Friday 1 August 2014

தமிழ்மணத்தின் டெம்ப்ளேட் பதிவர்கள்.

வணக்கம்.

வலைப்பூ திரட்டிகளில் பலராலும் பயன்படுத்தப்படும் தமிழ்மணம் சில மாதங்களாகவே ஒரு மாதிரியாகப் போய்க்கொண்டிருக்கிறது. தொடர்ந்து படிப்பவர்கள் இதை கவனித்திருக்கலாம். பதிவுகளை வகைப்படுத்தி தேடி படித்தாலும் இதே கதை தான். நன்கு அறியப்பட்ட பதிவர்களின் பதிவுகள் திரட்டிகள் இல்லாமலே பலராலும் படிக்கப்படும். ஆனால் புதிதாக எழுதுபவர்களுக்குத் தான் சிக்கல். பல மாதங்களாகவே "டெம்ப்ளேட்" பதிவர்களின் அலப்பறை இங்கே தாங்க முடியவில்லை.



இப்படிப்பட்ட பதிவர்களின் பதிவுகள் ஒரு புது வித அனுபவத்தைத் தருகின்றன. ஆனால் நல்ல அனுபவமாக இல்லை. சில மாதங்களுக்கு முன்பு "aanand.R"  மற்றும் "orange mittai" என இரண்டு பதிவர்கள் தமிழ்மணத்தின் ஒரு பக்கத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்தது போல் பதிவிடுவார்கள். நாம் தான் புத்திசாலி ஆயிற்றே, சில நாட்களுக்குப் பின் அவர்கள் என்ன தான் அடித்து பதிவிட்டாலும் அவர்களின் தளங்களை சீண்டிப் பார்ப்பதில்லை. உடனே வேறு ஒரு பெயரில் அவை இயங்கத்தொடங்கும். இவர்களிடம் உள்ள ஒரு திறமை?! தலைப்புகளை வைப்பது தான். பார்த்ததும் கவரக்கூடிய வகையில் தலைப்புகளை வைத்து படிப்பவர்களை ஈர்ப்பது. உள்ளே சென்றால் பல சமயம் தலைப்புக்கும், பதிவுக்கும் தொடர்பே இருக்காது. இதில் சிலர் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் அருகில் உள்ள விளம்பரங்களை சொடுக்கவும் என வெளிப்படையாகவே எழுதி வைத்துள்ளனர். அது அவர்கள் தளம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் .ஆனால் இது போன்ற வெங்காயங்களை இனம் காண்பது முக்கியம். தமிழ்மணத்தில் தரமுள்ள பதிவுகள் கிடைகாமால் தேட விட்டதற்கு இவர்களும் ஒரு காரணம். உண்மையில் பல நல்ல பதிவுகள் வருகின்றன. ஆனால் இவர்கள் செய்யும் இந்த காலித்தனத்தால் அவை பல பக்கங்கள் அடித்து செல்லப்படுகின்றன, இப்படிப்பட்ட பதிவுகள் பெரும்பாலும் முதல் பக்கத்தில் சாதாரண பதிவுகளை விட நீண்ட நேரம் நீடிக்கின்றன. இதில் என்ன உள்குத்து இருக்கிறதோ.

இதுவரை பார்த்தவரையில் இவர்களின் அவதாரங்கள் "aanand.R","orange mittai","ramak", "sekar s", "i,kirukkan" இப்படி நீண்டு கொண்டே போகிறது. தமிழ்மணத்தில் அதிகபட்சமாக ஒரு பதிவு எவ்வளவு நேரத்திற்கு முதல் பக்கத்தில் நீடிக்கிறதோ அதைப் பொருத்தே, அதிகம் பார்வையிடப்பட்ட பட்டியலில் வரும். இவர்களின் அளவு கடந்த பதிவிடும் பொருப்பினால் பல நல்ல பதிவர்களின் பதிவுகள் இரண்டு, மூன்று பக்கங்கள் பின்னோக்கி சென்று விடுகின்றன. பதிவினைப் படிப்பவர்களும் தரமான பதிவுகளை படிக்க பல பக்கங்கள் தேடியோ, வகைப்படுத்தி பார்க்க வேண்டியிருக்கிறது. இவர்கள் தங்களின் குறிச்சொற்களில் கூடுமானவரையில் அனைத்து வகையான குறிச்சொல்லையும் கொடுப்பதால் வகைப்படுத்தி பார்த்தாலும் முதல் இரண்டு பக்கங்கள் இந்த பதிவுகளே வருகின்றன.

