Sunday 29 June 2014

டிஷ்யூ பேப்பர்-ல் கையை துடைப்பவரா நீங்கள்?

வணக்கம்.

நீங்கள் அதிக அளவில் காகிதம் பயன்படுத்துபவரா.. அப்படியென்றால் உங்களுக்கு சமூகம்,சுற்றுச்சூழல் குறித்த அக்கரை குறைந்துள்ளது எனலாம். பெரும்பாலான உணவகங்களிலும், வணிக வளாகங்களிலும் டிஷ்யூ பேப்பர் எனப்படும் திசுத்தாள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. உலகில் காகித பயன்பாட்டுக்கு வெட்டப்படும் மரங்களில் கிட்டத்தட்ட 25 சதவீதம் இந்த திசுத்தாள் எடுத்துக்கொள்கிறது. இதை உருவாககவும் சாதாரண தாளை விட அதிக அளவில் தண்ணீர் தேவை. ஒரு பக்கம் நிலத்தடி நீரை உறிஞ்சி கொள்ளையடிக்கும் பண்ணாட்டு நிறுவனங்கள், நம் நாட்டின் மலைப் பாங்கான இடங்களில் மரங்களை வெட்டி, கிடைக்கும் சொற்ப தண்ணீரையும் இப்படி வேறு வழியில் திருப்பிவிடுகின்றனர். இதுவரை நீங்கள் எவ்வளவு திசுத்தாளை பயன்படுத்தியிருப்பீர்கள். 5 வருடம் தினமும் திசுத்தாள் பயன்படுத்தும் ஒரு மனிதன் சாராசரியாக 10 மரங்களை அழித்துள்ளனர். இந்த திசுத்தாள் பயன்பாடடில் முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா. அங்கு இதற்காகவே என மரங்களை வளர்த்தும் வருகின்றனர். ஆனால் நம் தாய்த்திரு(ட்டு) நாட்டில் இதை எதிர்பார்கக முடியுமா. பெயருக்காக மரங்களை வளர்த்துவிட்டு காடுகளில் மரங்களை வெட்டுவதே இங்கு நடைமுறை. இப்படிப்பட்ட நாட்டில் இருந்து தான் தனியாளாக சுமார் 30 ஆண்டுகளாக 1360 ஹெக்டேர் வனத்தை வளர்த்து பராமரித்து வருகிறார் ஒருவர்.

ஜதேவ் மொலாய் பயங். அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள "மிஷிங்க்" என்ப்படும் மலைவாசி இனத்தை சேர்ந்தவர். மொலாய் 16 வயது சிறுவனாக இருந்த போது அஸ்ஸாமில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது இறந்து போன பாம்புகள் நீரில் அடித்துவரப்பட்டு கரை ஒதுங்கியதைப் பார்த்தபோது, அவை ஏற்கனவே இறந்து கருகிய நிலையில் இருப்பது தெரிந்தது. காடுகளில் மரங்கள் இன்றி சூரிய வெப்பம் தாங்காமல் அவை இறந்தது கண்டு நாளெல்லாம் அழுதிருக்கிறார். உடனே வனத்துறையிடம் போய் இவற்றை கூறி உரிய நடவடிக்கை எடுக்க சொன்னபோது, அவர்கள் மொலாயை பரிகாசம் செய்ததுடன் அந்த இடத்தில் எதுவும் வளராது, வேண்டுமென்றால் மூங்கில் மரங்களை நீயே நட்டுப் பார் என கூறி திருப்பியனுப்பிவிட்டனர்.
வீடுவந்த மொலாய் தனியாளாக மூங்கில் மரங்களை வளர்க்கத் தொடங்கினார்,வனத்துறையிடமோ, அல்லது சக கிராம மக்களிடமிருந்தோ எந்த உதவியும் கிடைக்கவில்லை. காலையில் தினமும் எழுந்ததும் மர விதைகளை நட்டு வைப்பதும் அவற்றுக்கு தண்ணீர் ஊற்றி வளர்ப்பதும் என பல வருடங்கள் தனியாக காடுகளில் பணியாற்றியுள்ளார். மூங்கில் காடு அடர்த்தியாக வளர்ந்ததும் பலதரப்பட்ட செடி , மர வகைகளை தொடர்ந்து பயிரிட்டு வளர்த்திருக்கிறார். முதலில் அவை சரியாக வளரவில்லை. ஒவ்வொரு மரத்தையும் பார்த்தபோது அவைகளின் வேர்கள் சரியாக வளர்ச்சியடையாதை கண்டுள்ளார். மண் வளம் இல்லாததே இதற்கு காரணம் என அறிந்ததும், அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று ஒருவகையான சிவப்பு எறும்புகளை கொண்டுவந்து தனது வளர்ந்துவரும் காட்டில் வளரவிட்டார். இவை மண்ணை தொடர்ந்து வெளியேற்றி அதன் வரண்ட தன்மையை மாற்றக்கூடியவை. பல வருட முயற்சிக்கு பிறகு மண் வளம் பெறத் தொடங்கியதும் மரங்கள் வளர ஆரம்பித்தன. 30 வருடங்களுக்கு பிறகு இப்போது 1360 ஹெக்டேர் அளவில் பரந்து விரிந்துள்ளது.


