Saturday, 21 December 2013

கங்கை நதி பற்றி மூக்கில்லாத சீனர்களுக்கு என்ன தெரியும்?

இந்த மாதத் தொடக்கத்தில் மதுரைத்தமிழன் தன் வலைப்பூவில் சீனர்களின் பார்வையில் கங்கையைப் பற்றி ஒரு பதிவிட்டிருந்தார்.  கங்கையைப் பற்றிய பல மோசமான படங்களும் அதில் இருந்தன, பின்னூட்டங்களும் குறைவில்லை. இதில் அவர் கருத்துக்களை அதிகம் கூறாது, மக்களின் கருத்துக்களை பின்னூட்டமிட சொல்லியிருந்தார்.
மூக்கு இல்லாத சீனர்களுக்கு என்ன மயி#க்கு இந்த வேலை.

அவர்களின் மஞ்சள் நதி வெள்ளத் துயரத்தை பார்த்து, இதுக்கு ஒரு தடுப்பனை கட்ட வக்கில்லை என இதுவரை நாம் கைகொட்டி சிரித்ததில்லை(இப்பொழுது தடுப்பனை கட்டிவிட்டார்கள்), மாறாக பலரும் வருத்தத்துடன் குறிப்பிடுவதை சிறு வயது முதலே பார்த்திருக்கிறேன். ஆனால் பல கோடி மனிதர்களுக்கும் , பிற உயிரினங்களுக்கும் உணவும் உயிரும் தரும் கங்கையைப் பற்றி ஒன்றும் தெரியாத சீனர்கள் மட்டமாக பேசுகிறார்கள்.

மதுரைத்தமிழனின் வலைப்பூவில் உள்ள பதிவைப் படிக்காதவர்கள் கீழுள்ள இணைப்பில் சென்று வாசித்து விட்டு தொடரவேண்டுகிறேன்.

மதுரைத்தமிழன் அண்ணே கங்கையைப் பற்றிய பதிவுக்கு ஏன் "filthy-india" -னு பேரு வச்சீங்க? Would you be kind to explain that please?.

சரி வாருங்கள் கங்கைக்குள் மூழ்குவோம். பயம் வேண்டாம், பல உயிரினங்கள் காசியின் கரைகளில் வாழ்கின்றன, மனிதனும் உயிர்வாழ ஏற்ற இடம் தான். முதலிலேயே கூறிவிடுகிறேன், கங்கயை அசுத்தம் செய்வதை நியாயப்படுத்துவது இந்த பதிவின் நோக்கமல்ல, மாறாக கங்கயைப் பற்றிய அறிவியல் தகவல்களைத் தான் பகிர்ந்திருக்கிறேன்.
கங்கை நதி பனி படர்ந்த இமயமலையில் உள்ள கங்கோத்ரி என்னும் மலைப்பனியாறுகளில் இருந்து பிறக்கிறது என்று கூறப்படுகிறது, ஆனால் அவற்றின் நீர் ஆதாரம் 4500 மீட்டர் உயரத்தில் கங்கோத்ரிக்கு முன்னரே தொடங்கிவிடுகிறது.கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த மலைப்பனியாறுகளும், குறைந்தபட்சம் 6000 மீட்டர் உயரம் கொண்ட இமயமலை பனிமலைகளும், துருவப்பகுதிகளுக்கு அடுத்து உலகின் மிகப்பெரிய நன்ணீர் இருப்புகளாகும். கங்கோத்ரியில் இருந்து வரும் நீர் பால் போன்ற வெண்மையுடன் இருக்கும். இந்த நீரைக் குடித்தால் 100 வயது வரை வாழலாம் என அங்கு வாழும் துறவிகள் கூறுகிறார்கள்.
கங்கோத்ரி


