Sunday 15 June 2014

வலைப்பூக்களில் இருந்து தகவல்களைத் திருடுவது எப்படி?

வணக்கம்!!!

பண்ணாட்டு நிறுவனங்க்கள் பல தகவல் மேலாண்மை மென்பொருட்களை பயன்படுத்தினாலும், சாதாரண பயனாளர்களின் தகவல் மேலாண்மைக்கு பெரும் உதவியாக இருப்பவை வலைப்பூக்கள்.இவற்றை பலதரப்பட்ட தகவல்களை சேமிக்க பயன்பதுத்தும் போதும் இதனை வடிவமைத்த நிறுவனங்கள் முறையான பாதுகாப்பு மற்றும் காப்புரிமை பற்றி பயனாளர்களுக்கு சுலபமாக தெரியும் அளவிற்கு தகவல்களை தெரிவிப்பதில்லை. உதாரணமாக, "Blogger" சேவையை எடுத்துக்க் கொண்டால் ஒவ்வொரு Blogger வலைப்பூவும் அதன் தனிப்பட்ட காப்புரிமையுடனே வருகிறது. ஆனால் தகவல் திருட்டு நடந்துகொண்டு தான் உள்ளது. எனவே பயனாளர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் வலைப்பூவில் "Copy/paste" செய்யும் விருப்பத்தேர்வை கூட முடக்கிவிடுகிறார்கள்.

சரி, நேரிடையாக விடயத்திற்கு வருகிறேன். இப்படிப்பட்ட வலைப்பூக்களில் உள்ள தகவல்களை எப்படி "Copy/Paste" செய்வது. மக்களே இதுவும் ஒரு திருட்டு தான், அறிவுத் திருட்டு.



பல தமிழ் வலைப்பதிவாளர்கள் இப்படிப்பட்ட அமைப்புகளை தங்கள் வலைப்பூவில் செய்துவைத்துள்ளனர். இந்த அமைப்புகள் "CSS" மற்றும் "Javascript" என்ற நிரல்களின் துணை கொண்டு செய்யப்படுகின்றன.


 style='-moz-user-select: none; -webkit-user-select: none; -ms-user-select:none; user-select:none;'
 unselectable='on'
 onselectstart='return false;'
 onmousedown='return false;'>
document.onselectstart = new Function('return false');
function dMDown(e) { return false; }
function dOClick() { return true; }
document.onmousedown = dMDown;
document.onclick = dOClick;


மேலே உள்ள நிரல்கள், "CSS" மற்றும் "Javscript"-ல் எழுதப்பட்டது, இது வலைப்பூவில் "select copy/paste" செய்யும் வசதியை முடக்கிவிடுகிறது.அப்படியே "right click" செய்யும் வசதியும் முடக்கிவிட்டல் பிறகு யாரும் அதில் உள்ள தகவல்களை "select/copy paste" செய்ய முடியாது என பலரும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட வலைப்பக்கங்களை திருடுவது மிக சுலபம்.

இதில் பச்சையில் உள்ள நிரல், "Javascript"-ல் எழுதப்பட்டவை. எனவே உங்கள் இணைய உலவியில் "Javascript" இயங்கிக்கொண்டிருந்தால் மட்டுமே இவை வேலை செய்யும். அதை நிறுத்திவிட்டால் இந்த அமைப்பு வேலை செய்யாது. அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும்.? ஆம், முதலில் "Javascript"-ஐ நிறுத்த வேண்டும்.

நீங்கள் "Mozilla Firefox" உலவி பயன்படுத்துவராக இருந்தால், இந்த வழியை பயன்படுத்துங்கள்.
வலைப்பக்கததை திறந்து, முழு பக்கமும் ஏற்றப்படும் வரை காத்திருக்கவும். இப்பொழுது "Tools -> Inspector" -கு செல்லவும். பின்னர், இடது மூலையில் உள்ள "Settings" பொத்தானை அழுத்தவும், இப்பொழுது வலதுபுறம் உள்ள "change dev tools theme" கீழே "Disable javascript" என்பதை "tick" செய்யுங்கள். வலைப்பக்கத்தில் உள்ள அனைத்தையும் நீங்கள் இப்பொழுது "select" அல்லது "copy paste" செய்யலாம்.

"Chrome" உலவியில், வலது பக்க மேல் மூலையில் உள்ள "wrench" பொத்தானை அழுத்தி, "settings"-ல் "show advanced settings" மெனுவில் "content settings" பக்கத்தில் "Do not allow any site to run JavaScript" என்பதை "tick" செய்யவும். அவ்வளவுதான் முடிந்தது.

மற்றொரு முறை, குறிப்பீட வலைப்பக்கத்தை "print"  கொடுத்து "Print Dialog box"-ல் நீங்கள் "select copy/paste" செய்து கொள்ளமுடியும்.

இன்னொரு சுலபமான வழி குறிப்பிட்ட பக்கத்தை "File -> Save option" மூலமாக தரவிறக்கினால், நீங்கள் அதில் உள்ள தகவல்களை "copy/paste" செய்து பயன்படுத்தலாம். எனவே வலைப்பூவில் பயன்படுத்தும் இந்த முறைகள் முழுக்க பாதுகாப்பு அளித்திடாது.
இதை தடுக்க முடியாவிட்டாலும் , நம் வலைப்பக்கத்தில் காப்புரிமை அறிவிப்பை வலைப்பூவின் இறுதியில் வைக்கலாம், மற்றும் காப்புரிமை தொடர்பான இலவச உரிமங்களை வாங்கி இணைத்துக்கொள்வதும் இத்தகைய திருட்டுகளில் இருந்து சட்ட ரீதியாக பயனளிக்கும்.

இரண்டு பிரபல வலைப்பதிவர்கள் இந்த முறைகளைப் பயன்படுத்தி "copy/paste" செய்யும் வசதிகளை முடக்கி வைத்துள்ளனர். "Javascript" இல்லாமலும் "Print Dialog"-லும் அவர்களின் தளத்தின் தகவல்களை சுலபமாக தரவிரக்க முடிந்தது.(பதிவர்கள் யார் என்று தெரிகிறதா?... நான் சொல்லவதற்கில்லை :-) ).

இறுதியாக, ஒரு விளையாட்டு. கணினிகளின் தகவல்களை திருடுபவர்களை "Hackers" என்று அழைக்கிறார்கள். ஆனால் உண்மையில் "Hacker" என்றால் கணிணி அறிவு மிக்கவர்கள், அவர்கள் மூலமாகத் தான் இன்று பல பாதுகாப்பு அம்சங்களை இணையம் பெற்றுள்ளது. கீழே உள்ள இணைப்பில் ஒரு சுலபமான "Hacking" விளையாட்டு கொடுத்துள்ளேன்.
விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்க கூடிய இந்த விளையாட்டில், நீங்கள் ஒரு "Hacker"-ராக உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்துவிட்டு நீங்கள் வேலை செய்த தடயத்தையும் துடைத்துவிட்டு வர வேண்டும். மாட்டிக்கொண்டால் அதோ கதிதான்!!!.

ஹாக்கிங் விளையாட்டை தரவிரக்க

இந்த விளையாட்டை ஆடுவதற்கு விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களின் அடிப்படை கட்டளைகள் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.


1 comment :