பலதரப்பட்ட மரங்கள் இருப்பதால், பல்வேறு வகையான உயிரியனங்களும் பல்கிப்பெருகியுள்ளன. மிகவும் அருகி வரும் நம் நாட்டின் ஓரிட வாழ்வியான ஒற்றைக் கொம்பு காண்டாமிருகமும் இவரின் வனத்தில் வளர்ந்துவருகிறது. வங்காளப் புலி, மானினங்கள், புள்ளினங்களும் வலைசை போகும் பல வகையான கழுகுகள், அஸ்ஸாமின் வெள்ளைக் கழுத்து கழுகும் மொலாய் வனத்தில் உள்ளது.



முதலில் இந்த வனத்தில் இருத்து பருந்துகளும், காண்டாமிருகமும்  விளைநிலங்களை பாழ்படுத்தியதால் கிராம மக்கள் அவற்றை கண்ணி மற்றும் மின்சாரம் வைத்து கொல்ல முயற்சித்தபோதும், மொலாய் அவர்களை எதிர்த்து வந்ததுடன் வனத்தை பல மடங்கு விரிவாக்கம் செய்துள்ளார்.இவ்வளவு நடந்த போதும் 2008-ம் ஆண்டு வரை வனத்துறையினருக்கு இப்படி ஒரு வனம் இருப்பதே தெரியவில்லை. பின்னர் தான் மொலாய் சிறிது சிறிதாக கவனம் பெற ஆரம்பித்தார், அப்படியே அவரின் வனமும். 16 வயதில் இருந்து 45 வருடங்கள் தன் இளைமைக் காலம் முழுவதும் இந்த காட்டினை உருவாக்குவதற்காகவே செலவிட்டதற்காக இந்த வனத்திற்கு "மொலாய் வனம்" அவர் பெயரே சூட்டப்படுள்ளது.

மொலாய் தன் காட்டின் ஓரத்தில் உள்ள ஒரு சிறிய குடிலில் தன் மனைவி மற்றும் ஒரு மகள், இரண்டு மகன்களுடன் வசித்துவருகிறார். எருமை வளர்ப்பும், பால் வியாபாரமும் செய்து வருகிறார்.இதன் பின்னர் கூட இந்திய அரசு இச்செய்திகளை தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வருகிறது. ஆனால் மொலாய் இதற்கெல்லாம் எந்த பிரதிபலனும் பாராமல் தொடர்ந்து தன் வனத்தை பாதுகாத்து வருகிறார்.

இனிமேல் ஒவ்வொரு முறை திசுத்தாள் பயன்படுத்தும்போதும் மொலாய் நினைவில் ஒரு மரத்தையேனும் நட்டுவைக்க முயற்சிப்போம்.

11 comments :

  1. அருமையான விழ்ப்புணர்வுப் பதிவு
    நிச்சயம் இப்பதிவினைப் படிப்பவர்கள்
    அடுத்தமுறை திசுபேப்பரைப் பயன்படுத்த
    யோசிக்கவே செய்வார்கள்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Replies
    1. வாங்க ரமணி ஐயா...
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
      //நிச்சயம் இப்பதிவினைப் படிப்பவர்கள்
      அடுத்தமுறை திசுபேப்பரைப் பயன்படுத்த
      யோசிக்கவே செய்வார்கள்//
      இது நடந்தால் மிக்க மகிழ்ச்சி....

      Delete
  3. இதை முகநூலில் பகிர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கவிப்ரியன்

      கருத்துக்கும், பகிர்வுக்கும் நன்றி...

      Delete
  4. சிறப்பான விழிப்புணர்வு பதிவு! நன்றி!

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  6. வணக்கம்
    காலங்கள் மாற மாற மனிதர்களும் மாறிக்கொண்டுதான் இருப்பார்கள்.. ஒவ்வொருவரும் யோசித்தால் சரிதான். நல்ல விழிப்புணர்வுப்பதிவு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரூபன்.
      வருகைக்கு நன்றி
      மாற்றங்கள் நன்மை விளைவிக்கும் வரை அவை வரவேற்கப்பட வேண்டும். யோசிப்பார்கள் என நம்புவோம்.

      Delete
  7. விழ்ப்புணர்வுப் பதிவு பகிர்வுக்கு பாராட்டுக்கள்... இதை எனது பேஸ்புக்கில் பதிவு செய்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி :-)

      Delete