கங்கை ஓங்கில்(டால்பின்). இது உலகில் கங்கையில் மட்டுமே வாழும் ஓரிடவாழ்வியாகும்.அனைத்து ஓங்கில்களைப் போல இவையும் பாலூட்டிகள். அப்பகுதி மக்கள் இதை "சூசு" என்று அழைக்கிறார்கள், காரணம், இது நீருக்கு வெளியில் சுவாசிக்க வரும்போது எழுப்பும் சப்தம். நீர் மிகவும் கலங்கலாக இருப்பதினால், இயல்பாகவே இவை தன் கண்களில் உள்ள ஆடிகளை() இழந்து விட்டன. எதிரொலி இடமாக்கம்() மூலமாக பயணிக்கவும், உணவு தேடுதல்களையும் செய்கிறது.
கங்கை ஓங்கில்
கங்கை நன்ணீர் முதலை. இதுவும் கங்கையில் மட்டுமே வாழும் ஓரிடவாழ்வியாகும்.உலகின் மிகப்பெரிய முதலை இனங்களில் ஒன்றான இது நீண்ட தாடைகளை கொண்டது. மனிதர்களுக்கு இவைகளால் ஆபத்து இல்லை. இதன் தாடைகள் மீங்களையும், மற்ற நீர் விலங்குகளையும் உண்பதற்காகவே வடிவமைக்கப்பட்டது. ஆண் முதலைகளின் மூக்கில் ஒரு பெரிய குடுவை போன்ற உறுப்பு உள்ளது. இது துணையைத் தேடும் போதும், உணரிகளாகவும் பயன்படுகிறது. மீன்களே இவற்றின் முக்கிய உணவாக இருப்பதாலும், மற்றும் தொழிற்சாலை அசுத்தங்களாலும் இவை அழியும் தறுவாயில் உள்ளன.
நன்ணீர் முதலை
இவை தவிற உலகின் பெரிய நதி கழிமுகமும் கங்கை, பிரம்மபுத்ரா, மேக்னா ஆறுகள் கூடும் இடத்தில் அமைந்துள்ளது. நதி நீரும் கடல் நீரும் சேரும் இடத்தில் உள்ள சுந்தரவனக் காடுகள் ஓர் அதிசயம். 

கங்கை, பிரம்மபுத்ரா, மேக்னா

சுந்தரவனக் காடுகள்
உலகின் தனித்துவமான பகுதிகளில் ஒன்றான இவற்றில் சேற்றில் விளையாடும் குட்டி மீன்கள் பரவசமூட்டூபவை. நீரை விட சதுப்பு நிலத்தில் அதிக நேரம் இருக்கும் இவை, செதில்களில் உள்ள நீரில் சுவாசிப்பவை. இந்த இடத்திற்கே உடைய தனித்துவத்துடன் தகவமைக்கப்பட்டவை.

குட்டி மீன்கள்
 வங்காளப் புலி நாம் தொலைத்து திரும்பக்கிடைத்த நம் அடையாளங்களுள் ஒன்று. தனிக்காட்டு ராஜா என்றால் அது புலி தான். தனக்கென ஒரு எல்லையை உருவாக்குக்கொண்டு, இவை வாழ்கின்றன. கிட்டத்தட்ட 25 சதுர கிலோமீட்டர்கள் ஒரு புலி வாழ தேவைப்படும்.புலிகளின் வாழ்க்கை முறையை வைத்து ஒரு சூழலியல் பாடமே நடத்தலாம். வேறொரு பதிவில் இதைப்பார்கலாம்.
வங்காளப் புலி
இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கு புனித நதியாக விளங்கும் கங்கையை ஒரு முறையேனும் பார்க்க வேண்டும் என்பதே வாழ்நாள் ஆசையாக இருந்தது, கங்கை கரையில் இறந்தால் முக்தி கிடைக்கும் என்று கருதுகின்றனர். கங்கையில் பலரும் உடல்களை எறிப்பதும், அசுத்தப்படுத்டுவதும் இதன் கொடூரமான விளைவுகளில் ஒன்று.