எனவே இப்படிப்பட்ட தளங்களுக்கு செல்லாமல் இருப்பதே இவர்களை ஓரம் கட்ட சிறிது உதவும். வேறு பெயரில் இயங்கும்போது தெரியாமல் உள்ளே சென்றாலும், இந்த வகை தளங்கள் விளம்பரங்கள் நிறைந்து இருப்பதால் எளிதில் இனம் காணலாம். சில நாட்களுக்கு பின் தலைப்பையும் பதிவர் பெயரையும் பார்த்ததும் கண்டிபிடிக்கக் கூடிய  அளவிற்கு தேர்ச்சி வந்துவிடும். மறுபடியும் தமிழ் பதிவுலகம் தரம் உயரவேண்டும்.

13 comments :

  1. சுத்தமான வியாபார நோக்கில் வருகிறார்கள் இவர்கள். இந்தப் பிரச்சினை சமீப காலமாகத்தான் இருக்கிறது. தெளிவாக எழுதி இருக்கீங்க, கிருஷ்ணா. தமிழ்மணத்திற்கு இல்லாத பொறுப்புணர்வு உங்களுக்காவது இருக்கிறதே என்கிற மன ஆறுதல்..தமிழ்மண நிர்வாகிகள் இவர்களுடைய 10 பதிவுகள் வாசித்தவுடன் இவர்களை தடை செய்தால் என்ன? என்று தோன்றுகிறது. தமிழ்மணம் ஒரு போதிலும் இவர்களை தடைப்படுத்துவதில் இருக்கும் டெக்னிக்கல் பிரச்சினைகளை (அப்படி எதுவும் இருந்தால்) யாருக்கும் தெளிவு படுத்துவது கெடையாது. நம்ம வேலை வெட்டி இல்லாதவனுகபோல இப்படி ந்ம்ம மன ஆறுதலுக்காக சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதான். இந்தக் குப்பைப்பதிவர்கள் "ஆட்சி" தமிழ்மணத்தில் தொடரும்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க வருண்.

      இவர்கள் ஆட்சி தொடரும் என்பது சில மாதங்களாகவே தெளிவாக தெரிகின்றது. இப்படிப்பட்ட பதிவர்கள் எண்ணிக்கை குறையாது அதிகரித்திருப்பதே இதற்கு சான்று.

      Delete
  2. வணக்கம்

    உங்களின் ஆதங்கம் போலதான் என்னுடைய ஆதங்கம் கூட.. எல்லாம்வியாபார நோக்கம்....
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
      கவிதைப் போட்டி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

      Delete
  3. //இப்படிப்பட்ட பதிவுகள் பெரும்பாலும் முதல் பக்கத்தில் சாதாரண பதிவுகளை விட நீண்ட நேரம் நீடிக்கின்றன. இதில் என்ன உள்குத்து இருக்கிறதோ//

    இருக்கிறது என்றுதான் நானும் நினைக்கிறேன்.

    நன்றி கிருஷ்ணா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நம்பி.

      பணம் சம்பாதிப்பதற்கு பல வழிகள். இதுவும் ஒரு வழி. தமிழ்மணம் முழுவதும் கட்டண சேவையானாலும் ஆகலாம். :(

      Delete
  4. உள்குத்து.....உள்குத்து ....அது என்னான்னே தெரியல...அப்படின்னா என்ன...?

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு தெரியாதா...
      சும்மா காமெடி பண்ணாதீங்க

      Delete
  5. நானும் பார்த்தேன்! தமிழ் மணம் முன்பு போல இப்போது செயல்படுவதில்லையோ என்று தோன்றுகிறது!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கேள்வி சரிதான்

      செயல்படுவதில்லையோ?

      Delete
  6. இவர்களின் தளங்களில் முழுவதும் விளம்பரம், அதனுடன் FLOATING BOX களும் வருகின்றன. சில சமயம் முழு பக்கமும் நொடியில் கருப்பாகி ஒரு விளம்பரம் மட்டும் தெரியும் உள்ளே போகவே முடியாது.

    தமிழ்மணத்தில் புதியவர்களை அனுமதிப்பதில்லை என்று புலம்புகிறார்கள்,ஆனால் இவர்களைப் போன்றவர்கள் எப்படி புற்றீசல்களாக கிளம்பி வருகிறார்கள், என்றே புரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை இதற்காக தான் புதியவர்களை அனுமதிப்பதில்லை போலிருக்கிறது ...

      floating box மிகப்பெரிய மொள்ளமாரித்தனம்

      Delete
  7. இவர்கள் பெரும்பாலும் காப்பி பேஸ்ட் இணையதளங்கள்...

    ReplyDelete