ஒதுக்குபுறத்தில் குடியேறுகிறது. நூறு வருடங்களுக்கு முன் அந்த வீட்டில் வாழ்த்த ஒரு பெண்(சூனியக்காரி) தன் கைக்குழந்தையை சமையலரை கத்தியால் கொன்று விட்டு , அந்த வீட்டிற்கு யார் குடிவந்தாலும் அவர்களை கொன்றுவிடுவதாக சாபமிட்டுவிட்டு தன் நிலத்திலுள்ள மரத்தில் தீயசக்திக்காக தன்னை பலியிட தூக்கில் தொங்கிவிடுகிறள். சில நாட்களில் அந்த வீட்டில் இருக்கும் அவளின் ஆவி ஒவ்வொரு குழந்தையாக தொல்லை கொடுக்கிறது. ஒரு சிறுமியிடம் உங்கள் வீட்டிலிருக்கும் அனைவரையும் கொல்லப்போவதாக மிரட்டுகிறது. உடனே அவர்கள் தீயசக்திகளை விரட்டும் எட்வார்ட் தம்பதியின் துணையை நாடுகிறார்கள். அவர்கள் எப்படி அந்த தீயசக்தியை கண்டிபிடிக்கிறார்கள் , அந்த குடும்பத்தை காப்பாறுகிறார்கள் என்பதை (முடிந்தால்) திருட்டு விசிடி-யில் பார்க்காமல் திரையரங்கிற்கு சென்று பாருங்கள். நூற்றுக்கணக்கில் இப்படிப்பட்ட படங்கள் வந்த் போதிலும்,"Conjuring " -ல் அட்டகாசமான திரைக்கதையும் எடுக்கப்பட்ட விதமும் இது சாதாரண படங்களில் இருந்து தனித்து தெரிகிறது. உதாரணமாக எட்வார்ட் இப்படி பல வீடுகளில் ஆவிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து சாபமிடப்பட்ட பொருட்களை தன் வீட்டு தரைத்தளத்தில் சேமித்து வைத்திருப்பார். அவரிடம் ஒரு பத்திரிக்கையாளர் "இப்படி சாபமிடப்பட்ட பொருட்களை உங்கள் வீட்டிலே வைத்திருக்கிறீர்களே" என்று கேட்பதற்கு அதற்கு அவர் சொல்லும்  விளக்கம் "நான் எல்லா துப்பாக்கிகளையும் ஒன்றாக வத்திருக்க விரும்புகிறேன், தனித்தனியே இருந்து அது பல உயிர்களை எடுக்காலாமல்லவா?". ஆவிகளை படம்பிடிக்க அனைத்து  அறைகளிலும் புகைப்படக்கருவிகளைப் பொருத்துவது, ஒலிகளை பதிவு செய்வது, இவற்றை ஆவனமாக்கி பாதிரியாரிடம் நிஜமாகவே அந்த வீட்டில் ஆவி உள்ளது, எனவே பேயோட்டும் நிகழ்ச்சிக்கு அனுமதி வேண்டும் என கேட்பது ; அனுமதி கேட்கும் போது  பாதிரியார் அந்த குடும்பம் சர்ச்-ல் உறுப்பினர் இல்லையென்றும், குழந்தைகள் ஞானஸ்நானம் செய்யாததால் இதற்கு நேரிடையாக வாடிகன் தான் அனுமதி அளிக்க வேண்டும் என கூறுகிறார்,இப்படி சின்னச் சின்ன விசயங்களையும் கதையில் புகுத்தியுள்ளனர்.. ஒரு உண்மைக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் திகில் படங்களின் வரிசையில் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

No comments :

Post a Comment