கங்கை சமவெளிகள் இந்தியாவின் மற்ற எந்த பகுதியையும் விட அதிகளவு உண்வு பொருட்களை விளைவிக்கின்றன. அவை இந்தியாவின் உணவுக் கிண்ணம் எனவும் அழைக்கப்படுகின்றன. இவ்வளவு அசுத்தங்களும் கலந்து இருக்கும் கங்கையில் எப்படி உணவு உற்பத்தி செழிக்கிறது, பலதரப்பட்ட உயிர்கள் வாழ்கின்றன. கூவம் ஆற்றை எடுத்துக்கொண்டால் , இன்று எந்த உயிரினமும் வாழ தகுதியற்ற ஆறாகிவிட்டது. ஒப்பீட்டளவில், கங்கையின் நீர் ஆதாரங்களும் அதன் கொள்ளளவும் கூவத்தை விட மிக அதிகமே. ஆனால் கூவம் கிட்டத்தட்ட 60 வருடங்களுக்குள்ளாகவே தன் உயிர்சக்தியை இழந்து சாக்கடையாகிவிட்டது. ஆனால் தொடர்ந்து பல ஆயிரம் வருடங்களாக மாசுபட்டு வரும் கங்கை இன்னும் செழிப்பாகத் தான் உள்ளது. இது மட்டுமல்லாமல், கங்கை கரையினில் வாழும் மக்கள் இதுவரையில் நதியின் மாசுக்களால், காலரா, டைபாய்டு போன்ற பரவும் வியாதிகளினால் பாதிக்கப்பட்டதாக எந்த குறிப்புகளும் இல்லை. இந்த அளவு மாசுபடுத்தப்படும் ஒரு நதியால் மக்களுக்கு தண்ணீர் தொடர்பான நோய்கள் பரவியதாக செய்திகள் கிடையாது. ஏறக்குறைய 50 கோடி மக்கள் கங்கை நதியை சார்ந்து வாழ்கின்றனர், கங்கை அனைவருக்கும் வாழ்வும், வளமும் அளித்து வருகின்றது.வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்ட போது அவர்களின் கடல் பயணத்தின் போது கிட்டத்தட்ட மூன்று மாதகாலம் கங்கை தண்ணீரைத் தான் பயன்படுத்துயுள்ளனர். வேறு எந்த நதியின் தண்ணீரும் மூன்று மாதம் வரை கெடாமல் இருந்ததில்லை. கங்கை நீரை பாட்டில்களில் அடைத்து இங்கிலாந்தில் வியாபரமும் செய்திள்ளனர்.

பல ஆயிரம் ஆண்டுகளாக அசுத்தப்படுத்தினாலும் கங்கை நீர் மட்டும் எப்படி இவ்வளவு நற்குணங்களை பெற்றிருக்கிறது..? ஆண்டுக்கணக்கில் விஞ்ஞானிகள் கங்கை நீரை ஆய்வு செய்து ஆய்வறிக்கை வெளியிட்டனர். "கங்கை நீரில் வழக்கமான நதி நீரில் உள்ளதைப் போல் 25 % உயிர்வளி(ஆக்ஸிஜன்) கரைந்துள்ளது, இதுவே, இதன் அனைத்து மாசுகளையும் அழித்து நீரை தூய்மைப்படுத்துகின்றது" என தெரிவித்தனர். கிட்டத்தட்ட இந்தியாவின் வடமாநிலங்களின் அசுத்தங்கள், காசியின் அழுக்குகள், தொழிற்சாலைக் கழிவுகள் என அனைதையும் கங்கை மிக வேகமாக மறுசுழச்சி செய்கிறது. மனிதனின் எந்த தொழில்னுட்பமும் இத்தனை சக்திவாய்ந்ததில்லை.

Drinking Water
கங்கை நீரைக் குடிப்பதால் உடலும், உள்ளமும் தூய்மை பெறும், ஆன்ம பலம் பெருகும் என துறவிகள் கூறுகிறார்கள். கங்கைக்கு வரும் பல மாநிலத்தவரும் நீரை பாட்டில்களில் பிடித்து கொண்டு செல்வதைப்பார்க்கலாம். பலர் இந்த நீரை தீர்த்தம் என பருகுவார்கள். இதையும் ஆராய்ந்த விஞ்ஞானிகள், "கங்கை நீரில் பற்றீரியாதின்னிகள் (bacteriophage) பாக்டீரிய உடைய எந்த ஒரு பொருள் இருந்தாலும், அதனை சுற்றி பல்கிப்பெருகி அத்தனை பாக்டீரியாக்களையும் அழித்து விடுகின்றன" என்று கூறியுள்ளனர். எவ்வளவு அதிக பாக்டீரிய உள்ளதோ, அவ்வளவு அதிக உணவு கிடைக்கிறது இந்த பற்றீரியாதின்னிகளுக்கு. 

பற்றீரியாதின்னிகள்
ஒரு மனிதன் கங்கை நீரில் இறங்கினால் ,இந்த பற்றீரியாதின்னிகள் சூழ்ந்து உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை உண்ணத்தொடங்கிவிடுகின்றன.இவை தான் கங்கை நீரில் உள்ள நோய் பரப்பும் உயிரிகளை அழித்து கெடு நோய்கள் பரவாமல் காக்கின்றது.இப்படி கரிம கழிவுகள் பலவும் மறுசுழர்ச்சி செய்யப்பட்டு இங்கு வாழும் மீன்கள் மற்றும் பிற உயிரினங்களுக்கு உணவாக பயன்படுகின்றது.

