Monday, 9 June 2014

அமெரிக்கர்களுக்கு இதுவரை கிடைக்காத உரிமைகள் !!!


வணக்கம்... !

இரண்டாம் உலகப் போர் முடிவுறும் நேரம். அமெரிக்க அதிபர்கள்  நாட்டு மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வருங்காலத்தில் செய்ய,திட்டமிட வேண்டியவற்றை பற்றி அறிவிப்பது வழக்கம். இதை "State of Union Address"  என்பார்கள். 1944-ம் ஆண்டு ,  அப்போதைய அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் போர் முடிந்த பின் நாட்டு மக்கள் எதை நோக்கி செல்ல வேண்டும் என்பதனை நாட்டு மக்கள் அனைவருக்கும் வானொலியில்  அறிவித்தார். உடல்நலம் குன்றியிருந்ததால் நேரிடையாக வர இயலாமல் வானொலியில் வந்தார். ஆனால் அவரின் உரையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் நாட்டு மக்கள் அனைவரும் பார்க்கும்படி தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார். அது அமெரிக்கர்களுக்கான "இரண்டாம் உரிமைச் சட்டம்".

ரூஸ்வெல்ட் கீழ்கண்டவாறு இரண்டாம் உரிமை சட்டத்தினை வடிவமைத்திருந்தார். ஆங்கிலத்தில் உள்ள அவரின் உரையை கீழே அளித்துள்ளேன்.

We have come to a clear realization of the fact that true individual freedom cannot exist without economic security and independence. “Necessitous men are not free men.” People who are hungry and out of a job are the stuff of which dictatorships are made.

In our day these economic truths have become accepted as self-evident. We have accepted, so to speak, a second Bill of Rights under which a new basis of security and prosperity can be established for all regardless of station, race, or creed.

Among these are:

    The right to a useful and remunerative job in the industries or shops or farms or mines of the Nation;
    The right to earn enough to provide adequate food and clothing and recreation;
    The right of every farmer to raise and sell his products at a return which will give him and his family a decent living;
   The right of every businessman, large and small, to trade in an atmosphere of freedom from unfair competition and domination by monopolies at home or abroad;
    The right of every family to a decent home;
    The right to adequate medical care and the opportunity to achieve and enjoy good health;
    The right to adequate protection from the economic fears of old age, sickness, accident, and unemployment;
    The right to a good education.

All of these rights spell security. And after this war is won we must be prepared to move forward, in the implementation of these rights, to new goals of human happiness and well-being. 

இந்த உரிமைகள் எல்லாம் கடைகோடி அமெரிக்கனுக்கும் கிடைக்க வேண்டும் என்று ரூஸ்வெல்ட் விரும்பினார். ஆனால் அவர் மறைவுக்கு பிறகு இவை யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை. இந்த சட்ட வரைவு ஏன் அமல்படுத்தப்படவில்லை, அதன் தற்போதைய இருப்பியல் சிக்கல்கள் என்ன? தொடர்ந்து பார்கலாம்.

இப்பொழுது தமிழில்.. (மொழிபெயர்ப்பில் பிழை இருந்தால் மன்னிக்கவும்).

------------------------------------------------------------------------------------------------------------
அமெரிக்காவின்  சாதகமான, நல்ல விடயங்களை பல பதிவர்கள் வெளியிட்டுள்ளனர். ஆனால், இதில் அப்படிப்பட்ட விடயங்கள் இருக்க வாய்ப்பில்லை. நீங்கள் தீவிர அமெரிக்க ஆதரவாளராகவோ, அமெரிக்கராகவோ இருந்தால் இந்த இடுகை உங்களுக்கு பிடிக்காமல் போகலாம்.------------------------------------------------------------------------------------------------------------
நாட்டு மக்கள் அனைவருக்கும் அவர்களின் இனம், மொழி, இருப்பியல் ஆகிய வேறுபாடுகளை கடந்து அனைவரும் வாழ்வில் வளம் பெறவும், பாதுகாக்கப்படவும்  இரண்டாம் உரிமை சட்டம் ஒன்றை நாம் ஒன்று கூடி உருவாக்கலாம்.

