Monday 3 February 2014

சூப்பர் சிங்கர் 4- திவாகர் எப்படி பட்டத்தை கைப்பற்றினார்?

பல பேர் பல பதிவுகளை எழுது தள்ளிவிட்டனர் இதைப் பற்றி.. நான் கொஞ்சம் தாமதம். இருந்தாலும் எதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

முதலில் சூப்பர் சிங்கரில் இந்த ஓட்டு மூலம் ஒரு நல்லது நடந்தது போல் இருக்கிறது. என்ன என்கிறீர்களா? திறமைக்கு மதிப்பு கிடைத்துள்ளது. பதிவான ஓட்டுகளில் எப்படி கிட்டத்தட்ட 80 சதவீதம் திவாகருக்கு போனது?




எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டு பிள்ளை என பெயர் வைத்து நடித்தபோதே நாம் நம் வீட்டு பிள்ளையாக நினைத்தவர்கள். இப்போதும் அது தான் நடந்துள்ளது. 
நம் அனைவருக்கும் பாட வேண்டும் என்ற ஆசை இருக்கும். குளியலறையின் சுவர்களில் எதிரொலித்து நம் காதில் சன்னமாக விழும் நம் பாடல் (பல) சமயங்களில் அற்புதமாக கேட்கும். ஆனால் நம்மில் பலர் சங்கீதம் கற்றவர்களில்லை, ஆனால் பாட வாய்ப்பு கிடைக்கும் போது பலர் நன்றாகவே பாடுவார்கள்; இந்த ஸ்ருதி, தாளம் இதெல்லாம் தெரியாவிட்டாலும் காதில் விழுந்ததை கிரகித்துக் கொண்டு அச்சரம் பிசகாமல் பாடும் திறமை பலருக்கு உண்டு. இவர்களின் அபிமான "எங்கள் வீட்டு பிள்ளை" யாக திவாகரை ஏற்றுக்கொண்டுள்ளனர். சங்கீதம் முறைப்படி கற்காமலும் திறமை இருந்தால் சாதிக்கலாம் என்பதை திவாகர் நிறுபித்துள்ளார். அப்படி பார்த்தால் "அல்கேட்ஸ்" மற்றும் "சையத்" இவர்களும் சங்கீதம் கற்காதவர்கள் தான். ஆனால் இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பகத்தான் திவாகரை நம் இளைய தலைமுறை பார்த்துள்ளது. ஏனெனில் அவர் தேர்ந்தெடுத்த பாடல்களும், பாடிய விதமும். 

சோனியாவும், பார்வதியும் திவாகரை விட திறமை மிக்கவர்கள் தான், ஆனால் இவர்கள் கற்ற அளவிற்கு திவாகர் சங்கீதம் கற்றுக் கொண்டால் கட்டயாம் அவர்களை எல்லம் தூக்கி சாப்பிட்டுவிடுவார். இதில் இன்னொரு வேடிக்கை, பல தளங்களில் "தமிழ் வென்றுவிட்டது" , "சையத் ஒரு இஸ்லாமியர்" என்ற பரப்புரைகளையும் காண முடிகிறது. இதை இசை என்ற வட்டத்தில் இருந்து மட்டும் பாருங்கள். அடுத்து வரும் வாரங்களில் நடுவர்கள் "We are after all musicians" என்று திவாகரை வசை பாடினாலும் அவர் தான் சுப்பர் சிங்கர். 



8 comments :

  1. வணக்கம்
    ஆயிரம் பேர் ஆயிரம் கதைத்தாலும் திவாகர்தான் சூப்பர் சிங்கர்.... தன்னம்பிகையும் திறமைக்கு உள்ளதாள்முதலிடம்....
    சிறப்பாக சொல்லியுள்ளிர்கள்..வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வாங்க ரூபன்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  3. இசையிலும் பரப்புரைகளை ஆரம்பித்து விட்டார்களா...?

    Super Singer திவாகரின் திறமை மேலும் மேலும் உயர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    எனக்கு பிடித்த பாடல்களில்... அடிக்கடி கேட்கும் பாடல்களில்... இந்தப் பாடலை பார்க்கும் போதும், கேட்கும் போதும் மனதில் தோன்றுவதை சொல்ல வார்த்தைகள் இல்லை... அட...! அது மட்டுமா...? நால்வரின் நடிப்பும் - எத்தனை உணர்ச்சிகள்.... நவரசங்களையும் காணலாம்...

    இப்போது பாடல் இல்லாமல் பதிவை என்னால் எழுத முடியுமா என்று தெரியவில்லை... ஆனால், இந்தப் பாடலை வைத்து, "ஏதேனும் ஒரு நல்லதொரு கட்டுரை எழுத முடியுமா...?" என்று நினைத்ததுண்டு... பல நாட்கள் கழித்து முடிந்தது...

    நேரம் கிடைப்பின் :

    இதோ காணொளியுடன் அந்த அற்புதமான பாடல் :

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Success-is-our-choice.html

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி....

      பதிவை பார்த்து பின்னூட்டம் இடுகிறேன்
      நன்றி

      Delete
  4. முதலில் உள்ள செயல்படாத தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்கி விடலாமே... நன்றி...

    ReplyDelete
  5. இணையம் வேகம் காரணமாக நீக்க முடியவில்லை ...
    சரியானதும் நீக்கி விடுகிறேன்

    ReplyDelete
  6. பல தளங்களில் "தமிழ் வென்றுவிட்டது" , "சையத் ஒரு இஸ்லாமியர்" என்ற பரப்புரைகளையும் காண முடிகிறது. \\ Last Junior Title was won by a Muslim boy............!!

    ReplyDelete
  7. Ofcourse...
    But hindu or muslim , music has to win not the caste/ religion.

    Thanks for reading and comments

    ReplyDelete