எனவே தான் கங்கையில் ஒருமுறையேனும் நீராட வேண்டும் என முன்னோர்கள் சொல்லிவந்தனர்.
இந்த விடயங்களை எல்லாம் அறியாமல்  இந்தியர்களும் வெளி நாட்டவரும் கங்கையைப் பற்றி  குறை கூற தேவையில்லை. இப்பொழுதுள்ள தலைமுறையில் விழிப்புனர்வுடன் செயல்படும் பலர் தன்னார்வ குழுக்களோடு கங்கையை சுத்தப்படுத்தத் தொடங்கியுள்ளனர். கண்டிப்பாக சீனர்கள் ஒரு நாள் "இல்லாத மூக்கின் மேல்" விரல் வைப்பர்கள் கங்கை நதியைப் பார்த்து.!


13 comments :

 1. a bundle of very good jokes ........

  //கங்கயைப் பற்றிய அறிவியல் தகவல்களைத் தான் பகிர்ந்திருக்கிறேன்.//

  !!!!!!!!!!!!!!

  //கங்கை நீரைக் குடிப்பதால் உடலும், உள்ளமும் தூய்மை பெறும், //

  உள்ளத்தை விடுங்க; உங்க உடல் நலமுறை நிறைய கங்கை நீரைக் குடியுங்கள்.... “ரொம்ப நல்லது”!

  பல ஆண்டுகளுக்கு முன் கங்கை நீரைக் காக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பேச்ப்பட்ட போது, உங்களைப் போன்ற ஒரு எம்.பி. ”கங்கை புனிதமானது; அது மாசு படிந்தது என்று சொல்வதோ, அதை சுத்திகரிக்க எண்ணுவதோ கங்கைத் தாய்க்குச் செய்யும் அவமரியாதை” என்று பேசினார்; தினசரியில் அந்தக் காலத்தில் வந்த செய்தி இது. என் வகுப்பில் இதைப் போன்ற முட்டாள் தனத்தை எதிர்த்து நானும், மாணவர்களும் பேசியது இன்னும் நினைவில் உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...

   //கங்கயை அசுத்தம் செய்வதை நியாயப்படுத்துவது இந்த பதிவின் நோக்கமல்ல// இதை முதலிலேயே கூறியுள்ளேனே ஐயா...

   புனிதம், சுத்தம் செய்யக்கூடாது என்பது என் நோக்கமல்ல. //கங்கையை சுத்தப்படுத்தத் தொடங்கியுள்ளனர். // என்பதையும் சேர்த்து தான் பதிவிட்டுள்ளேன்.

   ஒரு விடயத்தை முழுதாக தெரிந்து கொள்ளாமல் கருத்து கூறும் வேற்று நாட்டவர்களை தான் பிடிப்பதில்லை..

   மேலதிக விபரங்களுக்கு http://www.youtube.com/watch?v=bCui1D1Xwww

   தினமும் கங்கை நீரை குடியுங்கள் என்று பதிவில் எங்கும் வலியிருத்தவில்லை..

   அசுத்தம் செய்கிறார்கள். ஆனால் //கங்கையை சுத்தப்படுத்தத் தொடங்கியுள்ளனர். // என்பதையும் சேர்த்து தான் பதிவிட்டுள்ளேன்.

   Delete
 2. மதுரைத் தமிழனின் பதிவில் உள்ள படங்களைக் காண மூக்கு எப்ப்டியிருந்தால என்ன ... கண்களும்,அறிவும் திறந்திருக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...

   //கங்கயை அசுத்தம் செய்வதை நியாயப்படுத்துவது இந்த பதிவின் நோக்கமல்ல// இதை முதலிலேயே கூறியுள்ளேனே ஐயா...

   தினமும் கங்கை நீரை குடியுங்கள் என்று பதிவில் எங்கும் வலியிருத்தவில்லை..

   அசுத்தம் செய்கிறார்கள். ஆனால் //கங்கையை சுத்தப்படுத்தத் தொடங்கியுள்ளனர். // என்பதையும் சேர்த்து தான் பதிவிட்டுள்ளேன்.

   Delete
 3. தருமிய்யா,

  இங்க கூட வந்து பஞ்சாயத்தா அவ்வ்!