இவற்றில்,

**நாட்டில் உள்ள தொழிற்சாலைகள், சுரங்கங்கள்,சிறிய/பெரிய கடைகள் அனைத்திலும் பயன் தரத்தக்க, தொடர்ந்து ஊதியமளிக்கக்கூடிய வேலை பெரும் உரிமை.**

தொழிற்சாலைகளும், சுரங்கங்களும் பாகாசுர நிறுவனங்களின் கைகளுக்கு போய்விட்டன. தொடர்ந்து ஊதியமளிக்க இப்பொழுது எந்த நிறுவனமும் முன்வருவதில்லை. இங்கு தொடர் ஊதியம் என்பது தொழிலாளியின் வருடாந்திர அனுபவம் மற்றும் அவரின் அடிப்படை மற்றும் சமூக தேவைகளை நிறைவேற்றும் வண்ணம் இருக்க வேண்டும். ஆனால், வால்மார்ட் போன்ற நிறுவனங்கள், அலுவலகத்தில் வாழும் ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சிக் கொண்டு முடிந்தவரை ஊதியத்தை குறைக்கின்றன. அங்கு பணிபுரியும் ஊழியருக்கு அந்த வேலை பயன்தரக் கூடியதும் இல்லை. வால்மார்டில் விற்பனை பெண்ணாக இருக்கும் ஒருவர் வேறு எந்த வேலைக்கு போக முடியும்.

*தேவையான அளவு உணவு, உடுத்த உடை மற்றும் பொழுதுபோக்கு இவற்றை பெறும் வண்ணம் முறையான வருமானத்தை பெறும் உரிமை*

ஊதியம் அதிகமாக கொடுக்க வேண்டும் என்பதற்காக, அமெரிக்கர்களின் வேலையை பிடுங்கி மூன்றாம் தர நாடுக்களுக்கு கொடுப்பதும், முடிந்த அளவு ஊதியத்தை குறைக்கவும் தயாரக இருக்கும் தரகு முதலாளிகளிடம் இருந்து இந்த உரிமை கிடைப்பது அரிதிலும் அரிது. ஆனால் இவற்றை கடன் அட்டைகள் மூலம் நிறைவேற்றிக் கொள்ளும் நுகர்வு கலாச்சாரத்தை தந்திரமாக பரப்பி விட்டுள்ளனர். எப்படியிருந்தாலும் நிறுவனங்கள் தொடர்ந்து கொழுத்துக் கொண்டிருக்கும், கடன் சுமை அதிகமானால் அரசாங்கம் மக்களின் வரிப் பணத்தில் இருந்து கைத்தூக்கிவிடும் என்ற நம்பிக்கை.

*ஒவ்வொரு விவசாயியும் தனது குடும்பத்திற்கு பாங்குடைய வாழ்வாதரத்தை தனது விளை பொருட்களை வளர்பதன் மூலமும் விற்பனை செய்வதன் மூலமும் பெறும் உரிமை*

மான்சாண்டோ நிறுவனம், விவசாயிகள் விதை நெல்லை சேமிப்பது குற்றம் எனக் கூறி வழக்கு தொடர்கிறது.விதை நெல் என்பது ஒரு உழவனின் சொத்து, தன் நிலத்தில் கடின உழைப்பின் விளைவாக விளைந்ததை எடுக்காதே என கூறுகிறது மான்சாண்டோ.  கோழி இறைச்சி வியாபாரம் செய்யும் "டைசன்" நிறுவனம் முதலில் தனது கிளைகளை திறக்க விரும்பும் தொழில் முனைவோருக்கு நைச்சியமாக பேசி பின்னர் அவர்களை ஒரு அடிமை போல் நடத்துகிறது. இவர்களின் கிளையை நாம் ஆரம்பிக்க கட்டும் முன் பணம், கோழிகள் பரமரிப்பு என கடன் சேர்வது தான் மிச்சம். ஆனால் இறைச்சி கோழியை மட்டும் தவறாமல் அள்ளிச் சென்றுவிடுவார்கள். சீக்கு வந்த கோழிகளை அப்புறப்படுத்த கூட முறையான வசதிகள் செய்து தரவில்லை. இதில் எங்கிருந்து ஒரு விவசாயி இந்த உரிமையை பெருவது.