  கங்கை மாசுப்படுவது எந்த அளவு உண்மையோ அதே அளவு தானே சுத்தமாகிடுது என்பதும் உண்மை, ஆனால் அது புரணாக்காரணமெல்லாம் இல்லை ,இயற்கை அப்படி , கங்கையில் எல்லா வருடமும் வெள்ளம் வரும் , எனவே அசுத்தம் எல்லாம் அடிச்சுட்டு போயிடும்.

  யமுனைக்கும் அதே கதை தான் , டெல்லி நகர எல்லைக்குள் யமுனைய பார்த்தால் சாக்கடை போலவே இருக்கும்,ஆனால் ஒரு மழை வந்தா போதும் எல்லாம் கிளீன் ஆகிடும்.

  யமுனை ஒரு டிரிபூட்டரி ரிவர் எனவே கங்கையில் தோன்றி மீண்டும் கங்கையில் தான் கலக்குது, யமுனையின் அசுத்தமும் கங்கையே சுத்தம் செய்யுது.

  //உள்ளத்தை விடுங்க; உங்க உடல் நலமுறை நிறைய கங்கை நீரைக் குடியுங்கள்.... “ரொம்ப நல்லது”!//

  டெல்லி மக்கள் கூட இதான் சொல்லுறாங்க, மினரல் வாட்டர் எல்லாம் தேவையில்லை , கங்கா வாட்டர் நல்லா இருக்கும் குடிக்கலாம்னு ஏன்னா,

  அந்த பக்கமெல்லாம் கங்கை தான் பல மாநிலங்களுக்கும் குடி நீர் ஆதாரமும் கூட, டெல்லியில எல்லாம் தினமும் கங்கை தண்ணி தான் குடிக்கிறாங்க, இமாச்சல் அருகே "கங்கா குடிநீர் திட்டம்" என அணை, பைப் லைன் எல்லாம் போட்டு டெல்லிக்கு கங்கா வாட்டெர் குழாய்ல வருது , டெல்லியில குழாய தொறந்தா "கங்கை கொட்டும்" ;-))

  ReplyDelete
  Replies
  1. வாங்க வவ்வால்.
   தகவல்களுக்கு நன்றி..
   காசியில் ஓடுவது மட்டும் தான் கங்கை என்ற நினைப்பு இருக்கும் வரை இப்படிப்பட்ட கருத்துக்கள் இருக்கவே செய்யும் என நினைக்கிறேன்.

   எந்த அசுத்தமான நீரிலும் உயிர்கள் வசிக்கது, ஆனால், காசி கரையினில் கூட பல உயிர்கள் வாழ்கின்றன.

   //இங்க கூட வந்து பஞ்சாயத்தா அவ்வ்!//

   என்னங்க இப்பிடி சொல்லிடிங்க! இப்படிப்பட்ட பஞ்சாயத்தில் தான் பல நல்ல தகவல்கள் வெளிவருகின்றன... நன்றிகள்!!!

   Delete
 4. அன்புடன்!
  இயற்கை அவர்களுக்கு கொடுத்த மூக்கு , மாற்ற வேண்டுமென்றாலும் மாற்ற முடியாதததைப் பற்றி கேலி செய்து நாம் - கவுண்டர் செந்தில் காமெடி அளவுக்கு நம்மைத் தாழ்த்துவது அழகல்ல!
  நம் அஸ்சாம் மாநிலச் சகோதரர்களுக்கும் மூக்கில்லை. ஏன்? எனக்குக் கூட சப்பை மூக்குதான்.
  நிற்க....
  தங்கள் கங்கை பற்றிய கண்ணோட்டம், புனிதம், புராதனம் எனும் எல்லைக்குள் நிற்கிறது.
  கங்கை என்றல்ல எந்த புராதன நதிகளுமே உயரமான மலைகளினூடு,தான் வரும் வழியில் உள்ள
  கனிமங்கள் எல்லாம் சேர்த்தே கொண்டுவந்து, பாயும் இடமெங்கும் செழிக்கச் செய்யும்.
  இது நதிகளின் பொது இயல்பு. இது ஏதோ கங்கைக்குத் தான் என்பது போல் ஒரு தெய்வீக மாயையை ஊட்டி பெருதுபடுத்துவது நம் வியாதி.
  கங்கையில் உள்ள உயிரினங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். பாலைவனத்தில் தான் ஒட்டகம் இருக்கும். கங்காரு அவுஸ்ரேலியாவில் தான் உண்டு.
  இப்படிச் சொல்லிக் கொண்டு போகலாம்.
  நீங்கள் சொன்ன சதுப்பு நிலக் குட்டி மீன் உலகெங்கும் உள்ள ஆறு, கடல் சார்ந்த சதுப்பு நிலங்களில் கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கிறது.
  பிறேசில் அமேசன் சதுப்பு நிலக்காட்டைவிட பெரிய காடா? கங்கையோரத்தில்.
  வங்காளப்புலி ...அதின் அண்னன் அல்லது தம்பி சைப்பீரியப் புலி , பனியில் மறைந்து வாழ வெண்மை நிற உரோமம் ஒன்றே வேறுபாடு.
  ஆகவே நான் கங்கையை கொஞ்சம் அதீதமாக புகழ்கிறோம் என்பதை உணர்வோம்.

  கங்கையில் புனிதம் பற்றிச் சொன்னதெல்லாம் பல் ஆயிரம் வருடங்களுக்கு முன் சொல்லப்பட்டவை.
  அப்போது மக்கள் தொகை என்ன? தொழிற்சாலைகள் இருந்தனவா? இன்றுள்ள பிரயாண வசதிகள் எதுவுமற்ற காலம் , யாத்திரை செய்வோர் மிகக் குறைவு. ஆனால் மாதம் 3 மாரி பொழிந்த காலம்.
  ஆனால் இன்று எல்லாம் தலைகீழாகி விட்டது.
  அதனால் பாடசாலைகள் தோறும் குழந்தைகளுக்கு கங்கை மாசாவது பற்றி போதித்து, கங்கையுள் பிணத்தை
  இடுவதால் புண்ணியம் நமக்குக் கிடைக்குதோ இல்லையோ, கங்கைக்கும் எதிர்காலச் சந்ததிக்கும் நன்மையில்லை என்பதனை இளமையிலேயே சொல்லிப் புரியவைத்தால் இவர்கள் தம் பிணத்தைக்
  கங்கையில் இடும் எண்ணத்தைக் கைவிடுவார்கள்.

  சமீபத்தில் பி பி சி யின் ஒரு விபரணச் சித்திரத்தில் கங்கையின் இன்றைய நிலைபற்றி நீர் நிலைகளின் கட்டமைப்புப் பொறியியளாளர், ஓய்வு பெற்றவர், கங்கைக் கரையோரம் சந்ததியாக வாழ்பவர் சுமார்75 வயது மதிக்கத் தக்கவர். இந்திய பிராமணர் (வீட்டில் இருந்து பேட்டி கொடுக்கும் போது சால்வையால் மேலுடைம்பை மூடி இருந்த போது பூனூல் தெரிந்தது), கங்கை தானே தன்னைச் சுத்தம் செய்யும் இயற்கை வலுவான கங்கையுள் வாழும் உயிரினங்கள் , தாவரங்கள் தொழிற்சாலை இரசாயனக் கழிவுகளாலும், நவீன அழிவுறாத குப்பைகளாலும் அழிந்து குறைந்து விட்டது.

  இதனால் கங்கையின் புனிதத் தன்மை கேள்விக்குரியதாகிவிட்டது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  அது நடக்கும் போல் இல்லை. என் காலத்தின் , நான் இளமையில் பார்த்த கங்கையை பார்ப்பேன் எனும் நம்பிக்கை எனக்கில்லை எனக் கூறி.

  அவர் வீட்டில் கங்கைக் கரையை பார்க்கும் பக்கத்திலிருந்து கங்காதேவிக்கு நடந்த தீபாராதனையைக் கண்ணில் ஒற்றினார்.
  இந்தவளவு கங்கையைக் கடவுளாகப் போற்றும் இந்த பொறியியலாளர், பொய் சொல்லார் என நம்புகிறேன்.

  "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
  பெய்ப்பொறருள் காண்பதறிவு.
  அவர்களுக்கு மூக்கில்லாமல் இருந்தாலும்.


  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

   //தங்கள் கங்கை பற்றிய கண்ணோட்டம், புனிதம், புராதனம் எனும் எல்லைக்குள் நிற்கிறது.//
   இதில் கங்கையின் புனிதம், புராதனம் பற்றி மேலோட்டமாக கூட கூறவில்லை.
   பற்றீரியாதின்னிகள்,கரைந்துள்ள உயிர்வளி(ஆக்ஸிஜன்) , என இவை புராதான, புனிதங்களை விட இயற்கையாய் கங்கை நதிக்கு இருக்கும் சாதகமான விடயங்களை அறிவியல் பூர்வமக விளக்குவதற்கு மட்டுமே, இதில் தெய்வீக மணம் எங்கிருந்து வந்தது?