*ஒவ்வொரு தொழில் முனைவோரும்,  முறையற்ற போட்டியின்றி  உளநாட்டிலும் வெளிநாட்டிலும் , முறையான வழியில் ஏகாதிபத்தியம் இல்லாமல்  தனது வியாபாரத்தில் தொடர்ந்து ஈடுபடும் உரிமை*

அமெரிக்க நிறுவனங்களின் ஏகாதிபத்தியம் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பல நடுத்தர சில்லரை வணிக கடைகள் வால்மார்ட் வந்த பிறகு காணாமல் போயின. உள்நாட்டில் ம்ட்டும் என்றில்லமல் இந்த ஒண்ட வந்த பிடாரிகள் போகும் இடமெல்லாம் இருக்கும் அந்நாட்டு வியாபரிகளையும் துரத்தியடிக்கின்றன. ரூஸ்வெல்ட் ஒரு தீர்க்கதரிசி, அப்பொழுதே "unfair competition" என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். ஒருவேளை, 1943-ம் ஆண்டு ஃபோர்டு நிறுவனம் ஊழியர்களை துரத்தியடித்த நிகழ்வின் பாதிப்பாக கூட இது இருக்கலாம்.

*எல்லா குடும்பங்களுக்கும் பாங்குடைய நல்ல வீடு பெறும் உரிமை*

சொந்த வீட்டில் இருந்தவர்களை ஆசை காட்டி, அவர்களை மீளா கடன்காரர்களாக மாற்றி கடைசியில் குடியிருந்த வீட்டையும் பறித்துக் கொண்டு நடுத்தெருவில் விட்டுவிட்டன வால்ஸ்ட்ரீட்-ல் இயங்கும் பண்ணாடை நிதி நிறுவனங்கள். அரசாங்கமோ, வீடிழந்தவர்களுக்கு முறையான நிவாரணம் வழங்காமல் நிதி நிறுவனங்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து அள்ளிக் கொடுத்தது.

*முதுமை,உடல்நலம்,விபத்து,வேலையின்மை போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு பெறும் உரிமை*

உடல்நலம் சார்ந்த விடயங்களுக்கு அமெரிக்காவில் காப்பீடு இருந்தால் தான் சிகிச்சை பெற முடியும், ஒப்பீட்டளவில் பார்த்தால், நம் நாட்டை விட மருத்துவ செலவுகள் மிக அதிகம். ஒபாமா பதவியேற்ற போது அனைவருக்கும் அரசாங்க காப்பீடு வழங்குவதாக அறிவித்தார். ஆனால், காப்பீடு தரும் நிறுவனங்கள் வால்ஸ்ட்ரீட்-ல் இயங்கும் வரை முறையான காப்பீடு பெறுவது சாத்தியமில்லை. வால்மார்ட்-ல் பணிபுரிந்த ஒரு 28 வயது பெண் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிடுகிறார். அவரின் இறப்பை காரணம் காட்டி தனக்கு நட்டம் வருமென்று 10000 அமெரிக்க டாலர்கள் அந்த நிறுவனம், தொழிலாளியின் காப்பீடை பெருகிறது. அதாவது, தொழிலாளி தொடர்ந்து உழைத்தால் தனக்கு இவ்வளவு ஆதாயம் வரும், எனவே காப்பீடு பணம் தனக்கு வர வேண்டும் என்று அடாவடியாக பறிக்கிறது. வழிப்பறியை விட மோசமான செயல் இது. மற்றொன்று ராணுவ சேவை நிறுவனங்கள். இவர்கள், ராணுவ வீரர்களை ஒப்பந்த முறையில் அரசாங்கம் தேவைக்கு ஏற்ப விற்பவர்கள். இவர்களின் காப்பீடு பணத்தை கூட சம்பந்தப்பட்ட நிறுவனம் அவரின் மறைவிற்கு பின் பறித்துவிட்டது. இதில் உச்சம் தனது காப்பீடு உரிமை பத்திரத்தில் "Dead Peasant" என்று குறிப்பிடுகிறது. அதாவது காப்பீடு ஒப்பந்தத்தில் பயனாளர் பெயர் என தன் பெயரை போட்டுக்கொள்வது.

அடுத்தது வேலையின்மை, இதற்கு அவர்கள் கூறும் காரணம், வேலையிழப்பு இல்லை என தெரிந்தால் எந்த தொழிலாளியும் ஒழுங்காக வேலை செய்யமாட்டார்கள். ஆனால் ரூஸ்வெல்ட் சொன்னது, படித்துவிட்டு வேலையின்றி இருக்கும் பட்டதாரிகளுக்கும், உழைக்கும் மக்களுக்கும் வேலையின்மையை நீக்குவது.