   இந்த வலைப்பூவின் முதல் பதிவை படித்து பார்க்குமாறு கனிவுடன் வேண்டுகிறேன், ஒருவேளை உங்கள் எண்ணம் மாறலாம்.

   //இயற்கை அவர்களுக்கு கொடுத்த மூக்கு , மாற்ற வேண்டுமென்றாலும் மாற்ற முடியாதததைப் பற்றி கேலி செய்து நாம் - கவுண்டர் செந்தில் காமெடி அளவுக்கு நம்மைத் தாழ்த்துவது அழகல்ல!//

   இது உங்களை பாதித்திருப்பின் வருந்துகிறேன்.

   இந்திய நாட்டைப் பற்றி சில புகைப்படங்களை வைத்து மட்டுமே கேவலமாக சித்தரித்த சீனர்களின் மூக்கை மட்டும் தான் பகடி செய்துள்ளேன்.

   சீனர்கள் இந்த பதிவை பல வருடங்களுக்கு முன்னரே பதிவிட்டுள்ளனர். அதில் அவர்கள் உபயோகித்த சொற்பிரயோகங்கள் மிகவும் கீழ்த்தரமானவை.

   Delete
 5. தங்கள் முதல் பதிவு "கடவுள் இருக்கிறாரா" படித்தேன். நல்ல தெளிவு . இப்படியான புத்தகங்களை நான் படித்தலில்லை. ஆனால் இத் தெளிவு எனக்கும் உண்டு. எனினும் கோவில்கள் செல்வேன். கடவுளைக் காண அல்ல. கலைகளைக் காண !
  நான் இன்றைய நவீன ஆய்வாளர்களும், இயற்கை ஆர்வலர்களும், இந்தியாவில் ஆர்வமுள்ளவர்களும்
  கங்கையின் தொன்மையையும், தேவையையும் உணர்ந்தவர்களும் கூறுபவற்றை நம்புகிறேன்.
  அவர்கள் இந்தியர்கள் அல்ல ஆனால் இந்தியாவில் எதிரிகள் அல்ல.
  அதனால் அவர்கள் கங்கை அன்று தன்னைக் காக்க பூண்டிருந்த கவசத்தை சுயநலமிக்க இன்றைய பேராசை பிடித்த மனிதன் சிறுகச் சிறுக அழிக்கிறான்,அன்றிருந்த கங்கையல்ல இன்றைய கங்கை. அது தன் தூய்மையைச் சிறுகச் சிறுகத் தொலைத்து விட்டது. கங்கையன்றல்ல உலகின் பல நதிகள் அவற்றின் இயல்பை இழந்து விட்டன..
  இங்கே பாரிசில் என் வீட்டிலிருந்து 25 மீட்டர் தூரத்தில் "சென்" -(la seine) நதியில் கால் நனைக்கலாம்.ஆனால் அரசு அதை விரும்பவில்லை. சில வேளை தோல் வியாதி வரலாம் என அஞ்சுகிறது. ஆனால் தினமும் நீரின்
  தரத்தைக் கணிக்கிறது. அவ்வளவு தூரம் தூய்மையாக வைத்திருக்க ஆவன செய்தும் ,இன்றைய கழிவுகள்
  பற்றிய அச்சம் இவர்களால் தவிர்க்க முடியவில்லை. இந்த சென்னும் பனி படர்ந்த அல்ப்ஸ் மலைச் சிகரத்தில் தான் உருவாகிறாள். இங்கும் இவள் பெண்தான் ,தாய் தான்.
  லண்டன் தேம்சுக்கும் கதி அதே!
  அமேசன் , நைல் அதே கதிதான் ஆனால் அவற்றை நேரடியாக பாவிக்கும் மக்கள் பற்றிய கவலை அரசுக்கில்லை. ஆனால் தெரியாது, வழியற்ற மக்கள் அவற்றை அன்றாடம் பாவித்து பல நோய்களினால் அல்லாடுகிறார்கள். கங்கை சார்ந்தோருக்கும் இருக்கும் ஆனால் இந்த மக்கள்
  பற்றி என்று அரசு கவலை கொண்டுள்ளது.
  "இது உங்களை பாதித்திருப்பின் வருந்துகிறேன்."- நீங்கள் வருந்தினாலும் என் வருத்தம் , வருத்தமே!
  என்று சொல்லுவேன் என நினைக்கிறீர்களா? என் மூக்கையிட்டு எனக்குப் பெருமை!
  நான் சிங்கை சென்ற போது பல சீனர்கள் என்னுடன் சீன மொழியில் பேசினார்கள்.இது பெருமையில்லையா? நான் இந்தியா வந்த போது என் தமிழைப் கேட்டு பலர் "என்னோடு மலயாளம் சம்சாரிச்சாங்கோ"

  "இந்திய நாட்டைப் பற்றி சில புகைப்படங்களை வைத்து மட்டுமே கேவலமாக சித்தரித்த சீனர்களின் மூக்கை மட்டும் தான் பகடி செய்துள்ளேன்."
  அப்படியே ஆனாலும் அவர்கள் மூக்கை கேவலமாகச் சித்தரிப்பதில் நாயமில்லை. இந்தியாவில் என்ன குத்திக்கரணம் அடித்தாலும் எப்படிச் சாதி மாற முடியாதோ அப்படியே என் , சீனர்கள் மூக்கும்.

  //சீனர்கள் இந்த பதிவை பல வருடங்களுக்கு முன்னரே பதிவிட்டுள்ளனர். அதில் அவர்கள் உபயோகித்த சொற்பிரயோகங்கள் மிகவும் கீழ்த்தரமானவை.//
  நாய் கடித்தால் ஒரு நாளும் நாம் திரும்பிக் கடிக்கக் கூடாது.
  இந்தியாவைத் தலையில் வைத்துக் கொண்டாடும் பல சீனர்கள் உள்ளனர். புத்தரைத் தந்த புண்னிய பூமி எனப் போற்றுவோர் அவர்கள், என்ன செய்வது அவர்களுக்கும் மூக்கில்லை.
  வேடிக்கை அவர்கள் நாம் கொடுத்த புத்தருக்கும் மூக்கை எடுத்துவிட்டே கொண்டாடுகிறார்கள்.
  மகிழ்ச்சி ! தொடர்ந்து எழுதுங்கள். நாட்டுப் பற்றுடன் பொங்கி எழ வேண்டாம்.
  ஒருவன் முட்டாள் தனமான வேலையைச் செய்தால் "என்ன? முட்டாள் வேலை செய்து விட்டாய் எனச் சொல்லாதீர்கள்" - அதையே இது "புத்திசாலி செய்யும் வேலையா? எனச் சொல்லிப் பாருங்கள்.

  அத்துடன் உலகுடன் ஒப்பிடும் போது "தூய்மை, சுகாதாரம்" பற்றிய விழிப்பு நமக்கு போதாது.
  அதை மாற்றி நலம் மிக்க ஒரு இனமாக நாம் மாறவேண்டும் . என்ற ஆதங்கத்தாலே இவ்வளவும் எழுதுகிறேன்.
  ReplyDelete
  Replies
  1. பதிவைப் படித்ததற்கு நன்றி..
   //உலகின் பல நதிகள் அவற்றின் இயல்பை இழந்து விட்டன..//
   நீங்கள் கூறுவது உண்மை தான். உலகில் உள்ள நதிகள் பலவற்றுக்கும் இப்போது இந்த நிலை தான்.

   //மகிழ்ச்சி ! தொடர்ந்து எழுதுங்கள். நாட்டுப் பற்றுடன் பொங்கி எழ வேண்டாம்.//

   உங்க்ள் ஆதரவுக்கு நன்றி.. நான் இந்தியன் என்பதை விட தமிழன் என்பதில் தான் பெருமை.

   ஆனால், சீனர்கள் அடிக்க அடிக்க நாம் குனிந்து கொண்டே செல்வதா, என்ற சிறு ஆதங்கம் தான்.
   இனி மூக்கை பற்றி பேசுவதில்லை. :) :).

   Delete
 6. http://thillaiakathuchronicles.blogspot.com/2013/12/sabarimala-devotees-throwingclothes-pambariver-polution.html
  இதையும் படிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. படித்தேன்...

   இப்படியே நாட்டில் இருக்கும் அனைத்து நதிகளையும் ஏலத்தில் விட்டுவிடுவார்கள் போலிருக்கிறது... :-(

   Delete
 7. படித்தேன்...

  இப்படியே நாட்டில் இருக்கும் அனைத்து நதிகளையும் ஏலத்தில் விட்டுவிடுவார்கள் போலிருக்கிறது... :-(

  ReplyDelete