*கல்வி பெறும் உரிமை*

இது பள்ளிக் கல்வியளவில் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டாலும், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள் மாணவர்களின் வாழ்க்கையை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்குகின்றன. ஒரு சிறுவனோ,சிறுமியோ குற்றச்செயல்களில் ஈடுபட்டால், சீர்திருத்தப்பள்ளியில் அதிக காலம் தண்டனை பெறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், இந்த வகையான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளுக்கும் சீர்திருத்தப்பள்ளிகளுக்கும் மறைமுக ஒப்பந்தம் உள்ளதே. மாணவர்கள் கடினமாக வேலை வாங்கப்படுவதும், குறைவான ஊதியத்தில் வேலைகள் நடப்பதும் இதற்கு காரணம்.
பட்டப் படிப்பு கல்வி கற்க ஒவ்வொரு சராசரி அமெரிக்க மாணவரும் கல்விக் கடனைத்தான் நம்பியுள்ளனர். உதாரணத்திற்கு விமான ஓட்டுனர் பயிற்சி பெறும் மாணவர்கள் கிட்டத்தட்ட 100,000 டாலர்கள் கடன் வாங்கி தன் படிப்பை முடிக்கின்றனர். ஆனால் கிடைக்கும் ஊதியம் கண்டிப்பாக இவ்வளவு கடனையும் கட்டி முடிக்க போதாது. எனவே அவர்கள் பகுதி நேர வேலைகளுக்கும், உணவிற்கு "Supplemental Nutrition Assistance Program (SNAP)" என்ற  திட்டத்தை நம்பியுள்ளனர்.இது கிட்டத்தட்ட நம் நாட்டு பொது வினியோக திட்டம் போன்றது.  கல்வி வணிகமயமாக்கப்பட்டதால், இப்போதெல்லம் அங்கு உயர் கல்வி கற்பவர் விகிதம் தொடர்ந்து குறைகிறது. எனவே நம் நாட்டில் இருந்து அறிவு இறக்குமதி அதிகரித்த வண்ணம் உள்ளது.

*மேற்குறிப்பிட்ட அனைத்தும் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளது. அது நாட்டு மக்களின், பாதுகாப்பு. இச்சட்டம் அடிப்படை வசதி, கவுரவமான வாழ்வு, உணவு மற்றும் சீரான உடல் நலத்துடன் கூடிய பாதுகாப்பை வலியுறுத்துவதாகும்*

இரண்டாம் உலகப்போரில் வென்ற அமெரிக்க இவற்றை பெறவில்லை. மாறாக, வீழ்த்தப்பட்ட ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் , கல்வி, விவசாயத்தில் முன்னேற்றம், முதியோர் ஓய்வூதியம், ஊதியத்துடன் கூடிய விடுமுறை(Paid Vacation)  இவை ஒவ்வொன்றையும் பெற்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இப்போது ஜெர்மனி ஒரு முக்கிய பொருளாதார சக்தியாக உள்ளது. இரண்டு  அணுகுண்டுகளை வாங்கிய போதும், ஜப்பான், முன்னனி ஏற்றுமதியாளராக உயர்ந்தது. இவையெல்லாம் எப்படி சாத்தியமாயிற்று?. போர் முடிந்ததும் ரூஸ்வெல்ட் நிர்வாகத்திலிருந்த அதிகாரிகள், போரில் தோற்ற நாடுகளை மறு உருவாக்கம் செய்வதற்கு அனுப்பப்பட்டனர். ஆனால் அமெரிக்கவோ போரில் மட்டுமே வென்றது.

இந்த உரிமைகள் எல்லாம் எப்பொழுது அமெரிக்கர்கள் பெறுவார்கள்?. கிட்டத்தட்ட தற்போதைய சூழ்நிலையில் இது சாத்தியம் இல்லாதது போல் தோன்றுகிறது. 


அப்படியே  புகழ்பெற்ற அமெரிக்க ஆவணப்பட இயக்குனர் மைக்கேல் மூர் அவர்களின் "Capitalism: A Love Story" படத்தையும் ஒரு முறை பார்த்துவிடுங்ள். இந்த இடுகையின் பல தகவல்கள் இப்படத்தின் மூலமாக  திரட்டியவையே.
2 comments :

 1. வணக்கம்

  மிக விரிவான அலசல் தொடருகிறேன்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரூபன்... :)

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete